பேச்சு:செங்கால் நாரை
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic சங்க இலக்கியத்தில் செங்கால் நாரை
தமிழன் செங்கால் நாரையை வான் வழி தொடர்புக்கு பயன் படுத்தினான் என்பதை இவ் உலகம் தெரியபடுத்த மறுக்கிறது... −முன்நிற்கும் கருத்து 49.206.127.85 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சங்க இலக்கியத்தில் செங்கால் நாரை
தொகு@பரிதிமதி and PARITHIMATHI: நாராய் நாராய் செங்கால் நாராய் என்றுவரும் நாரைவிடுதூதுப் பாடலில் குறிப்பிட்டுள்ளது இந்தப்பறவையா? பனங்கிழங்கையொத்த அலகுகள் என்ற விவரிப்பு மஞ்சள்மூக்கு நாரையுடன் கூடுதலாகப் பொருந்துகிறதே? -- சுந்தர் \பேச்சு 09:29, 23 சனவரி 2022 (UTC)
- @Sundar: சூழலியல் எழுத்தாளர்களில் முன்னோடிகளான மா. கிருஷ்ணனும் தியோடர் பாஸ்கரனும் தம் குறிப்புகளில் தெளிவாகத் தந்துள்ள பறவைப் பெயர்கள்: (தரவுகள் உடன் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இணைக்கின்றேன்)
- செங்கால் நாரை = White stork; பூநாரை = Flamingo
- மஞ்சள்மூக்கு நாரை (Painted stork) ஓர் உள்ளூர்ப் பறவை; உள்ளூரிலேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் இயல்புடையது; இதுவும் கூட ஒரு வகையில் வலசை போதலே. இருப்பினும், அயல் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வலசை வரும் இயல்புடைய பறவை White stork மட்டுமே. சத்திமுத்தப் புலவரின் பாடலில் வலசை போகும் தன்மை முதன்மையாகத் தெரிவதால், அப்பறவை (அதாவது, செங்கால் நாரை) White stork என்றே புரிகிறது. -PARITHIMATHI (பேச்சு) 09:59, 23 சனவரி 2022 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி, பரிதிமதி. இது ஒருவேளை தமிழர் பகுதிகளில் பரவலாக வலசைவந்த பறவையோ என்னவோ, இப்போது மிக அரிதென்று அறிகிறேன். தவிர பனங்கிழங்கு பிளந்த தோற்றம் சட்டென மஞ்சள்மூக்கு நாரையையே எனக்கு நினைவூட்டியது. இருப்பினும் துறை அறிஞர்களின் குறிப்புகளில் நீங்கள் கண்டுள்ளதால் அதுவே சரியாக இருக்கக்கூடும். -- சுந்தர் \பேச்சு 11:08, 23 சனவரி 2022 (UTC) சுந்தர் \பேச்சு 11:10, 23 சனவரி 2022 (UTC)