பேச்சு:சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: சோடாபாட்டில் கல்லூரி: {{{College}}} |
தாது ஆண்டுப்பஞ்சம்
தொகுநல்ல கட்டுரை, சோடா பாட்டில். தாது ஆண்டுப்பஞ்சம் என்பது இந்தப்பஞ்சத்தைக் குறிப்பதா? அப்படியென்றால், அந்நிகழ்வைப் பதிவு செய்யும் நாட்டார் பாடல்களைக் கண்டுள்ளேன். சேர்க்க முயல்வேன். -- சுந்தர் \பேச்சு 05:41, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
- இந்தப்பஞ்சம் தான் சுந்தர் (ஆண்டுக் கணக்கும் சரியாக வருகிறது). பஞ்சத்தைப் பற்றி [நாட்டார் பாடல்கள் இருக்கின்றன என்பது வியப்பாக உள்ளது! பஞ்சத்திலும் பாடெழுதும் பழக்கம் இருந்த்துள்ளதே!. (இப்பஞ்சத்தில் என் மூதாதையர் பலர் மடிந்து ஊர் ஊராகப் போய் பிச்சையெடுத்தார்கள் என்று செவி வழி செய்தி.)--சோடாபாட்டில் 06:35, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
- ”இலக்கியத்தில்” என்ற புதிய பகுதியை சேர்த்துள்ளேன். ஒரு பாடலையும் இணைத்துள்ளே. கும்மிகள் செ. ராசு எழுதிய ”பஞ்சக் கும்மிகள்” என்னும் புத்தகத்தில் கிடைப்பதாக தெரிகிறது. --சோடாபாட்டில் 07:08, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
- பெரும் நிகழ்வுகள் பெரும்பாலும் நாட்டார் பாடல்களில் பதிவாகியிருக்கும். வானமாமலை அவர்களின் நூலை எங்கு வைத்தேன் எனத் தெரியவில்லை, கிடைத்ததும் பதிகிறேன். பஞ்ச நேரத்தில் களையின்றி நடக்கும் ஒரு திருமணத்தைப் படமாக்கிய பாடல் அழுத்தமாக இருந்தது. உங்கள் வீட்டு முன்னோர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர் என்பது வருந்தத்தக்க செய்தி. -- சுந்தர் \பேச்சு 16:18, 17 ஆகஸ்ட் 2010 (UTC)