பேச்சு:செப்டம்பர்
செட்டம்பர் என்பதே தமிழ் வழக்கிற்கு பொருந்துமென் நினைக்கிறேன். இத்தாலிய மொழியில் settembre என்றே அழைக்கின்றனர். செப்பிட்டெம்பர் என்றோ, செப்புதம்பர் என்றோ எழுதினால் எழுத்து தான் அதிகரிக்கும். சொல் ஒலிப்பு நெருக்கம் இருக்காது. பொருந்தாத ஒற்றை அடுத்த எழுத்திற்கு மாற்றினால் எழுத்து நெருக்கம், ஒலி நெருக்கம் இரண்டும் இருக்கும். அட்டோபர், செட்டெம்பர் என்று எழுதினால் நன்றாக இருக்கும். மாற்ற வலியுறுத்தவில்லை. இது ஒரு நினைவூட்டலுக்காவே. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:42, 31 திசம்பர் 2012 (UTC)
இத்தாலிய வழக்கிற்கு நெருக்கமாயிருப்பதாகப் பார்த்தாலும் இது செட்டெம்பர் என்றன்றோ இருக்க வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 13:18, 31 திசம்பர் 2012 (UTC)
செப்டம்பர்
தொகுSeptember (ஆங்கிலம்) மாதப் பெயரை இலக்கணப் பிழையின்றி எவ்வாறு எழுதுவது
செப்டம்பர் என்று எழுதுவது தவறு ஏன் எனில் பகார மெய் முன் பகார உயிர்மெய்யே வரும்
ஒலிப்பு அடிப்படையில் பார்த்தால் September என்ற சொல்லில் பகார ஒலி குன்றியும் டகார ஒலி வலிந்தும் ஒலிக்கப் படுகிறது
ஆக செட்டம்பர் என்று மாற்றம் செய்யலாம் என்று பரிந்துரைக்கிறேன்
இந்த மாற்றம் புதிது அல்ல ஏற்கனவே ஐயா சீனி நைனா முகமது (மலேசியா) பயன்படுத்தியது
நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 14:45, 20 செப்டம்பர் 2022 (UTC)