பேச்சு:செயங்கொண்ட சோழ கொங்காள்வான்

இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள்கள் சில வலைப்பூக்களாக உள்ளன. சத்திரிய சிகாமணி கொங்காள்வான் - இதற்கான மேற்கோள் விக்கிமூலத்திலிருந்து “சோழர் வரலாறு-பக்கம் 186” தரப்பட்டுள்ளது:

\\(இப்படையெடுப்பில் தலைமை பூண்ட தானைத்தலைவன் இராசேந்திரன் போலும்! (Ep. Carnataka. Vol. 8, 125.) இப்படையெடுப்பின்போது குடமலை நாட்டை ஆண்டவன் மீனிசா என்பவன். போர் நடந்த இடம் பனசோகே என்பது. மீனிசா, போரில் திறம்பட நடந்துகொண்டதால், அவன் வீரத்தைப் பாராட்டிய இராசராசன், அவனுக்குச் சத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் சூட்டி, மாளவி என்னும் ஊரை நன்கொடையாகக் கொடுத்தான்.\\
சத்திரிய சிகாமணி கொங்காள்வான் குடமலை நாட்டை ஆண்டவன் என மேற்கோளில் உள்ளது. கட்டுரை குறிப்பிடும் மன்னனோ வடகரை நாட்டை ஆண்டவன் என்றுள்ளது. ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. கட்டுரையில் தரப்பட்டுள்ள கல்வெட்டுக்கும் சரியான ஆதாரம் இல்லை. இணையத் தேடலில் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

@Kanags:, @AntanO: இக்கட்டுரையைக் கவனிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:12, 5 சனவரி 2017 (UTC)Reply

அந்த மேற்கோளை இங்கு தவறுதலாக புகுத்திவிட்டேன் ஆனால் அந்த கள்வெட்டு சான்று ஈரோடு மாவட்ட அருங்காட்சியத்தில் உள்ளது --PrabakaranSubbarayan 05:11, 6 சனவரி 2017 (UTC)
Return to "செயங்கொண்ட சோழ கொங்காள்வான்" page.