பேச்சு:செருகளத்தூர் சாமா

தலைப்பை செருகளத்தூர் சாமா என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:31, 23 ஆகத்து 2014 (UTC)Reply

ஆங்கிலத்தில் செருகுளத்தூர் சாமா என்று தரப்பட்டிருக்கிறது. சரி பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 05:42, 23 ஆகத்து 2014 (UTC)Reply
செரு என்ற சொல்லுக்கு போர் என்ற பொருள் உண்டு. செரு வென்ற பாண்டியன் (?) என்று பள்ளிப் பாடத்தில் படித்தது நினைவிருக்கிறதா? ;) செருக்களம் என்பது போர்க்களத்தையே குறிக்கும். தமிழகத்தில் செருக்களத்தூர் என்ற ஊர் 612604 என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்டுள்ளது. செருகுளத்தூர் என்ற ஊர் இல்லை. பெயர் மருவவும் இல்லை. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், செருக்களத்தூர் சாமா என்ற பெயரே சரியானது. ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் செருக்குளத்தூர் என்ற பெயர் இருக்க வாய்ப்பு குறைவே. தேடிப் பார்க்கிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:59, 23 ஆகத்து 2014 (UTC)Reply
செருக்களத்தூர் சாமா என்ற தற்போதைய தலைப்பே சரியானது. எல்லா பிரபல இதழ்களிலும், இணையதளங்களிலும் இந்த பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:02, 23 ஆகத்து 2014 (UTC)Reply

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:31, 23 ஆகத்து 2014 (UTC)Reply

கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள தி இந்து நாளிதழின் ராண்டார் கை கட்டுரையில் சாமா பிறந்த ஊர் தஞ்சாவூர் கிராமமான சிறுகளத்தூர் என்றும், அவ்வூர் நாளடைவில் செருகளத்தூர் என மருவியதாகவும் குறிப்பிட்டுகிறார்.--Booradleyp1 (பேச்சு) 14:30, 23 ஆகத்து 2014 (UTC)Reply

செருகளத்தூர் என்பதே ஊரின் பெயராகும்.

இந்திய தேர்தல் ஆணைய உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தல், மூன்று வெவ்வேறு முக்கிய நாளேடுகள் ஆகியவற்றிலிருந்து மேலே மேற்கோள் கொடுத்துள்ளேன். --UKSharma3 உரையாடல் 17:22, 28 ஏப்ரல் 2020 (UTC)

என்னிடம் உள்ள 1951 பெப். குண்டூசி இதழில் வெளிவந்த சாமாவின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரையில் சிறுகளத்தூர் என்றுதான் தரப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 08:11, 28 சூன் 2021 (UTC)Reply
Return to "செருகளத்தூர் சாமா" page.