பேச்சு:சேனைத்தலைவர்
திருவண்ணாமலை பரணி தீபம் கட்டளை
தொகுதிருவண்ணாமலை பரணி தீப கட்டளை என்பது கைலாய வாகன திருவிழாவும் , திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று அதிகாலை நான்கு மணிக்கு அபிஷேக ஆராதனைகள் முடித்து பஞ்ச மூர்த்திகளுக்கு காட்டப்படும் அகன்ற அகண்டத்தில் எரியும் பரணி தீபம் ஆகும் , பரணி தீபம் மலை மேல் ஏற்றப்படும் மகா தீபத்துக்கு முன்னோடி . தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சேனைத்தலைவர் சமுதாய பெருமக்கள் ஆண்டு தோறும் பரணி தீப கட்டளை வரிசை கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள். இதற்க்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சேனைத்தலைவர் மடங்கள் ஒவ்வொரு வருடமும் வரி அளித்து கொண்டிருக்கிறது , இதர சேனைத்தலைவர் இன மக்களும் தங்களால் இயன்றதை செய்து கொண்டிருக்கிறார்கள் . ஹொய்சள ஆட்சியாண்டு வீர நரசிம்மன் மன்னவன் காலத்தில் நம் குல சேனைத்தலைவரான மாவீரன் என்பான் திருவண்ணாமலையில் நடந்த போரில் என்பது வயதான மன்னரை காப்பதற்காக போராடி வீரமரணம் எய்தினான் .ஒரு லட்சம் காலாட்படையும் , ஐநூறு யானைப்படையும் எதிர்த்து நின்ற போர்க்களத்தில் என்பது வயதான வீர நரசிம்ம மன்னரை கொல்ல பல சூழ்ச்சிகள் நிகழ்ந்தன . வீர நரசிம்மரின் படை வீரர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர்.இராஜபக்தியின் சிகரமாக போராடி , வீர மரணம் எய்திய நம் குல மாவீரன் என்பவருக்கு நன்றி செலுத்துவதற்காக இரண்டாம் வீர நரசிம்மன் என்ற போசள மன்னர் பிற்காலத்தில் விஜயநகரம் மன்னன் மான்யமும் திருக்கோவில்களில் பரணி தீபம் ஏற்றும் உரிமையை சிறப்பாக நடத்தி வரும்படி அளிக்கப்பட்டது . இம்மாவீரன் நிகழ்ச்சி ஹொய்சள மன்னர் வீர நரசிம்மனுக்கும் . மாலிக்காபூருக்கும் நடந்தது என திருவண்ணாமலை திருமட அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது .மாலிக்கபூர் ஆண்டு கி.பி .1297 இப்பட்டயம் தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் உள்ளது .
பரணி தீபம் கட்டளை என்ற பெயரில் கடந்த 700 வருடங்களாக திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் உரிமையை சேனைத்தலைவர் இனம் ஏற்றுள்ளது .
திருத்தம் செய்யவும் Hari Vellalan (பேச்சு) 13:49, 12 மே 2020 (UTC)
@Senaiyaar: அரசு எடுக்கும் Census எல்லாம் மக்கள் கொடுக்கும் பதில்கள் மூலம் எழுத்தப்படுவது ஆகும். இதை எல்லாம் ஆதாரமாக நம்பமுடியாது. இதே அரசு தான் இந்த சமூகத்துக்கு 3 பெயர் என்று சமூக பட்டியலில் உள்ளது. Hari Vellalan (பேச்சு) 15:52, 16 மே 2020 (UTC)
தில்லையில் தேரோட்டிய இலைவாணியன்
தொகுசேனைத்தலைவர் குல மக்கள் வீரபாகு சேனைத்தலைவர் வழி வந்த வம்சத்தினர் என்று சோழ மன்னனால் செப்பு பட்டயம் கொடுக்கப்பட்ட சிதம்பரம் தில்லை கோவில் உரிமை சாசனம் .இன்றும் பல தலைமுறை க்கு பிறகு நம் சேனைக்குடைய செட்டியார் அல்லது சேனை கொண்ட செட்டியார் என்கிற சேனைத்தலைவர் குல வீரபாகு வம்சாவளி மக்களுக்கு அக்கோவில்களில் கொடுக்க படும் மரியாதை இன்றும் நடந்து கொண்டுள்ளது .
சேனைத்தலைவர் குலத்திற்கான சிதம்பரம் தில்லை கோவில் மரியாதை
கோவிலின் பிரமோற்சவ காலத்தில் ,ஆறாவது நாள் காமதேனு வாகன உற்சவம் செய்கிறார்கள் .சிவபரியை தீர்த்தவாரி , உற்சவத்தையும் சேனைக்குடைய செட்டியார்களே செய்கிறார்கள் .அவர்களில் யார் தவறினாலும் அல்லது இறந்துவிட்டாலும் , கருவறை அம்பாள் ஆடையில் இருந்து சிறுபகுதி கிழித்து தரவேண்டும் .அம்மனுக்கு அபிஷேகம் செய்து அபிஷேகம் ஆன பொருட்களையும் , மாலை மரியாதைகளையும் கோவிலில் இருந்து வாங்கி கொண்டு கொண்டு சென்று பிரேதத்திற்கு பயன்படுத்திய பிறகே அவர்களை அடக்கம் செய்கிறார்கள் .இந்த உரிமை , இந்த வழக்கம் சேனைத்தலைவர் குலத்திற்கு மட்டும் இன்று வரை தொடர்கிறது .
இன்று வரை சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்த மக்கள் பிரேதம் , சிதம்பரம் நடராச திருக்கோவில் மேற்கு கோபுரம் வரை சென்று திரும்புவதும் , ஸ்ரீ நடராச பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பரமானந்த கூப தீர்த்தம் ஒரு சொம்பு பெற்று வந்து நம் சேனைத்தலைவர் குலத்தை சேர்ந்த நம்மவர் பிரேதத்திற்கு அபிஷேகம் செய்வதும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது .
இது வேறு எந்த சமூகத்திற்கும் இல்லாத மரியாதை, கிட்டத்தட்ட 700 ஆண்டு காலம் தொடர்ந்து கொண்டது இருக்கும் பழக்கம் .சேனைத்தலைவர் செட்டியார் பெருமக்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய மரியாதை .
சில வருடங்களுக்கு முன் வரை சேனைத்தலைவர் இனத்தின் இறந்தவரின் பிரேதம் மேற்கு உள்கோபுரம் உள் விநாயகர் கோவில் வரை சென்று உள்ளது .தற்பொழுது கோவில் சாந்நித்தியம் கருதி மேல் கோபுரத்தோடு நிறுத்தப்பட்டுள்ளது .மேலக்கோபுர கோவிலில் சில செங்கற்கள் பிரேத ஊர்வலம் மிதிப்பதற்காக போடப்பட்டிருக்கும் .
இதுக்கு எல்லாம் காரணம் சேனைத்தலைவர் இனத்தின் மாவீரன் , வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி தில்லை கோவில் சேனைத்தலைவன், சேனைத்தலைவர் குலத்தில் உதித்த வீராதிவீரன் வீரப்பெருமாள் தன் தலையை கொடுத்து தேரினை ஓட செய்தததால் சோழ மன்னன் நம் குலத்திற்கு கொடுத்த உரிமை மேலும் அதை பட்டயமாக கொடுத்துள்ளார் .
பட்டயம் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால் , ஆவண காப்பதில் பாதுகாக்கப்பட்டு கொண்டு உள்ளது .
சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்த மக்கள் , வீரபாகு சேனைத்தலைவர் வம்சாவளிகள் என்றும் 700 வருடங்களுக்கு முன் சேனைத்தலைவர் மக்கள் முருகப்பெருமான் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவரை தெய்வமாக வணங்கி வந்துள்ளனர் .
சேனைத்தலைவர் சமூகத்தின் பெயர்
தொகு@Gowtham Sampath: இந்த சமூகத்தின் பெயர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடியான் அல்லது இலைவாணியர் என்று அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 113 எண் இல் உள்ளது. அதனால் தேவையற்ற மற்ற பெயர்களை நீக்கவும். Hari Vellalan (பேச்சு) 12:10, 6 மே 2020 (UTC)
@Hari Vellalan: தஞ்சாவூர் , திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம் ,தென் ஆற்காடு , வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் 1955 காலகட்டத்தில் சுமார் 65 வருஷத்திற்கு முன்னதாக இந்திய அரசின் மக்கள் தொகை குறிப்பில் உள்ள சாதிகளின் பட்டியல் இதில் கொடிக்கால் வம்சமாகிய #சேனைத்தலைவர் இனத்தில் உள்ள பிரிவுகள் பின் வருமாறு உள்ளது . இதை தெளிவாக அரசு ஆவணங்களில் பதிவு பண்ணி வைத்துள்ளதும் சாதாரணமாக உள்ள அப்பனும் சொப்பனம் இல்லை, எழுதி வைத்துள்ளது இந்திய அரசு கணக்கெடுப்புக்காக .
தஞ்சாவூர் மாவட்டம்
தொகு- இலைவாணியச் செட்டி
- இலை வேளாளர்
- கொடிக்கால் பிள்ளைமார்
- கொடிக்கால் வேளாளர்
- சேனைக்கொடைச் செட்டி
- சேனைத்தலைவச் செட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தொகு- சேனைக்குடையச் செட்டி
- சேனைத்தலைவர்
- கொடிக்கால் பிள்ளைமார்
- கொடிக்கால் வேளாளர்
ராமநாதபுரம் மாவட்டம்
தொகு- இலைமுதலி
- இலைவாணியர்
- மூப்பனார் சேனையார்
- சேனை குல வெள்ளாளர்
- சேனை முதலியார்
- சேனையார்
- சேனைத்தலைவர்
வட ஆற்காடு மாவட்டம்
தொகு- இளவாணியர்
- சேனைக்கொடைச் செட்டி
- சேனைத்தலைவச் செட்டி
- சேனைத்தலைவர்
- சேனை வெள்ளாளர்
தென் ஆற்காடு மாவட்டம்
தொகு- கொடிக்கால் பிள்ளை
- சேனைக்குடையார்
- சேனைக்குலம்
- சேனைத்தலைவர்
- சேனையார்