பேச்சு:சேர்வியல் (கணிதம்)

Add topic
There are no discussions on this page.

பேரா வி.கே, Permutation என்பதற்கு திரிபு என்பது சரியாகப் படவில்லை. mutation என்பது மாறுவது,திரிபு என்பது distortion என்பது போல் பொருள் தரக்கூடியது. எனவே மாற்றடுக்கு அல்லது மாற்றமைப்பு எனலாமா?What are the permutation என்பதை, "மாற்றமைப்புகள் யாவை", "மாற்றடுக்குகள் எத்தனை" என்பன போல எழுத்லாம். திரிபு என்பது பொதுவாக ஒன்றி வேறொன்றாக மாறுவது. மாற்றி அடுக்கப்படுவதையும் திரிபு என்று கொள்ளலாம் எனினும், அடிப்படையில் திரிபு என்பது சற்று வேறான கருத்து என்று எண்ணுகிறேன்.--செல்வா 16:34, 17 ஜூலை 2007 (UTC)

'வரிசைமாற்றம்' என்ற சொல் பள்ளிகளில் வழக்கத்திலிருப்பதாகத்தெரிகிறது.
permute: வரிசைமாற்று; மாற்றடுக்கு (verb); திரி (verb); மாற்றமை;
permutation: வரிசைமாற்றம்; மாற்றடுக்கல்; திரிபு; மாற்றமைப்பு
permutable: வரிசைமாற்றக்கூடிய; மாற்றடுக்கக்கூடிய; திரிக்கக்கூடிய; மாற்றமைக்கக்கூடிய;
permuted (adj) : வரிசைமாற்றப்பட்ட; மாற்றடுக்கப்பட்ட;திரிக்கப்பட்ட; மாற்றமைக்கப்பட்ட;
இவைகளில் எந்த நான்கு சொற்களைக் கையாளலாம் என்பதற்கு, மற்ற பயனர்களும் அவர்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்தால் நல்லது.
நான் திரிபு என்று பயன்படுத்தினதின் காரணம், 'சேர்வு' என்ற சொல்லுக்கு இணையாக இருப்பதே.

--Profvk 19:48, 17 ஜூலை 2007 (UTC)

என் தெரிவுகள் முறையே,
  1. வரிசைமாற்று
  2. வரிசைமாற்றம்
  3. வரிசைமாற்றடுக்கத்தக்க/வரிசைமாற்றடுக்கக்கூடிய
  4. வரிசைமாற்றப்பட்ட
என்பன. "மாற்றடுக்கம்" என்ற கருத்துருவைக் கொண்டு அமைக்கப்பட்ட சொற்கள் எனது இரண்டாம் நிலைத் தெரிவுகள் ஆவன. திரிபு என்பது மாற்றமை என்பதும் வேறு பொருள் தந்துவிடக் கூடும் என நான் நினைக்கிறேன். -- Sundar \பேச்சு 09:40, 18 ஜூலை 2007 (UTC)
Return to "சேர்வியல் (கணிதம்)" page.