பேச்சு:சோச்சி

இக்கட்டுரை சோட்சியிலிருந்து சோச்சி என்ற தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. உருசிய உச்சரிப்பின்படி சோட்ஷி என்பதே சரியானதாகும். இதற்கு அண்மையான தலைப்பு சோட்சியேயாகும். கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 09:05, 7 பெப்ரவரி 2014 (UTC)

உருசிய மொழியில் சோச்சி தான் சரியான ஒலிப்பு. so(h)-chee. தமிழில் சோட்சி என்றால் sotsi எனத் தவறாக ஒலிக்கும். அல்லது சோட்ச்சி என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 09:40, 7 பெப்ரவரி 2014 (UTC)
கனகு, நீங்கள் உருசியாவில் படித்தவர் என்பதால் சரியாகத் தான் இருக்கும். ஆங்கில விக்கியில் உருசியம்: Со́чи, பஒஅ[ˈsot͡ɕɪ] என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். பிற விக்கிப்பீடியாக்களிலும் , மராட்டி, இடாய்ச்சு, பிரெஞ்சு போன்ற பல மொழிகளில் சோட்ஷி அல்லது சோத்சி என்றே இட்டுள்ளார்கள். --மணியன் (பேச்சு) 16:27, 7 பெப்ரவரி 2014 (UTC)
சோட்சி என்பதன் எழுத்துப்பெயர்ப்பு உருசிய மொழியில் Соци என எழுத வேண்டியிருக்கும். அதனால் சோச்சி (Со́чи, ஸோச்சி) மிகச்சிறந்த ஒலிப்பெயர்ப்பு என்பது என் கருத்து. மரு. செந்தில் இன் உதவி பெறலாம்.--Kanags \உரையாடுக 20:30, 7 பெப்ரவரி 2014 (UTC)

//அதனால் சோச்சி (Со́чи, ஸோச்சி) மிகச்சிறந்த ஒலிப்பெயர்ப்பு என்பது என் கருத்து// சந்தேகத்திற்கு இடமின்றி சோச்சி (ஸோச்சி) என்பதே சரியானது. உருசியர்கள் அவ்வாறுதான் ஒலிப்பார்கள். மணியன் நீங்கள் sot͡ɕɪ என்பதை சோட்சி என்று படித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். "tɕ" என்பதன் ஒலிப்பு "ச்" / "ச" என்று இங்கு --> en:wikt:tɕ அல்லது இங்கு --> en:Tɕ உள்ளது.--சி.செந்தி (உரையாடுக) 00:35, 8 பெப்ரவரி 2014 (UTC)

தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி கனகு, செந்தி. "tɕ" என்பதற்கு ஆங்கில IPA பட்டியலில் tsunami, cats என்பதுபோல என்றிருந்ததே குழப்பத்திற்கு காரணம். chip என்பதுபோல என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அதை நான் கருத்தில் கொள்ளவில்லை. விக்சனரியில் உள்ள ஒலிக்கோப்பு மிகத் தெளிவாக்குகிறது.--மணியன் (பேச்சு) 02:55, 8 பெப்ரவரி 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோச்சி&oldid=1614783" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சோச்சி" page.