பேச்சு:சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

அறப்பெயர்ச்சாத்தன் தொகு

அறப்பெயர்ச்சாத்தன் எனக் குறிப்பிடப்படுவது இங்குள்ள ஐயனாரை ஆயிற்றே? ஔவை துரைச்சாமி எழுதிய உரையைப் பார்க்கவும்.

http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=445

http://temple.dinamalar.com/New.php?id=1529 --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:55, 6 நவம்பர் 2015 (UTC)Reply

சான்று தரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:54, 8 நவம்பர் 2015 (UTC)Reply

பயனர்:Sengai Podhuvan அந்த பாடலைத் தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் எனத்தான் ஏற்கனவே தெரியுமே. அதற்கு யாராவது எழுதிய உரைக்குறிப்புகளைத் தரவும். நான் மேலே தந்த குறிப்புகள் போல் ஏதாவது உண்டா? பாடலை மட்டும் குறிப்பிடுவதை மாற்றுக்கருத்து வருமிடத்தில் தவிர்க்கலாம். அறிஞர் பெருமக்கள் எழுதிய உரை நூல்களில் இருந்து மேற்கோள் காட்டவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:52, 9 நவம்பர் 2015 (UTC)Reply

  • மாற்றுக் கருத்து இதில் என்ன இருக்கிறது என்பது விளங்கவில்லை
  • இருப்பின் இருப்போர்தான் விடை காணவேண்டும்.
  • எளியேனுக்ககு மாற்றுக் கருத்து இல்லை.
  • ஔவை சு து உரையை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை நீங்களே முறைப்படிச் சேர்த்துவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 20:52, 11 நவம்பர் 2015 (UTC)Reply

மாற்றுக்கருத்து என்னவென்று விளங்கவில்லையா?

//அறப்பெயர்ச்சாத்தன் எனக் குறிப்பிடப்படுவது இங்குள்ள ஐயனாரை ஆயிற்றே? //

//இந்த வள்ளலை இப்பெயரிடுப் போற்றினர்.//

மேலுள்ள இரண்டும் ஒத்த கருத்துக்களா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:57, 11 நவம்பர் 2015 (UTC)Reply

விளக்கம் தொகு

ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் 20
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!

இது பாடல் பகுதி

ஆங்கு
நல்ல நிலபுலங்களை அணிகலன்களாகப் பூண்டிருக்கும்
சீரும் சிறப்பும் மிக்க
சிறிய கண்ணைக் கொண்ட யானையைப் பெற்றிருக்கும் அருந்திறலாளன் தித்தனின்
புகழ் குன்றாத உறந்தைக்குக் கிழக்கில்
கொடையால் நீண்ட கைகளை உடைய வேண்மானின் (வேள் மகன்) காப்பிடமாக விளங்கும் பிடவூரில் வாழும்
அறப்பெயர்ச் சாத்தன் (சாத்தனாகிய உன்) தோழமைக் கிளைஞராக விளங்குபவர் யாம், பெருமானே!

இது செய்தி ஓட்டம்
சிதைந்த பாடலிலும் இந்தத் தெளிவு
எதற்காக ஏதோ குழப்பம்
அதுதான் விளங்கவில்லை
--Sengai Podhuvan

என்ன உங்களுக்கு விளங்கவில்லை? விக்கிப்பீடியா மூன்றாம் நிலை தரவு தளம் என்பது உங்களுக்கு விளங்கவே இல்லை. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். நான் உங்களின் ஆவணப்படுத்தப்பட்டாத நூலாக வெளிவராத சொந்தக் கருத்துகளைக் கொண்ட உரைக்குறிப்பை கேட்கவே இல்லை. ஆரம்பத்தில் இருந்தே அறிஞர்களின் உரைக்குறிப்பையே கேட்கிறேன். நீங்கள் அதைத்தராமல் உங்கள் சொந்த உரைக்குறிப்புகளையே தந்து கொண்டிருக்கிறீர்கள்.

//அறப்பெயர்ச் சாத்தன் (சாத்தனாகிய உன்) தோழமைக் கிளைஞராக விளங்குபவர் யாம், பெருமானே!//

இது உங்களின் ஆவணப்படுத்தப்பட்டாத நூலாக வெளிவராத சொந்தக் கருத்து.

//அறத்தாலுண்டாகிய புகழையுடைய சாத்துனுக்குக் கிணைப்பறை கொட்டிப்பாடும் கிணைப்பொருநராவோம்//

இது துரைச்சாமியின் ஆவணப்படுத்தப்பட்ட நூலாக வெளிவந்த கருத்து.

விக்கி நூலாக வெளிவந்த கருத்தை மட்டும் தான் மூன்றாம் நிலைத்தரவாக வாக்கியங்களாத் தரும். மாறாக ஆவணப்படுத்தப்பட்டாத நூலாக வெளிவராத உங்கள் சொந்த உரைக்குறிப்புகளை தராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 12 நவம்பர் 2015 (UTC)Reply

தீர்வு தொகு

அறியாதவர் ஐயத்தைப் போக்கலாம்
அறிந்தவரை அளக்க விரும்பவில்லை
ஏதோ செய்யுங்கள்
வாழ்க வளமுடன் --Sengai Podhuvan (பேச்சு) 01:25, 12 நவம்பர் 2015 (UTC)Reply

சுண்டுவிரல் தொகு

உங்களுக்குத் தெரிந்தது
எனக்குத் தெரியாதது
நான் எப்படி விளக்க முடியும்?
விட்டுவிடுங்களே ஐயா
விருப்பம் போல் செய்யுங்களே ஐயா
நான் சுண்டுவிரல்
நீங்கள் சுட்டுவிரல்
வாழ்க வளமுடன்
வணக்கம் --Sengai Podhuvan (பேச்சு) 20:11, 12 நவம்பர் 2015 (UTC)--Sengai Podhuvan (பேச்சு) 20:11, 12 நவம்பர் 2015 (UTC)Reply

ஆளும் அரசன் நீங்கள்
அண்டிப் பிழைக்கும் புலவன் அடியேன்
புரிகிறது. வணக்கம் --Sengai Podhuvan (பேச்சு) 20:16, 12 நவம்பர் 2015 (UTC)Reply

Return to "சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்" page.