இந்த கட்டுரை முழுவதுமே ஒரு தவறான, இசுலாமிய சட்டனெறியில் இல்லாத ஒன்றை சித்தரிக்கின்றது. ஜிகாத் என்ட்ரால் முயற்சி அல்லது திண்டாட்டம் என்று பொருள், ஆகவே இதை தொடங்கியவர் தான் தீவிரவாதத்துக்கு சார்பாக உள்ளனர் போல் தெரிகிறது. தயவுடன் இக்கட்டுரையை அகற்றவும். நன்றி

தொடங்கியவர் ஜிகாத்தும் தீவிரவாதமும் ஓன்று என எழுதவில்லை.--AntonTalk 17:39, 7 சனவரி 2015 (UTC)Reply

கருத்து

தொகு

ஜிஹாத் என்ற அரபி பதம் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையின் உள்ளடக்கம் தவறான தகவல்களையும், முன்னுக்கு பின் முரணான செய்திகளையும், இவ்வார்த்தை குறித்த ஆழமாக விளக்கங்கள் இல்லாமல் மேலோட்டமாகவும், இஸ்லாமிய மூல நூல்கள் குறித்த குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் வாக்கியங்கள் அமைத்தும், வெறுப்பு கருத்துக்களை உமிழும் இஸ்லாமிற்கெதிரான இணையதளங்களில் இருந்து தவறான கருத்துக்களை மேற்கோள் காட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இக்கட்டுரை நீக்கப்பட வேண்டியதாகும். விபரம் பின்வருகின்றது.

1. ஜிஹாத் என்ற வார்த்தை, அதன் கிளைச் சொற்களுடன் 41 முறை குர்ஆனில் வந்துள்ளது (ஜிஹாத் குறித்த ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை இதனை சரியாக பதிவு செய்துள்ளது). ஆனால், தமிழ் கட்டுரையிலோ 164 தடவை என்ற தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. இதற்கு answering-islam.org என்ற வெறுப்பு கருத்துக்களை உமிழும் இணைய தளம் ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது.

தீர்வு: சரியான எண்ணிக்கை ஆதாரத்துடன் பதியுங்கள்.

2. கட்டுரையில் இப்படியான வாக்கியம் இடம் பெறுகிறது - // ஹதீஸ் மற்றும் புகாரியில் 199 வசனங்களிலும்// - இஸ்லாமிய புரிதல் சிறிதும் இல்லாமல் எழுதப்பட்ட வாக்கியம் இதுவாகும். புஹாரி, முஸ்லிம், அபுதாவுத், அஹ்மத், திர்மிதி போன்றவை நபிமொழி நூல்கள், அதாவது ஹதீஸ் நூல்கள். ஆனால் கட்டுரையிலோ ஹதீஸ் என்பதும், புஹாரி என்பதும் வெவ்வேறு நூல்கள் என்பதாக மேற்கோள் காட்டப்படுள்ளது உண்மைக்கு எதிரானதாகும்.

தீர்வு: புகாரி என்று மாற்றுங்கள்

3. ஜிஹாத் என்பதற்கு தற்காப்பு என்பதாக தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையின் உள்ளடக்கத்தில் மேலோட்டமாக விளக்கம் கூறப்பட்டுள்ளது. ஜிஹாத் என்பதின் மூல சொற்களை ஆராய்வதின் மூலம் 'கடுமையாக உழைத்தல், முயற்சித்தல், போராடுதல்' என்ற பல்வேறு அர்த்தங்கள் இவ்வார்தைக்கு இருப்பதை நாம் அறிய முடியும். ஆனால், ஜிஹாத்தின் மூல அரபி சொற்கள் மற்றும் அவற்றின் பலதரப்பட்ட விளக்கம் குறித்த எதுவும் உள்ளடக்கத்தில் இல்லை.

தீர்வு: பிற பகுதிகளையும் ஆதாரத்துடன் சேர்க்கலாம்.

4. ஜிஹாத் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பின்வரும் முன்னுக்கு பின் முரணான கருத்து இடம் பெற்றுள்ளது. //இதை புனிதப்போர் ("Holy War")[8][9][10] எனவும் இசுலாமியர்கள் அழைக்கின்றனர்// - இப்படி கூறிவிட்டு, தொடர்ந்து வரும் வாக்கியம் இதற்கு முரணாக வருகின்றது. //பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் இஸ்லாமிய மதகுருக்களும் இவ்விளக்கத்தை ஏற்பதில்லை. எனவே இது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.//

முதலில் இஸ்லாமியர்கள் இப்படி கூறுவதாகவும், பின்பு அவர்களே மறுப்பதாகவும் கூறுவது முன்னுக்கு பின் முரணாக செய்தியாகும். அதே சமயம், ஜிஹாத் குறித்த ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை இதுக்குறித்து சரியாக குறிப்பிடுகின்றது //Muslims[6] and scholars do not all agree on its definition. Many observers—both Muslim[7] and non-Muslim[8]—as well as the Dictionary of Islam,[3] talk of jihad having two meanings: an inner spiritual struggle (the "greater jihad"), and an outer physical struggle against the enemies of Islam (the "lesser jihad")[3][9] which may take a violent or non-violent form.[1][10] Jihad is often translated as "Holy War",[11][12][13] although this term is controversial.[14][15]//

தீர்வு: பிற பகுதிகளையும் ஆதாரத்துடன் சேர்க்கலாம்.

5. மிக தவறான மொழியாக்கமும் கூட தமிழ் உள்ளடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. //முஸ்லீம்களும்[14] முஸ்லீம் அல்லாதவர்களும்[15] ஜிகாத் எனும் சொல்லுக்கு இஸ்லாமுக்கு எதிரானவர்களுக்கு மன ரீதியாக கலக்கத்தை உண்டுபன்ணுதல் (inner spiritual struggle)// - inner spiritual struggle என்றால் மனரீதியாக கலக்கத்தை உண்டு பண்ணுதல் என்று அர்த்ததமா? ஜிஹாத் என்றால் மன இச்சையுடன் போராடுவது (inner spiritual struggle), மற்றும் ஆயுதம் ஏந்தியோ அல்லது இல்லாமலோ எதிரிகளுடன் போராடுவதை குறிக்கின்றது. முதலானதை சொல்ல வந்த inner spiritual struggle என்ற வார்த்தைக்கு 'மனரீதியாக கலக்கத்தை உண்டு பண்ணுதல்' என்று மொழி பெயர்ப்பு செய்வது மிக தவறான முன்னுதாரணத்தை தருகின்றது.

தீர்வு: "உள்ளக ஆன்மீகப் போராட்டம்" என்பது சரியானது

6. குர்ஆனில், ஜிஹாத் என்ற வார்த்தை, ஆயுதம் ஏந்திய போராட்டமாக மட்டும் அல்லாமல் பல்வேறு பொருள்களிலும் கையாளப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையோ, //குரானில் ஜிகாத் எனும் சொல் கடவுளில் வழியில் அல்லது கடவுளின் வழிகாட்டுதலில் சண்டையிடுதல்" (qital: قتال) என்ற பொருளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது// - இப்படி கூறுவது தவறாகும் (ஆங்கில கட்டுரை சரியாக இதனை பதிந்துள்ளது). இது போல ஹதீஸ் குறித்த கருத்துக்களும் தவறாகும். அவற்றிலும் ஆயுதம் ஏந்திய போராட்டமாக மட்டும் அல்லாமல் பல்வேறு அர்த்தங்களிலும் ஜிஹாத் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது (உதாரணம் - திர்மிதி, புஹாரி).

தீர்வு: பிற பகுதிகளையும் ஆதாரத்துடன் சேர்க்கலாம்.

7. மேலும் சூபி குறித்த கருத்துக்களுக்கு ஆதாரம் எதுவும் தரப்படவில்லை.

தீர்வு: ஆதாரம் கேட்கலாம். எ.கா: {{cn}}

இப்படியாக, பத்திக்கு பத்தி ஜிஹாத் குறித்த உள்ளடக்கம் உண்மைக்கு மாறான செய்திகளை தருவதால், இது வாசகர்களுக்கு குழப்பத்தையே விளைவிக்கும். ஆகையால் இக்கட்டுரை நீக்கப்பட வேண்டியதாகும்.−முன்நிற்கும் கருத்து Abdulbasith27 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஜிஹாத் கட்டுரைக்கு மாற்றுக்கருத்து

தொகு

சகோதரர் பாசித்தின் கருத்துடன் முழுமையாக ஒத்து போகிறன். ஜிஹாத் பற்றிய இங்க்லீஷ் (விக்கிபீடியா) கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கொண்டு அதனையும் முழுமையாக மொழி பெயர்க்காமல் பாதி விளக்கங்களையும் விடுத்து தவறான மொழி பெயர்ப்பாகவும் லாவகமாக (இங்க்லீஷ் வெர்ஷனில் இல்லாத) இஸ்லாமொபோபியா வெப்சைட்களை உள்சொருகியும் தமிழ் கட்டுரையை உருவாக்கியுள்ளார்கள். ஆங்கில விக்கி கட்டுரை குரானில் ஜிஹாத் ஐந்து விதமான பொருளில் வெவ்வேறான இடங்களில் பயன் படுத்தப் பட்டுள்ளதாக கூறும் போது தமிழ் கட்டுரையோ சண்டையிடுதல் என்ற பொருளில் மட்டும் ஜிஹாத் வார்த்தை யூஸ் செய்ய பட்டுள்ளதாக கூறுவது எப்படியான வேலையை தமிழில் பார்த்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது. இவை மட்டும் இல்லாமல் ஹதீஸும் புஹாரியும் வேறு வேறாக குறிப்பிட்டுள்ளது விக்கிபீடியா தரத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. இன்னொரு விசயத்தியும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புறன். அரபு இலக்கியத்தில் வார்த்தை உச்சரிப்பில் பொருள் மாறும். ஜி'கா'த் என்பது தவறு, ஜி'ஹா'த் என்பதே சரி. ஜிகாத் என்று எழுதுவது மூலம் இல்லாத ஒரு விஷயத்தை பேசுவது போல தோற்றத்தை தருது. தயைக்கூர்ந்து திருத்தவும் --Abulbasher050 (பேச்சு) 16:27, 17 ஏப்ரல் 2016 (UTC)


Anton அவர்களே! இவ்வளவு தெளிவாக குறிப்பிட்டபின்னும் ஏன் மாற்றவில்லை? வேறு என்ன செய்ய வேண்டும். இந்த பக்கத்தை ஜிஹாத் என்ற பக்கத்திற்கு வழிமாற்று செய்யவும்.---Abdulbasith27 (பேச்சு) 04:30, 18 ஏப்ரல் 2016 (UTC)

மாற்றம் நான்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த கட்டுரையில் அதிகம் பங்களிப்பு செய்தவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி இணக்க முடிவின் பின்தான் சிக்கலான பகுதிகள் மாற்றம் செய்ய வேண்டும். இங்கு பலரும் பலவித நேர இடைவெளியில் பங்களிப்பதால், நீங்கள் நினைத்தவுடன் மாற்ற இயலாது. மேலும் தமிழ் விக்கியில் கிரந்தம் குறைந்தவரை தவிர்த்து எழுதப்படுகிறது. அதையும் விளங்கிக் கொண்டு பங்களியுங்கள். அரபு இலக்கியத்திற்காக தமிழ் இலக்கணம் மாற்றப்பட வேண்டும் என்று கருதுவதும் ஏற்புடையதல்ல. இக்கட்டுரையில் ஒரு பகுதியைவிட்டுவிட்டு, மறு பகுதி மட்டும்தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று கருதினால், விடுபட்ட பகுதியை ஆதாரத்துடன் விக்கிக் கொள்கை, வழிகாட்டலின்படி எழுதுங்கள். ஏற்கொனவே உள்ளபகுதிகளை நீக்கி, சொந்தக்கருத்துக்கள் புகுத்தப்பட்டால் கட்டுரை முந்தைய பதிப்பு மீளமைக்கப்படும். நன்றி. --AntanO 00:12, 19 ஏப்ரல் 2016 (UTC)

திரு Anton, ***சொந்தக்கருத்துக்கள் புகுத்தப்பட்டால்** பாசித் ஆதாரம் இல்லாமலா சீரமைப்பு செய்கிறார்? அவர் கொடுக்கும் ஆதாரங்கள் தவறென்றால் அவற்றை சவால் விடுங்கள். இது போன்ற தேவையற்ற வார்த்தை பயன்பாடுகளை தவிருங்கள் என்று தயை கூர்ந்து கேட்டு கொள்கிறன். வார்த்தை உச்சரிப்பில் பொருள் மாறும் என்று கூறுகிறன். ஜி'கா'த் என்ற வார்த்தையே அரபியில் இல்லாத போது எதை பற்றி எழுதி கொண்டிருக்கிறோம்? முடிந்தவரை தவிர்க்கலாம் ஆனால் இது தவிர்க்க முடியாத இடமாயிற்றே --Abulbasher050 (பேச்சு) 17:09, 19 ஏப்ரல் 2016 (UTC)

//பாசித் ஆதாரம் இல்லாமலா சீரமைப்பு செய்கிறார்? // விளங்கவில்லை. அரபி தமிழில் இருக்க வேண்டும் என்று வாதாட வேண்டாம். தமிழ் விக்கிப்பீடியா என்பதை விளங்கிக் கொண்டு பங்களியுங்கள். நன்றி --AntanO 01:00, 20 ஏப்ரல் 2016 (UTC)

அப்துல் பாஸித், அபுல் பஷர் ஆகியோரின் கவனத்துக்கு! ஜிஹாத் என்பதை ஜிகாத் என்றெழுதுவதில் தவறில்லை. முகம் என்றெழுதும் போது வரும் ககர ஒலியே இங்கும் வருகிறது. இதுவும் தமிழ் முறையே. அத்துடன், இக்கட்டுரையில் இருக்கும் ஏற்க முடியாத விடயங்களை நீங்களே திருத்துங்கள். எனக்கு நேரம் கிடைத்தால் நானும் திருத்த முயல்கிறேன். வேண்டுமென்றே வெறுப்பேற்படுத்தும் வலைத்தளங்களிலிருந்து ஆதாரம் காட்டுவது முற்றிலும் தவறான செயலென்பது திண்ணம். அத்தகையவற்றை நீக்கி, யாரும் விளங்கிக் கொள்ளக்கூடியவாறும் சிறந்த விளக்கத்துடனும் கட்டுரையை மேம்படுத்துங்கள். மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, கட்டுரையை நீங்களே மேம்படுத்துவது சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 03:50, 20 ஏப்ரல் 2016 (UTC)

சகோ Abdulbasith27, சகோ Anton மற்றும் பாஹிம் சொல்வது போல செய்வோமே.... சகோஸ் Anton & பாஹிம் ஜிகாத் உச்சரிப்பு குறித்த கேள்வி எனக்கும் உண்டு. //அரபி தமிழில் இருக்க வேண்டும் என்று வாதாட வேண்டாம்// என்று கூறும் சகோ Anton, ஹஜ் என்ற அரபி வார்த்தையை (ஹஜ் என்ற தமிழ் கட்டுரை விக்கிப்பீடியாவில் உண்டு) விக்கிப்பீடியா நெறிகளுக்கு ஏற்ப தமிழில் எப்படி பயன்படுத்துவது என்று கூறுவீராக. நன்றி --Aashiq 14 (பேச்சு) 08:34, 20 ஏப்ரல் 2016 (UTC)

ஹஜ் என்பதை நல்ல தமிழுக்கு மாற்ற தக்க பெயர் கூறினால் மாற்றலாம். //தமிழ் விக்கியில் கிரந்தம் குறைந்தவரை தவிர்த்து எழுதப்படுகிறது. அதையும் விளங்கிக் கொண்டு பங்களியுங்கள்.// என்று நான் குறிப்பிட்டுள்ளதைக் கவனியுங்கள். --AntanO 01:17, 21 ஏப்ரல் 2016 (UTC)
Anton சரி சகோ --Aashiq 14 (பேச்சு) 08:25, 21 ஏப்ரல் 2016 (UTC)

ஜிஹாத் - ஆதாரங்கள் இடம் மாற்றப்பட்டிருப்பது குறித்து

தொகு

ஜிகாத் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பின்வரும் வரி இடம்பெற்றுள்ளது.

//இஸ்லாமிய வரலாற்றாசிரியரான பெர்னார்டு லீவிஸ் (Bernard Lewis) இஸ்லாமிய அகராதியின்படி (Dictionary of Islam)[3] ஜிகாத் என்பது போர் அல்லது ஆயுதப் போராட்டம் என்றே குறிப்பிடுகிறார்.//

ஆனால், ஜிஹாத் பற்றிய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில், இஸ்லாமிய அகராதியின் துணைக்கொண்டு பெர்னார்ட் லெவிஸ் இப்படி கூறுவதாக இடம்பெறவில்லை. ஜிஹாத் என்பதிற்கு ஆயுத போராட்டம் என்ற பொருள் மட்டும் அல்லாமல் வேறு பொருள்களும் உள்ளன என்பதற்கு ஆதாரமாக தான் இஸ்லாமிய அகராதி ஆங்கில கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆக, ஆதாரங்கள் இடம் மாற்றப்பட்டு தவறான வரி உருவாக்கப்பட்டுள்ளது. --Aashiq 14 (பேச்சு) 08:25, 21 ஏப்ரல் 2016 (UTC)


ஜிஹாத் குறித்த ஆங்கில விக்கி கட்டுரையில் உள்ளது போல, தமிழ் கட்டுரையின் பத்திகளை ஒழுங்கு படுத்தியுள்ளன். --Abulbasher050 (பேச்சு) 16:22, 21 ஏப்ரல் 2016 (UTC)

ஜிகாத் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையின் நான்காவது பத்தியில் பின்வரும் வரி வருகிறது

//பொதுவாக ஜிகாத்தானது அல்லாவை நிராகரிப்பவர்களுக்கு எதிராக இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படுவதாகும்//

இது தவறாகும். ஜிஹாத் குறித்த ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இல்லாத இடைச்சொருகலாகும் இவ்வரி. இந்த வரிக்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள குரான் வசனம் 9:29-ல் சண்டையிடுதலை குறிக்க ஜிஹாத் என்ற வார்த்தையோ அல்லது அதன் கிளைச் சொற்களோ காணப்படவில்லை. மாறாக 'கிதல்' என்ற வார்த்தையே 'சண்டையிடுதல்' என்பதை குறிக்க பயன்பட்டுள்ளது. அந்த வசனத்தின் ஆங்கில எழுத்துரு பின்வருகின்றது

Qatiloo allatheena la yuminoona biAllahi wala bialyawmi al-akhiri wala yuharrimoona ma harrama Allahu warasooluhu wala yadeenoona deena alhaqqi mina allatheena ootoo alkitaba hatta yuAAtoo aljizyata AAan yadin wahum saghiroona

இதில் ஜிஹாத் என்ற வார்த்தையோ அல்லது அதன் கிளைச் சொற்களோ எங்கும் வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஜிகாத் என்பதே வரவில்லை என்கிற போது அது இப்படியாக கூறுவதாக சொல்வது தவறாகும். மேலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள al-islam.org இணைய தள கட்டுரை, அந்த வசனம் குறித்த விளக்கத்தை மட்டுமே சொல்லி செல்கிறது. மாறாக //பொதுவாக ஜிகாத்தானது அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு எதிராக இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படுவதாகும்// என்று அந்த கட்டுரையின் எந்த பகுதியிலும் குறிப்பிடவில்லை.--Aashiq 14 (பேச்சு) 09:46, 4 மே 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜிகாத்&oldid=2059814" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜிகாத்" page.