பேச்சு:டுரியான் துங்கல்

வணக்கம் முத்துகிருஷ்ணன் தமிழ் இலக்கணப்படி டகரம் மொழி முதலில் வராது. எனவே இக்கட்டுரையின் தலைப்பை துரியான் துங்கல் அல்லது துரியன் துங்கல் என மாற்றலா? தமிழகத்தில் துரியன் பழம் என்று அழைக்கப்படுகிறது. மலேயாவில் துரியான் என அழைக்கப்பட்டால் அவ்வாறே மாற்றலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:51, 10 பெப்ரவரி 2013 (UTC)

மலேசிய சொல்வழக்கு தொகு

அன்புள்ள சகோதரி பார்வதி அவர்களுக்கு, //தமிழ் இலக்கணப்படி டகரம் மொழி முதலில் வராது.// தமிழ் இலக்கணப்படி தவறுதான். ஆனால், மலேசியாவில் ஓர் இடத்தை அழைக்கும் முறையை மாற்றினால், இடத்தையே மாற்றிவிட்டது போல ஆகிவிடும். இங்குள்ள ஊடகங்கள் அனைத்தும், காலம் காலமாக 'டுரியான்' என்றுதான் அழைக்கின்றன. மாற்றாமல் இருப்பதுதான் நல்லது. மலேசியாவில் வாழும் தமிழர்கள் எப்படி அழைத்து வருகிறார்களோ அப்படியே அழைப்போம்.-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் --ksmuthukrishnan 15:04, 11 பெப்ரவரி 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டுரியான்_துங்கல்&oldid=1319785" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டுரியான் துங்கல்" page.