பேச்சு:டேவிசன்-செர்மர் சோதனை
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by TNSE MANI VNR
Kanags! நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்று கூறுங்கள்.ஒரு சிறிய கட்டுரை எழுத ஒரு வாரம் எடுத்துள்ளேன்.செய்துள்ள வேலையை ஆங்கில கட்டுரையுடன் ஒப்பிட்டு பார்க்கவும்.தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் கட்டுரைகளை ஒதுக்குவதால் பலன் இருக்கப் போவதில்லை.நல்ல வழிகாட்டலை எதிர்நோக்கியுள்ளேன்.--மணிவண்ணன் (பேச்சு) 17:20, 18 சூன் 2017 (UTC)
- @TNSE MANI VNR:, கட்டுரையின் தொடக்கத்தில் துப்புரவு தேவை என்று இடப்படுகிற வார்ப்புரு தான் தங்களை இக்கட்டுரை ஒதுக்கப்படுவதாக எண்ண வைக்கிறதோ என்று கருதுகிறேன். இந்த வார்ப்புருவை புதிய பயனர்கள் உருவாக்கும் அனைத்துக் கட்டுரைகளிலும் இட்டு வருகிறோம். மற்ற பயனர்கள் இவற்றைக் கவனித்து மேம்படுத்த உதவ வேண்டும் என்பது தான் நோக்கம். ஆசிரியர் பயிற்சியின் போது ஒரே நாளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் குவிந்த போது இந்த ஏற்பாடு அவசியமாக இருந்தது. ஏனெனில், பொருத்தமற்ற கட்டுரைகளை உடனடியாக நீக்குவதற்குப் பதில் அவற்றை மேம்படுத்த கூடுதல் உதவியும் காலமும் தந்தது. ஆனால், தற்போது நீங்கள் இட்டிருக்கும் நன்கு மேம்பட்ட கட்டுரைகளுக்கும் இதனை இடும் போது ஒரு குழப்பம் வருவதை உணர்கிறேன். @Kanags: நோக்கமும் உங்கள் கட்டுரையை ஒதுக்குவது அன்று. உங்களுக்குப் பிறகு கட்டுரையை மெருகூட்ட அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளைக் காணுங்கள். கட்டுரைகளைக் கவனம் கொடுத்து மெருகூட்டவே இவ்வேற்பாடு. எனினும், குழப்பத்தையும் தேவையற்ற தவறான புரிதலையும் தவிர்க்க துப்புரவு வார்ப்புருவை நீக்கியுள்ளேன். இக்கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. தொடர்ந்து வழமை போல பங்களியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:07, 18 சூன் 2017 (UTC
இரவிவழிகாட்டலுக்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 23:31, 18 சூன் 2017 (UTC)