TNSE MANI VNR
வாருங்கள்!
வாருங்கள், TNSE MANI VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
புகைப்பனி
தொகுவணக்கம், உங்கள் புகைப்பனி குறித்த கட்டுரைக்கு நன்றி. இக்கட்டுரையில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன், அவற்றை இங்கே பார்க்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள். நன்றி. --சண்முகம்ப7 (பேச்சு) 16:24, 9 மே 2017 (UTC) நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 09:02, 10 மே 2017 (UTC)
- வணக்கம் மணிவண்ணன். புகைப்பணி குறித்த ஆங்கிலக் கட்டுரை [1] இதனைப்பார்த்தும் தங்கள் கட்டுரையை மேம்படுத்தலாம். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:40, 20 மே 2017 (UTC)
சகோதரி தங்கள் ஆலோசனைக்கு நன்றி....--மணிவண்ணன் (பேச்சு) 17:08, 20 மே 2017 (UTC)
நியூட்டனின் வளையங்கள்
தொகுவணக்கம் மணிவண்ணன், உங்களது நியூட்டனின் வளையங்கள் கட்டுரை மிகவும் நன்றாக அமைந்துள்ளது. எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். அத்துடன் உங்களது கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அது உங்களது அடுத்தடுத்த கட்டுரைகளை மென்மேலும் விக்கியின் நடைமுறைக்கு ஏற்றவாறு மேம்படுத்த உதவும். தொடர்ந்து பல இயற்பியல் கட்டுரைகளை தமிழ் விக்கிக்கு அளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் உதவிகளை இங்கோ அல்லது எனது பேச்சுப் பக்கத்திலோ தயக்கமின்றிக் கேட்கவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:16, 20 மே 2017 (UTC) மிக்க நன்றி நண்பரே...தொடர்ந்த வழி காட்டுங்கள்...இயற்பியல் பங்களிப்பைத் தொடர உதவுங்கள்...--மணிவண்ணன் (பேச்சு) 05:45, 20 மே 2017 (UTC)
தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் மாற்றங்களை கவனிக்கிறேன்.விரைவில் கட்டுரையை என்னால் விக்கிப்படுத்த முயலும் என நம்புகிறேன்.ஆதரவுக்கு நன்றி..--மணிவண்ணன் (பேச்சு) 14:23, 20 மே 2017 (UTC)
உள்ளிணைப்புகளைப் பெற உதவும் ஒரு எளிய கருவி
தொகுமணிவண்ணன், ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது, இக்கருவியை நிறுவி அதனைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும்.
ஆவி கட்டுரை ஒன்றில் நீல இணைப்பாகக் காணப்படும் கட்டுரைகளுக்கு இணையான தமிழ் விக்கிக் கட்டுரைகளை இக்கருவி தேர்வு செய்து தந்துவிடும். நாம் உருவாக்கும் கட்டுரைகளில் அமையக்கூடிய சிவப்பு இணைப்புகளை இக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம்.
கருவியின் பக்கத்திற்குச் சென்று அங்குள்ள வழிகாட்டலைப் பின்பற்றி நீங்களாக அதனை நிறுவ முயற்சி செய்யலாம் அல்லது இதனை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து உங்கள் விக்கிப் பயிற்சியாளரிடம் கேட்டு அறியலாம். தவறாது நிறுவிக் கொள்ளுங்கள், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:11, 3 சூன் 2017 (UTC)
தங்களின் ஆலோசனைக்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:25, 3 சூன் 2017 (UTC)
மொழிபெயர்ப்புகள் கருவியைப் (content translation) பற்றி
தொகுவணக்கம் ஐயா, தங்கள் கவனத்திற்கு. தாங்கள் தற்போது கட்டுரைகளை உருவாக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் (content translation) பயன்படுத்தி வருகிறீர்கள். மொழிபெயர்ப்புக் கருவியை முதல் முறை புதிய கட்டுரையை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்த இயலும். ஒருமுறை நீங்கள் கட்டுரையைப் பதிப்பித்து விட்டால், அதனைத் வழமையான விக்கிப் பக்கங்கள் போன்ற திருத்தவும் விரிவாக்கவும் வேண்டும். மீண்டும் அதே கட்டுரையை விரிவாக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தக் கூடாது. பார்க்க: ரூதர்போர்டு சிதறல். தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. Mohammed Ammar (பேச்சு) 11:40, 5 சூன் 2017 (UTC) நன்றி ஐயா...நீங்கள் கூறியதை மிகவும் தாமதமாகவே உணர்ந்தேன்..இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.ஊக்கப்படுத்தியற்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 15:11, 5 சூன் 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
தொகுஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். இது தொடர்பாக On duty விடுப்பு தேவை எனில், கல்வித் துறையில் உரிய ஒப்புதல் பெற முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:37, 20 சூன் 2017 (UTC
- இரவி துறை சார்ந்த சில காரணங்களால்,தங்கள் அழைப்பை ஏற்க இயலவில்லை.அழைத்தமைக்கு மிக்க நன்றி --மணிவண்ணன் (பேச்சு) 13:05, 21 சூன் 2017 (UTC)
- ஓ, சரி. அடுத்த முறை இயன்றால் கலந்து கொள்ள வேண்டுகிறேன். உங்கள் மாவட்ட வாட்சாப்புக் குழுவில் தேவைப்படும் உதவிகளை நல்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:59, 21 சூன் 2017 (UTC)
இரவிகட்டாயம் கலந்து கொள்கிறேன்.வாட்சாப்பிலும் உதவிகளைச் செய்கிறேன்.தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 01:52, 22 சூன் 2017 (UTC)
எஎறனெதெ--இரவி (பேச்சு) 07:31, 22 சூன் 2017 (UTC)
உதவிக் குறிப்புகள்...
தொகுவணக்கம்! ஆர்.நடேசன் என்பதனை ஆர். நடேசன் என நகர்த்துங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:19, 18 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் சரி அவ்வாறே செய்கிறேன்.நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 02:25, 18 சூலை 2017 (UTC)
வேண்டுகோள்: பக்கம் நகர்த்தல்
தொகுநீங்கள் தொடர்ந்து விக்கியில் பங்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழிமாற்று இன்றி ஒரு புள்ளியுள்ள தலைப்பை நகர்த்த தங்களுக்கு இயலாது என்பதால், இனி அதனை செய்ய வேண்டாம். அனைத்து தமிழக ஆசிரியரின் கட்டுரைகளின் தலைப்பையும் விக்கி விதிகளுக்கு ஏற்ப நான் நகர்த்த உள்ளேன். எனவே, நீங்கள் மற்ற பங்களிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிக் கொள்கிறேன். வணக்கம் --த♥உழவன் (உரை) 02:26, 18 சூலை 2017 (UTC) த♥உழவன்அனுபவக் குறைவால் நிகழ்ந்த தவறு.இனி நடவாது பார்த்துக் கொள்கிறேன்...நன்றி..மணிவண்ணன்--மணிவண்ணன் (பேச்சு) 05:09, 18 சூலை 2017 (UTC)
தங்களின் கவனத்திற்கு...
தொகுவணக்கம். இந்த திருத்தத்தை கவனியுங்கள். இலக்கணப் பிழையால் ஏற்பட்டிருந்த பொருள் பிழையையும் தங்களால் உணர இயலும். இலக்கணப் பிழைகளைத் திருத்துவதும் துப்புரவுப் பணியின் ஒரு அங்கம் என்பதனை கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 19 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் மாற்றங்களைப் புரிந்து கொண்டேன்.நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:46, 19 சூலை 2017 (UTC)
வணக்கம். இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். துறைசார்ந்த ஒரு பகுப்பாவது குறைந்தபட்சம் சேர்ப்பது முக்கியம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:10, 21 சூலை 2017 (UTC)
மா. செல்வசிவகுருநாதன் மாற்றங்களை கவனித்தேன்..நன்றி..--மணிவண்ணன் (பேச்சு) 06:24, 21 சூலை 2017 (UTC)
உதவிக் குறிப்பு...
தொகுவணக்கம்! ஆர். சாமி கட்டுரையில் முதல் மேற்கோள் வேலை செய்யவில்லை பாருங்கள். 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு இங்குள்ளது. அதாவது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கொண்ட இணைப்பு. எதாவது கட்டுரையில் மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:58, 22 சூலை 2017 (UTC) மா. செல்வசிவகுருநாதன் கட்டாயம் பயன்படுத்துகிறேன்..நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 08:04, 22 சூலை 2017 (UTC)
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
தங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன :). தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள். --மாதவன் (பேச்சு) 16:04, 21 ஆகத்து 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
மாதவன் நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 16:09, 21 ஆகத்து 2017 (UTC)
- விருப்பம்--மாதவன் (பேச்சு) 16:17, 21 ஆகத்து 2017 (UTC
- விருப்பம் வாழ்த்துக்கள்!பயனர்:TNSE Mahalingm VNRமகாலிங்கம் (பேச்சு) 09:30, 25 ஆகத்து 2017 (UTC)
மகாலிங்கம் நன்றி--மணிவண்ணன் (பேச்சு) 15:37, 23 ஆகத்து 2017 (UTC)
குறிப்பு
தொகுஉரையாடல் பக்கத்தில் உங்களுக்கு அளிக்கப்படும் பதக்கங்களை, உங்களது பயனர் பக்கத்தில் நீங்கள் காட்சிப்படுத்தலாம்; அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.
பிற பயனர்கள் தங்கள் வாழ்த்தினை உரையாடல் பக்கத்தில் உள்ள பதக்கத்தின் கீழ்தான் தெரிவிக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு மகாலிங்கம் தெரிவித்த வாழ்த்துச் செய்தியினை உங்கள் பயனர் பக்கத்திலிருந்து உரையாடல் பக்கத்திற்கு மாற்றினேன். @TNSE Mahalingam VNR:.--Booradleyp1 (பேச்சு) 04:56, 24 ஆகத்து 2017 (UTC)
Booradleyp1 நீங்கள் மாற்றியதன் காரணம் ஏற்கனவே புரிந்து விட்டது. எனினும் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 05:21, 24 ஆகத்து 2017 (UTC)
மணிவண்ணன், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரடே அலைகள் மூலமாக விக்கிப்பீடியாவிற்குள் மீண்டும் உங்கள் முத்திரையைப் பதித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரவும். தமிழில் புதிய இயற்பியல் கட்டுரைகளைத் தந்து மாணவர்களுக்கு உதவுங்கள்.--மகாலிங்கம் (பேச்சு) 00:49, 11 நவம்பர் 2017 (UTC)
மகாலிங்கம்நன்றி --சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 13:59, 11 நவம்பர் 2017 (UTC)
இரட்டை வில்லை
தொகுவணக்கம். முனைப்பாக இயற்பியல் கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாரட்டுகள். இரட்டை வில்லை கட்டுரையில் "வகைகள்"-துணைத் தலைப்பில் \\These are called "un-cemented", "air-spaced" or "broken contact" doublets\\ என்ற வாக்கியம் தமிழாக்கம் பெறாமல் விடுபட்டுள்ளது. சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:50, 25 சனவரி 2018 (UTC)
தவறு சரி செய்யப்பட்டுவிட்டது. சுட்டிக் காட்டியமைக்கும், தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஊக்கத்திற்கும் நன்றி.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 07:02, 26 சனவரி 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள மணிவண்ணன்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)
தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி, மிகவும் பாரட்டுக்குரியது. என்னால் இயன்ற வரை ஒத்துழைப்பேன்...நன்றி.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 08:47, 11 மார்ச் 2018 (UTC)
- மகிழ்ச்சி, மணிவண்ணன். கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:50, 13 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்!
தொகுவணக்கம், மணிவண்ணன். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.
குறிப்பாக,
- ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 10,000 கட்டுரைகள் (தமிழில்)
- ஒவ்வொரு இந்திய மொழி விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள்
- மேற்கண்டவை தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் என்று இனங்கண்டு 500 கட்டுரைகள் வரை போட்டிக்குச் சேர்க்கலாம். இவை தமிழ் ஆளுமைகள், படைப்புகள், வரலாறு, இடங்கள் (இவை எடுத்துக்காட்டுக்கு மட்டுமே) போன்ற 5 பகுப்புகளின் கீழ் அமையலாம். உங்கள் பரிந்துரைகளைத் தெரிவித்தால், இவ்வாறான தலைப்புகளையும் அறிவிக்கலாம்.
எனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:12, 16 ஏப்ரல் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்
தொகுவணக்கம்.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.
இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.
நன்றி.
வேங்கைத் திட்டம்
தொகுவேங்கைத் திட்டத்தில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கும் பயனுள்ள தலைப்புகளில் கட்டுரை எழுதுவதற்கும்வாழ்த்துகளும் எனது நன்றிகளும். வாழ்க வளமுடன். Dsesringp (பேச்சு) 12:40, 7 மே 2018 (UTC)
Dsesringp மிக்க நன்றி...உங்கள் பங்களிப்பு மிக அபாரம்.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 15:28, 7 மே 2018 (UTC)
Thank you for keeping Wikipedia thriving in India
தொகுI wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.
Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.
This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.
Your efforts can change the future of Wikipedia in India.
You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:
https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics
Thank you,
— Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி
மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!
தொகுவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி
வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!
தொகுவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி
வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
தொகுபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
Project Tiger 2.0
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
We are glad to inform you that Project Tiger 2.0/GLOW is going to start very soon. You know about Project Tiger first iteration where we saw exciting and encouraging participation from different Indian Wikimedia communities. To know about Project Tiger 1.0 please see this page
Like project Tiger 1.0, This iteration will have 2 components
- Infrastructure support - Supporting Wikimedians from India with internet support for 6 months and providing Chromebooks. Application is open from 25th August 2019 to 14 September 2019. To know more please visit
- Article writing contest - A 3-month article writing contest will be conducted for Indian Wikimedians communities. Following community feedback, we noted some community members wanted the process of article list generation to be improved. In this iteration, there will be at least two lists of articles
- Google-generated list,
- Community suggested list. Google generated list will be given to the community members before finalising the final list. On the other hand, the community may create a list by discussing among the community over Village pump, Mailing list and similar discussion channels.
Thanks for your attention,
Ananth (CIS-A2K) (talk)
Sent by MediaWiki message delivery (பேச்சு) 11:41, 21 ஆகத்து 2019 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவிக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகுசெம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு