இரட்டை வில்லை
இரட்டை வில்லை (Doublet) என்பது ஒரு வில்லை வகையாகும். இதில் இரு ஒற்றை வில்லைகள் இணைக்கப்படுவதால் உருவாக்கப்படுகிறது. இவ்வகை வில்லைகள் அனைத்து வகைப் பிறழ்ச்சிகளையும் நீக்க பயன்படுகிறது.
வகைகள்
தொகுஇரட்டை வில்லைகள், பல வகைகளில் இருந்தாலும் நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை நிறப்பிறழ்ச்சி மற்றும் கோளப் பிறழ்ச்சி ஆகியவற்றை நீக்க உதவுகிறது. இவ்வகை வில்லைகளில் வேறுபட்ட ஒளி விலகல் எண்கள் மற்றும் நிறப்பிரிகைத் திறன் கொண்ட ஒற்றை வில்லைகள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு கண்ணாடி கிரௌன் கண்ணாடியாகவும் மற்றொன்று தீக்கல் கண்ணாடியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை ஒற்றை வில்லைகளை விட சிறந்த பிம்பங்களை உருவாக்கப் உதவுகிறது. அழிந்து மறைந்த முக்கூற்று உடல் தொல்லுயிரிகள் (Trilobite) இயற்கையாகவே இரட்டை வில்லைகளைக் கொண்ட கண்களைப் பெற்றிருந்தது.[1] நிறகோளப்பிறழ்ச்சிகளில்லாத வில்லைகளும் (Apochromat) இரட்டை வில்லைகளாக உருவாக்கப்படுகிறது.
இரட்டை வில்லைகள் காற்றால் நிரப்பப்பட்டோ, ஒட்டப்பட்டோ அல்லது எண்ணெயால் நிரப்பப்பட்டோ இருக்கும். மேற்பரப்பு இழுவிசைக் கொண்ட எண்ணெகளே இரட்டை வில்லைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒட்டப்பட்ட இரட்டை வில்லைகளில், ஒளி புகும் தன்மை பசைகள் பயன்படுத்தப்படுகிறது. இப்பாக்சி மற்றும் கனடா பால்சம் போன்ற பசைகள் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில வகை இரட்டை வில்லைகளில் எந்த வகை பசைகளும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறுப்பட்ட வெப்ப விரிவுகளைக் கொண்ட வில்லைகளை ஒட்டுவது இயலாததாகிறது.[2] இவை பசையால் ஒட்டப்படாத அல்லது காற்றால் நிரப்பப்பட்ட அல்லது உடைந்த இணைப்பைக் கொண்ட இரட்டை வில்லைகள் எனப்படுகிறது.[3] காற்றால் நிரப்பப்படும் இரட்டை வில்லைகள், ஒன்று சேர்க்க இயலாத அளவிற்கான வளைவுகளைப் பெற்றிருக்கும்.[4]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Clarkson, E. N. K.; Levi-Setti, R. L. (1975), "Trilobite eyes and the optics of Descartes and Huygens", Nature, 254 (5502): 663–7, Bibcode:1975Natur.254..663C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/254663a0, PMID 1091864
- ↑ Fred A. Carson, Basic optics and optical instruments, page 4-32
- ↑ A guide to instrument design – Scientific Instrument Manufacturers' Association of Great Britain, British Scientific Instrument Research Association, page 184
- ↑ Fred A. Carson, Basic optics and optical instruments, page AJ-4