பேச்சு:டைட்டன் (துணைக்கோள்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
பூமியின் துணைக்கோள் நிலவு என்று அழைக்கப்படுவதால். டைட்டன்(துணைக்கோள்) போன்று பொதுப் பெயர் வைக்கலாம் என பரிந்துரைக்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 04:33, 5 மே 2012 (UTC)
- பூமிக்கு மட்டுமல்லாமல் அனைத்து கோள்களுக்கும் இயற்கைத் துணைக்கோள் அல்லது நிலவு உண்டு. இரண்டும் ஒரு பொருள்படக்கூடியது என கருதுகிறேன்.. பார்க்க என்சலடசு (நிலவு), சனியின் நிலவுகள்.. மேலும் டைட்டன் (துணைக்கோள்) என வைப்பதும் சரியே.. ( ஃபீபி (துணைக்கோள்) ).. பூமியின் நிலவை நாம் நிலா என அழைக்கிறோம். மற்றவற்றின் நிலவை அதற்குரிய பெயருடன் நிலவு அல்லது துணைக்கோள் என சேர்த்து அழைக்கலாம் என கருதுகிறேன்.. இதுபற்றி மேலும் அறிந்தவர்கள் இருந்தால் கூறவும்--shanmugam (பேச்சு) 04:48, 5 மே 2012 (UTC)
- நிலவு, நிலா ஆகிய வார்த்தைகள் நம்மில் புவியின் நிலவு எனும் உணர்வையே பெரிதும் தருவதால் டைட்டன் (துணைக்கோள்) எனப்பெயரிடுவதே சரியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:26, 28 மே 2012 (UTC)
- நிலவு என்பது புவியின் நிலவுடன் குழப்பிக் கொள்ளக்கூடியது தான். துணைக்கோள் என்றே சீராகப் பெயரிடலாம்.--இரவி (பேச்சு) 13:49, 28 மே 2012 (UTC)
- நிலவு, நிலா ஆகிய வார்த்தைகள் நம்மில் புவியின் நிலவு எனும் உணர்வையே பெரிதும் தருவதால் டைட்டன் (துணைக்கோள்) எனப்பெயரிடுவதே சரியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:26, 28 மே 2012 (UTC)