பேச்சு:தனிம அட்டவணை
இவ் அட்டவணையில் நெடுங்குழுக்கள் (group) தவறாக உள்ளன. லாத்தனைடுகளைக் காட்டுவதற்காக இடப்பட்ட நாள்மீன் குறி, இதில் ஒரு தனி நெடுங்குழுவாக தவறாக உள்ளது. எனவே இதனை மாற்றுதல் வேண்டும். மேலும் ஆவர்த்தன அட்டவணை என்பதை விட சுருக்கமாக தனிம அட்டவணை எனலாம். அல்லது, தனிமங்களில் பண்புகள் சீரான முறையில் அமையுமாறு அடுக்கபட்ட சிறப்பான அட்டவணை என்பதால், இதனைத் தனிமச்சீர் அட்டவணை என்றோ, தனிமச் சுழற்சி அட்டவணை என்றோ பெயரிடலாம். ஆவர்த்தனம் என்பது சமசுகிருத மொழியில் வட்டம் என்று பொருள் தருவது. ஏன் எல்லோரும் புரிந்து கொள்ளும் வட்டம் என்பதை இடவில்லை?! வட்டம் என்பதை விட ஒரு சீர்மையுடன் அடுக்கப்படும் அட்டவணை என்பது பொருந்தும் என்று நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் வருவது என்னும் பொருளில் வட்டம், சுழற்சி, ஆவர்த்தனம் என்னும் சொற்களும் பொருந்தும் என்பது உண்மைதான். தமிழில் வட்டம், ஆழி, சில்லு, சில்லி, சுழல், சுற்று, வளையம், உருளி, கடகம், கணம், பரி, பாலிகை, மல்லை, வட்டகை, வட்டணை, வல்லை, வெறி, வலயம் என்று குறைந்தது 10-15 சொற்களுக்கு மேல் வட்டம் என்னும் பொருள் தரும் சொற்கள் உள்ளன. எனவே ஆவர்த்தனம் என்று சொல்லத்தான் வேண்டுமா? தனிம வட்டணை என்றால் பண்புகள் வட்டித்து வரும்வதாயும், ஓர் அட்டவணையாய் அமைந்துள்ளது என்றும் குறிப்பாக உணர்த்துமாறு வருமே! சற்று சுருக்கமாகவும் இருக்கும். எனவே நெடுங்குழுவைத் திருத்தும் பொழுது, பெயரையும் தனிமச் சீரட்டவணை என்றோ வேறு ஒரு நல்ல பெயரால் (எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாய்) அழைப்பது நல்லது என்று நினைக்கிறேன். --செல்வா 15:43, 31 மே 2008 (UTC)
- தனிம வட்டணை நன்றாக உள்ளது. பார்த்தவுடன் பொருள் கொள்ளத் தகுந்தது. -- சுந்தர் \பேச்சு 16:33, 31 மே 2008 (UTC)
- கருத்துக்கு நன்றி. --செல்வா 16:53, 31 மே 2008 (UTC)
தனிம வட்டணை அல்லது தனிம அட்டவணை என்று தலைப்பை மாற்றலாமா? ஆவர்த்தனம் என்பது வட்டம். எளிதாக தனிம அட்டவணை என்று மாற்றலாம் அல்லது தனிம வட்டணை என்றும் கூறலாம். ஆவர்த்தன அட்டவணை என்று தேடுவோர்க்கு வழி மாற்றும் இருக்கும். மேலும் ஆவர்த்த அட்டவணை என்பது எதன் அட்டவணை என்னும் செய்தியும் இல்லை. எனவே நான் பரிந்துரைக்கும் இரண்டில் ஒன்று சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். யாரும் மறுப்பு அல்லது மாற்று கருத்து தெரிவிக்கவில்லை என்றால் தனிம வட்டணை என்று மாற்ற இருக்கின்றேன்.--செல்வா 14:14, 26 நவம்பர் 2008 (UTC)
தனிம அட்டவணை என்றே பள்ளியில் படித்த நினைவு. --குறும்பன் 19:04, 26 நவம்பர் 2008 (UTC)
- உங்கள் கருத்துக்கு நன்றி, குறும்பன்! கட்டாயம் தனிம அட்டவணை என்று மாற்றலாம். periodic என்னும் சொற்பொருள் முக்கியம் என்றால், வட்டணை என்று சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் சில பயனர்கள் கருத்து தெரிவிக்கட்டும், பின்னர் தனிம அட்டவணை என்றோ தனிம வட்டணை என்றோ மாற்றலாம். --செல்வா 20:09, 26 நவம்பர் 2008 (UTC)
தனிம அட்டவணை நன்று. --Natkeeran 21:50, 26 நவம்பர் 2008 (UTC)
- ஆம் தனிம அட்டவணை தலைப்பு நன்றாக இருக்கின்றது. ஆயினும் இலங்கைப் பயனர்களின் பாடத்திட்டத்தில் ஆவர்த்தன அட்டவணை என்றே தமிழாக்கப்பட்டிருப்பதால் கட்டுரையில் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுத் தொடரலாம். --உமாபதி \பேச்சு 02:41, 27 நவம்பர் 2008 (UTC)