பேச்சு:தப்ரபேன்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by HK Arun
மிக்க நன்றி அன்ரன் மிக முக்கியமான ஒரு கட்டுரையை தொடங்கியுள்ளீர்கள். இந்த "தப்ரபேன்" பெயர் இலங்கைக்கு இடப்பட்ட பெயரா அல்லது வேறு ஏதாவது ஒரு நிலப்பரப்புக்கு இடப்பட்ட பெயரா என்பதில் பல ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. வரைப்படம் இலங்கையை குறிப்பதாக சிலரும், இல்லை அது இலங்கையின் புவியியல் வடிவமைப்பு மாதிரி இல்லை எனும் வாதங்களும் உள்ளன. சற்று ஆய்வுசெய்து தொகுத்தால் மிக முக்கியான ஒரு கட்டுரையாக அமையும். நன்றி!--HK Arun (பேச்சு) 03:11, 29 திசம்பர் 2012 (UTC)
- தமிழ் ஈழம்: நாட்டு எல்லைகள் என்ற நூல் கிடைத்தால், பாருங்கள். அது இலங்கை என்று குறிப்படுகின்றது. அதில் தாலமியின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட பெயர்களில் சில இவ்வாறு காட்டப்பட்டுள்ளன:
- பருத்தித்துறை - Boreu
- மாதோட்டம் - Modutti
- திருகோணமலை - Anubingara
- குமணை - Bocani
- உரோகணம் - Rhogandani
- அநுரதகிராமம் - Anuro grammi
- இந்தியா - Indae
- Children Of The Lion (By Carl Muller) எனும் நூலும் இதற்கு சார்பான கருத்தையே வெளிப்படுத்துகின்றது. அதில் "நாகதீபம்" மட்டக்களப்பு என குறிப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வரலாற்றில் இதனைச் சேர்க்கலாமா எனவும் கருத இடமுள்ளது. ஆயினும், தீர்க்கமான தகவல்களைப் பெறுவதில் சிக்கல் உள்ளது. --Anton (பேச்சு) 08:05, 29 திசம்பர் 2012 (UTC)
- பரிந்துரைக்கு நன்றி அன்டன், அந்நூலை பார்க்க வேண்டும் ஆவல் எனக்குள்ளது. முன்பு நூலகத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள் ஆனால் தற்போது இணைப்பு வேலைசெய்யவில்லை. நன்றி --HK Arun (பேச்சு) 04:30, 30 திசம்பர் 2012 (UTC)