பேச்சு:தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
- தமிழ்த் திரைப்படங்கள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. அவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலில் தொகுப்பது சாத்தியமில்லை. ஆண்டு வாரியாகத் தொகுப்பது சாத்தியமானது. ஏனெனில் பல இதழ்களும் ஆண்டு முடிவில் பட்டியலிடுவதை அவதானித்துள்ளேன். முழுமையில்லாத பட்டியல்களால் அதிக பயனில்லை. --கோபி 15:43, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
- நிரோஜன், உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள். ஆண்டுவாரியாகக் கூட எல்லாவற்றையும் ஒரே பட்டியலில் இடுவது சாத்தியமில்லை. ஏனெனில் பல்லாயிரம் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வோராண்டுக்கும் ஒவ்வொரு பட்டியல் தேவைப்படலாம். உங்களிடம் முழுமையான விபரங்கள் இருக்கினறனவா? --கோபி 15:59, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
தமிழ் விக்கிபீடியாவிற்குள்ளேயே இது ஒரு சிறு செயற்திட்டமாகும் (project). இதைப்பற்றி சற்று முன்னோக்கி விரிவாக சிந்தித்து ஒரு வடிவமைப்பையோ அல்லது முறைவழியையோ உருவாக்குங்கள். ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு தனிப்பக்கம் உருவாக்கி, அவ்வாண்டு தமிழ் திரைப்படங்கள் பற்றியோ அல்லது அத்துறைபற்றியோ கட்டுரையையும் சேர்ப்பது நன்று என்று நினைக்கின்றேன். இப்பட்டியல் ஏற்கனவே இணையத்தில் எங்கோ ஒரு தளத்தில் கிடைக்கின்றது என்று நினைக்கின்றேன். --Natkeeran 14:59, 11 ஆகஸ்ட் 2006 (UTC)
- ஆம். ஆண்டுவாரியான பட்டியல்களே பொருத்தமாக இருக்கும். --கோபி 15:37, 11 ஆகஸ்ட் 2006 (UTC)
2005 வரை 4373 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது.
நாம் புத்தகங்களைத் தொகுப்பதற்காக உருவாக்கிய "விருபா வளர் தமிழ்" இணைய செயலியை பயன்படுத்தி தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை ஒரு பட்டியல் (Tamil MDB) ஆக காண்பிக்க முடியுமா என்று எங்களை அத்துறை சார்ந்த ஒரு நண்பர் அணுகியுள்ளார்.
எமது செயலி மூலம் இது சாத்தியமே, ஒவ்வொரு திரைப்படம் பற்றியும் அதனுடன் தொடர்புடைய பல மேலதிக விடயங்களை, அதாவது கதாநாயகன், நாயகி, இயக்குநர், பாடல்கள், பாடகர்கள், கதைவசனம், இப்படி பல மேலதிக விடயங்களை காண்பிக்க முடியும், கூடவே தொடர்புடைய பல படிமங்களையும் (Image), அசையும் தன்மையுடைய கோப்புகளையும் (Vedio) எமது செயலி மூலம் தொகுத்துக் காண்பிப்பதற்கு ஏற்ப செயலியிலும் Database strucure இலும் சில் மாறுதல்களை செய்துகொண்டிருக்கின்றோம்.
எனது தனிப்பட்ட விருப்பின்பேரில் புத்தகங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்.விரைவில் எமது இணைய செயலியின் உதவியுடன் நண்பர் திரைப்படங்கள் பற்றிய தகவல் திரட்டை வெளிக்கொண்டுவருவார்.--விருபா 15:38, 11 ஆகஸ்ட் 2006 (UTC)
சுருங்கிய பொருளடக்கம்
தொகுதானியங்கி பொருளடக்கம் இங்கு பொருத்தமாக படவில்லை, மிகவும் நீண்டு விட்டது. இக்கட்டுரையின் பிற பயனர்களும் விரும்பினால் தற்போது உள்ளவாறு சுருக்கமாக இணைப்புக்களை தரலாம். --Natkeeran 15:18, 4 செப்டெம்பர் 2006 (UTC)
எண்ணிக்கை பற்றிய தகவல்கள், வரிசைப்படுத்தல்
தொகுஅகர வரிசைப்படுத்தினால் நன்று. அப்படி வரிசைப்படுத்துகையில்
- படம்1
- படம்2
- படம்3
என்று பட்டியலிட்டால் இலகுவில் பிற பட்டியல்களுடன் ஒப்பிட்டு விடுபட்ட படங்களை சேர்த்துக்கொள்ளலாம். --Natkeeran 15:36, 4 செப்டெம்பர் 2006 (UTC)
அகரவரிசைப் படுத்தல்
தொகுஇப்பட்டியல் அகரவரிசைப்படுத்தல்தான் நன்று. இலாவிட்டால் பயனர்கள் தங்களுக்கு விரும்பிய படங்களை முதலில் தர முயலுவார்கள். --Natkeeran 16:58, 1 அக்டோபர் 2006 (UTC)
அகரவரிசைப்படுத்தலே நன்று அந்த முயற்சியில் தான் ஆரம்பத்தேன்.ஆனால் பல காரணங்களால் அவ்வாறு செய்ய இயலவில்லை இனிமேல் அகரவரிசைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 17:01, 1 அக்டோபர் 2006 (UTC)
பட்டியலை ஆண்டுவாரியாகப் பிரித்தல்
தொகுஇப்பட்டியல் மிகவும் நீண்டு விட்டது. ஒரு பக்கத்துக்கு இது மிகவும் (மிகவும்) அதிகம். ஆண்டுவாரியாக இப்போதே பிரித்தல் நல்லது. இப்பக்கம் மூலப் பக்கமாக இருக்கலாம். ஆண்டுவாரியாக, உ+ம்: தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006 போன்றவற்றைத் தோற்றுவித்து அவற்றுக்கு இங்கிருந்து இணைப்புத் தரலாம். வேறு ஆலோசனை இருந்தால் விரைவில் தெரிவித்தால் நல்லது.--Kanags 09:30, 8 ஜனவரி 2007 (UTC)
ஆம் உங்கள் முடிவு சரியானதே.--நிரோஜன் சக்திவேல் 16:24, 8 ஜனவரி 2007 (UTC)
இலக்கமிடுவது
தொகுஇலக்கமிடுவது எனக்கு சரியாகப்படவில்லை ஏனெனில் நீளமாகவுள்ள இப்பட்டியலில் இடுவதனை விட ஆண்டு வாரியான பட்டியலில் இடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.காரணம் இலக்கமிடும் பொழுது புதிய ஆண்டு தொடங்கும்போது திரும்பவும் ஒன்றில் இருந்து தொடங்குகின்றாது அப்படி இல்லாமல் வரிசையாகத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 20:25, 8 ஜனவரி 2007 (UTC)
எவ்வளவு நீளமாக இருந்தாலும் பரவாயில்லை
தொகுஇப்பட்டியல் முடிந்த அளவு முழுமையாக இருக்க வேண்டும் காரணம் இப்பட்டியன் மூலமே மொத்த எண்ணிக்கையினை இலகுவாக அறிந்து கொள்ள இயலும் மேலும் ஆண்டுப் பட்டியலில் நிறைவேற்றப்படாத ஆண்டுகளினை தொகுக்க ஆரம்பிக்க வேண்டாம்.--நிரோஜன் சக்திவேல் 04:52, 7 பெப்ரவரி 2007 (UTC)
- நிரோ, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. தனியான ஆண்டுப் பட்டியல்கள் தேவையில்லையா?--Kanags 07:13, 7 பெப்ரவரி 2007 (UTC)
இல்லை நீங்கள் உருவாக்கிய ஆண்டுப்பட்டியல் மிகவும் அவசியம் அதே போல் நான் உருவாக்கிய பட்டியலை அகரவரிசைப்படி மாற்றி இலக்கமிடத்திட்டம் காரணம் அதனால் மொத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கைகளினையும் இலகுவாக அறிய முடியும் மேலும் அப்பட்டியலும் முக்கியமானதாகக் கருதுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 14:17, 7 பெப்ரவரி 2007 (UTC)
இற்றைப்படுத்தல்
தொகுஆயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அரசின் திரைத்துறையின் அங்கீகாரம் பெற்றும், பிரபலமாகாத படங்கள் பலவும் உள்ளன. குறிப்பிடத்தக்கவற்றை மட்டுமே சேர்க்க முடியும். ஆண்டுவாரியாக தமிழ்த் திரைப்படங்களை, பகுப்புகளின் மூலம் அடையாளம் கண்டு கட்டுரையில் சேர்க்க வேண்டும். பின்னர், அவற்றை அகர வரிசைப் படுத்த வேண்டும். நீண்ட பட்டியலாக விரியும் என்பதால், ”அ-ஊ, எ-ஔ/ஃ, க-ஞ, ட-ந, ப-ர, ல-ன, ஜ-ஹ” என பிரித்து, பட்டியலாக்கிவிட்டால் வேலை மிச்சமாகும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:50, 14 ஆகத்து 2014 (UTC)
- ஆம் நீங்கள் குறிப்பிட்டது போலவே அ. ஆ. இ. ஈ. என தனித்தனியாகப் பிரிக்கலாம். கைபேசியில் தொகுப்பவர்களுக்கும் மிகவும் எளிதாக இருக்கும். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 16:25, 3 திசம்பர் 2022 (UTC)