பேச்சு:தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும்

தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

//கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன், ஜானகி ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா என திரைப்படத் துறையினர் ஐந்து பேர் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளனர்.//

அண்ணாதுரையும் மு. கருணாநிதியும் அரசியலில் தொடங்கி திரைப்படத் துறையிலும் பணி புரிந்தார்களா? திரைப்படத்துறையில் தொடங்கி அரசியலுக்கு வந்தனரா? இருவருக்கும் பன்முக அடையாளங்கள் உள்ளன. இருவரும் எழுத்தாளர்கள் என்பதால் எழுத்துத்துறையைச் சேர்ந்த முதல்வர்கள் என்று குறிப்பிட்டு விட முடியுமா?

மேற்கண்ட ஐவரையும் பொத்தாம் பொதுவாக திரைப்படத் துறையைச் சார்ந்த முதல்வர்கள் என்பது சரியாத் தோன்றவில்லை--இரவி 15:18, 19 பெப்ரவரி 2012 (UTC)

பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை, திரைத்துறையினரைத் திரைத்துறையினர் என்றே சுட்டுகிறது. பிற துறை பின்புலம் இருப்பினும், இவ்விருவருக்கும் குறிப்பிடத்தக்க திரைத்துறைப் பினபுலமும் உண்டு. இக்கட்டுரை அவர்கள் திரைத்துறையை மட்டும் சார்ந்தவர்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. ”எழுத்துத்துறையைச் சேர்ந்த முதல்வர்கள் என்று குறிப்பிட்டு விட முடியுமா”. தாராளமாக, கருணாநிதியும், அண்ணாவும், இவ்வாறும் பலமுறை தங்களையே அடையாளம் காட்டியுள்ளனர். (திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்றும் வேறு பல இடங்களில் அடையாளம் காட்டியுள்ளனர், இது தவிர மு.க தன்னை இதழாளர் என்றும் அடையாளம் காட்டியுள்ளார், நெஞ்சுக்கு நீதியில் தன்னை சினிமாக்காரராக அடையாளப்படுத்தியே தன் வரலாற்றை எழுதியுள்ளார்). பன்முக அடையாளங்கள் இருப்பதால், ஒருவர் அவற்றில் ஒன்றைச் சார்ந்தவர் அல்ல என்றாகி விடாது. எங்கு தொடங்கி எங்கு சென்றாலும், இவர்கள் இருவருக்கும் திரைத்துறையோடு குறிப்பிடத்தக்கத் தொடர்பு உண்டு, அவர்களே தங்களைத் திரைத்துறையினர் என்று அடையாளமும் காட்டியுள்ளனர். திரைத்துறை-திராவிட அரசியல் பற்றிக் கூறும் நூல்களும், அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களும் இவ்வாறே அடையாளம் காட்டுகின்றன. அதையே தான் இக்கட்டுரை செய்கிறது. --சோடாபாட்டில்உரையாடுக 15:41, 19 பெப்ரவரி 2012 (UTC)

//என திரைப்படத் துறையினர் ஐந்து பேர் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளனர்//

இதை

//என திரைப்படத் துறை தொடர்புடைய ஐந்து பேர் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ளனர்//

என மாற்றுவது ஏற்புடையதாக இருக்கும்--இரவி 15:59, 19 பெப்ரவரி 2012 (UTC)

Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 16:04, 19 பெப்ரவரி 2012 (UTC)

முனைவர் பாவேந்தன் நூல்கள் தொகு

முனைவர் பாவேந்தன் திராவிட அரசியல் வரலாறு, திரைப்படத்துறையினரின் தாக்கம் பற்றி நல்ல நூல்(/கள்) தமிழில் எழுதியுள்ளார், என்னிடம் தற்போது அந்நூல்(/கள்), இல்லை. துல்லியமான தகவல் கிடைத்தால் அளிக்கின்றேன். --செல்வா 17:06, 19 பெப்ரவரி 2012 (UTC)

Return to "தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும்" page.