பேச்சு:தமிழ்த் தேசியம்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by செ.இளங்கோவன் பொழில்வாய்ச்சி

இக் கட்டுரை மேலும் பலரின் பங்களிப்புடன் விரியும் என எதிர்பார்க்கின்றேன். நன்றி. --Natkeeran 00:22, 21 செப்டெம்பர் 2007 (UTC)Reply

எனது திருத்தங்களில் குறைபாடுகள் இருப்பின் எடுத்துக்கூற நண்பர்களை எதிர்பார்க்கிறேன் நன்றி பயனர்:செ.இளங்கோவன் பொழில்வாய்ச்சி

சிறப்பாகவே உள்ளன. இங்கு செய்யப்படும் திருத்தங்களை கவனித்து வந்தால் விக்கிப் பயன்பாடு எளிதாகும். வாழ்த்துகள் ! உரைகளுக்கு சான்றுகள் இணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த கட்டத்திற்கு மிகவும் தேவை.--மணியன் (பேச்சு) 15:23, 2 சூன் 2018 (UTC)Reply
அன்பு இளங்கோவன், உங்களின் உள்ளடக்கச் சேர்க்கை முதல்நிலை ஆய்வுக் கட்டுரையை ஒத்துள்ளது. இது பொதுப்பரப்பில் ஏற்புடையதாயினும் விக்கி நெறிமுறைகளுக்கு உட்பட்டதில்லை. விக்கி என்பது இரண்டாம் நிலைத் தரவுத்தளம். எனவே இக்கருத்துக்களின் முதல்நிலைச் சான்றுகளை இணைப்பது மிகவும் முக்கியமானதாகும். மேற்கோள்கள் இணைப்பது குறித்து இங்கும் இங்கும் அறிந்து கொள்ளலாம்.--மணியன் (பேச்சு) 04:15, 4 சூன் 2018 (UTC)Reply

திரு மணியன், மேற்கோள்கள், சான்றுகள், படிமங்கள் இணைப்பது குறித்து கற்றுவருகிறேன். விரைவில் (ஓரிருநாளில்) இணைப்பேன். ஓர் ஐயம்... முதல்நிலை ஆய்வுக்கட்டுரை, இரண்டாம் நிலைத் தரவுத்தளம் ஆகிய சொற்கோவைகள் எவற்றைக்குறிக்கின்றன எனப் புரியவில்லை. நன்றி பயனர்:செ.இளங்கோவன் பொழில்வாய்ச்சி

இளங்கோவன், நீங்கள் தமிழ் விக்கியில் தொடர்ந்து பங்களிக்கும்போது இவற்றைப் புரிந்துகொள்வீர்கள் ! முதல்நிலை ஆய்வுக்கட்டுரை என்பது original research, அதாவது உங்கள் ஆய்வு வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை எனப் பொருள்கொள்க. இரண்டாம் நிலை தரவுத்தளம் என்பது மற்ற இதழ்களிலும் பொதுவெளி நூல்களிலும் பிற ஊடகங்களிலும் வந்தவையே இங்கு அனுமதிக்கப்படுகின்றது. ஒவ்வொரு கூற்றுக்கும் இங்கு பொதுவெளி நூல்களிலிருந்தோ இணைய/அச்சு ஊடக பதிப்புகளிலிருந்தோ சான்று தர வேண்டும். தொகுப்பாசிரியர் இன்றி யாராலும் தொகுக்கப்படும் கட்டற்ற இக்களஞ்சியத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டவே இந்த விதிமுறைகள் உள்ளன. --மணியன் (பேச்சு) 04:45, 6 சூன் 2018 (UTC)Reply
en:WP:PSTS --AntanO (பேச்சு) 00:49, 7 சூன் 2018 (UTC)Reply

திரு மணியன், தங்களின் விளக்கத்துக்கு நன்றி --செ.இளங்கோவன் பொழில்வாய்ச்சி (பேச்சு) 05:30, 7 சூன் 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்த்_தேசியம்&oldid=2539816" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்த் தேசியம்" page.