பேச்சு:தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by ச.பிரபாகரன்
- இக்கட்டுரை ஆங்கில விக்கியில் இல்லை. ஆங்கில மொழியாண்மை மிக்கவர்கள் உருவாக்க வேண்டுகிறேன். மேலும், பல மொழியியல் சொற்களுக்கான தமிழ் பதங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. எனவே, கட்டுரையில் அடைப்புக்குள் ஆங்கிலச் சொற்களை குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது, இதனை இன்னும் ஆழமாகப் படித்து, கலந்தாய்வு செய்து மேம்படுத்த எண்ணியுள்ளேன். வணக்கம்.--≈ த♥உழவன் (கூறுக) 07:47, 3 ஏப்ரல் 2013 (UTC)
- பிரபாகரன்! இக்கட்டுரையின் ஆங்கில ஆக்கத்தைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி. தமிழின் அனைத்தெழுத்துக் குறியேற்றம் என்பதே பொருத்தமாக இருக்கும். தற்போதுள்ள, 'தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்' என்ற தலைப்பில், பிழை இருப்பதாக எண்ணுகிறேன். தங்களின் எண்ணமென்ன?--≈ த♥உழவன் ( கூறுக ) 01:01, 21 சனவரி 2014 (UTC)
- வணக்கம் தகவலுழவன், நன்றி. TACE16 மொழிபெயர்ப்பு பற்றி ஒத்தாசை பக்கத்தில் உதவி கேட்டிருந்தேன். பிறகு, INFITT(Page 5) பக்கத்தில் 'தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்' எனக் கொடுத்திருந்தார்கள். அதை, தமிழ் விக்கிசனரியில் சரிபார்க்கும் பொருட்டு, 'அனை' எனும் சொல்லின் பொருளைப் பார்த்தேன். அங்கு, ஆங்கில மொழிபெயர்ப்பில் All எனக் கொடுத்திருந்தார்கள். அதனால், அதைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொண்டேன். தவறு இருப்பின் மாற்றிவிடலாம். தரப்பாட்டின் பெயர் மிகவும் முக்கியமானது. நீண்ட காலம் நாம் பயன்படுத்தக் கூடியது. --ச.பிரபாகரன் (பேச்சு) 08:51, 21 சனவரி 2014 (UTC)
- நன்றி. பிரபாகரன்! நீங்கள் உத்தமம் அமைப்பின், செய்திக்காக உருவாக்கப்பட்ட தொடுப்பைப் பார்த்தேன். திரு. மு. பொன்னவைக்கோ (துணைவேந்தர்) அவர்களிடம் சிறிது காலம் பணிசெய்தேன். அப்பொழுது அவர் தமிழ் கணிமைப் பற்றி செல்லும் இடங்களில் எல்லாம், அனைத்து எழுத்துருத் தரப்பாடு என்றே பயன்படுத்துவதைக் கேட்டிருக்கிறேன். அவரது உரையே இக்கட்டுரையை உருவாக்க என்னைத் தூண்டியது. TACE-16 உருவாக்கத்தில் முக்கிய பங்கு இவர் வகித்தவர் என்பது தங்களுக்குத் தெரிந்து இருக்கும் என எண்ணுகிறேன். மேலும், வெளியிணைப்பில் கொடுத்துள்ள தமிழ் அறிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரைக்கு முன்பு பெயரிட்டிருந்தேன். புதியன வரும் போது, இது போன்ற பெயர் மாறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் பெயரை மாற்றும் போது, அது பற்றிய உரையாடலை தொடங்க, இங்குள்ளவர் போல, இந்த வார்ப்புரு நடைமுறையைப் பின்பற்றி மாற்றுதல் அனைவருக்குமான பொதுவானது அல்லவா?. எனவே, அந்நடைமுறையை நாம் பேணுவோம். வளர்நிலையில் இருக்கும் நமக்குள், சில கடப்பாடுகளும், கட்டுபாடுகளும் இருப்பதல் நலம் தானே? தரப்பாடு என்ற சொல்லை நீங்களே பயன்படுத்துகிறீர்கள். அதனையே இனி பின்பற்றுவோமா? தமிழக அரசின், தமிழ்அரசாணையில் எவ்வாறு உள்ளது? இதுகுறித்த அறிய ஆவல்.
- வணக்கம் தகவலுழவன், நன்றி. TACE16 மொழிபெயர்ப்பு பற்றி ஒத்தாசை பக்கத்தில் உதவி கேட்டிருந்தேன். பிறகு, INFITT(Page 5) பக்கத்தில் 'தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்' எனக் கொடுத்திருந்தார்கள். அதை, தமிழ் விக்கிசனரியில் சரிபார்க்கும் பொருட்டு, 'அனை' எனும் சொல்லின் பொருளைப் பார்த்தேன். அங்கு, ஆங்கில மொழிபெயர்ப்பில் All எனக் கொடுத்திருந்தார்கள். அதனால், அதைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொண்டேன். தவறு இருப்பின் மாற்றிவிடலாம். தரப்பாட்டின் பெயர் மிகவும் முக்கியமானது. நீண்ட காலம் நாம் பயன்படுத்தக் கூடியது. --ச.பிரபாகரன் (பேச்சு) 08:51, 21 சனவரி 2014 (UTC)
--≈ த♥உழவன் ( கூறுக ) 12:43, 21 சனவரி 2014 (UTC)
- வணக்கம் தகவலுழவன், உங்கள் கருத்து சரிதான். அனைவரிடமும் உரையாடியப்பின்பு தான் பெயர்மாற்றம் செய்யவேண்டும். இதுவரை இப்படி ஒரு வார்ப்புரு இருப்பது எனக்குத் தெரியவில்லை. தகவலுக்கு நன்றி. இதற்கு மேல் இந்நடைமுறையைப் பயன்படுத்தி பெயர்மாற்றம் செய்கிறேன். :) தரப்பாடு எனும் சொல் Standard எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாகப் படித்திருக்கிறேன். தமிழ் இணையப் பல்கலைக்கழக பக்கத்தில் 'தமிழ் அனைத்து எழுத்துரு' எனப் பயன்படுத்தியிருந்தார்கள். எழுத்துரு எனும் சொல் Font எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாகும். ஆகவே, இம்மொழிபெயர்ப்பு(Tamil All Font) தவறானது என நினைக்கிறேன். தமிழக அரசின் அரசாணையில் TACE16 எனும் சொல்லின் தமிழ் வடிவம் இல்லை. அங்கு தான் குழப்பத்தின் ஆரம்பமே!. --ச.பிரபாகரன் (பேச்சு) 13:15, 21 சனவரி 2014 (UTC)
- சரிங்க! இதுபற்றி செய்திகள் ஏதேனும் கிடைப்பின் தெரியப்படுத்துகிறேன். இனி இருமொழிகளிலும்,மேலும் கட்டுரையை வளர்த்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 15:49, 21 சனவரி 2014 (UTC)
- நன்றி -- ச.பிரபாகரன் (பேச்சு) 19:29, 22 சனவரி 2014 (UTC)