பேச்சு:தான் இலெசிலி இலிண்டு

தான் இலெசிலி இலிண்டு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இவர் பெயரை தான் இலெசிலி இலிண்டு என எழுதலாம். நாம் 'செயற்கையாக" முன்னே இகரத்தைச் சேர்ப்பதாகப் பல தமிழர்கள் நினைக்கின்றார்கள். உண்மையில் லகர ரகரங்கள் சொல்லின் முதலெழுத்தாக வரும்பொழுது நுண்ணிய உயிரொலி எழும், அதன் துணையுடன் லகர ரகரங்கள் சற்று எளிதாக ஒலிக்க முடியும். குழந்தைகளிடம் ராமா என சொல்லச்சொல்லிப் பாருங்கள் அவர்கள் ஆமா என்றே ஒலிப்பார்களா. ராதை என்பதை ஆதை என்பார்கள். ராமா எனச்சொல்ல வராத ஒரு வேடனுக்கு மரா-மரா-மரா என விடாதாது தொடர்ந்து சொல்லச்சொல்லி ராமா என்பதை உணரச்செய்தார்கள் என்றெல்லாமும் சொல்வார்கள். ஒலியறிவின் நுண்ணிய அறிவுடன் வகுத்த தமிழ்மொழியிலக்கண விதியை ஏன் கைவிடவேண்டும்? ஆங்கில எழுத்தை ஆங்கிலத்தில் சொல்லும்பொழுதும் எல் (L) ஆர் (R) என உயிரெழுத்தைச் சேர்த்து ஒலிக்கின்றார்கள். இதெல்லாம் எப்படியாயினும், இலண்டன், இலெசிலி, இலிண்டு என்று தமிழ்முறைப்படி எழுதுவதே ஆகச்சிறந்தது, முறைசார்ந்தது, ஒலி நுண்ணறிவு கொண்டது. எனவே தான் இலெசிலி இலிண்டு' என்பது போன்ற முறையான தலைப்புக்கு மாற்றப் பரிந்துரைக்கின்றேன். ஆனால் பேச்சுவழக்கில் தான்லெசிலிலிண்டு என ஒரேசொல்போல ஒலிக்கும்பொழுது இகரங்கள் குலையலாம். மேடையில் அறிவிக்கும் முகமாகவோ அல்லது முறையாகப் பேசும் பிறவிடங்களிலோ அவருடைய பெயரை நிறுத்தி நிதானமாகச் சொல்லும்பொழுது தான் இலெசிலி இலிண்டு என்று சொல்லுதலே முறை. --செல்வா (பேச்சு) 14:11, 16 ஏப்ரல் 2017 (UTC)

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:42, 16 ஏப்ரல் 2017 (UTC)
மிக்க நன்றி @Nan:.
Return to "தான் இலெசிலி இலிண்டு" page.