பேச்சு:திசைச்சொல்

நல்ல கட்டுரை. நன்றி. --Natkeeran 13:52, 3 சூலை 2011 (UTC)Reply

தொகுப்பு விளக்கம் என்ற உட்தலைப்பு இருமுறை ஒருசொல் கூட மாறாமல் வந்திருக்கிறது.சுருக்கமான, சிறப்பான கட்டுரை.14:14, 3 சூலை 2011 (UTC)உழவன்+உரை..
நல்ல கட்டுரை. திசைச்சொல் என பொத்தாம் பொதுவாக அறிந்திருந்ததைத் தாண்டி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. கட்டுரையில் இரு முறை வந்துள்ள தகவலை நீக்க, சற்று உரை திருத்தி விக்கியாக்கம் செய்துள்ளேன். எனினும், கட்டுரை மிகு செய்யுள் நடையில் மாணவர்கள் புரிந்து கொள்ள சற்று சிரமப்படக்கூடியவாறு அமைந்துள்ளது. தமிழ் இலக்கணம், தமிழ் நில வரலாறு அறிந்தவர்கள் சற்று கட்டுரையை எளிமைப்படுத்தி எழுதினால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 07:02, 18 மே 2012 (UTC)Reply

மேற்கோள் தகவல்கள் தேவை தொகு

//கன்னடம், வடுகம், கலிங்கம், தெலிங்கம், துளுவம் ஆகிய 5 நாடுகளை வடவர் பஞ்சதிராவிடம் என்பர் [9]//

இந்த தொடரின் ஒன்பதாவது மேற்கோளில் தெய்வச்சிலையார் எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால் எந்த பாடலுக்கு அவர் விளக்கம் தருகையில் இந்த பஞ்ச திராவிடம் சொல்லை பயன்படுத்தினார் என்பது தெரிய வெண்டும். இதை கேட்கும் காரணம் யாதெனில் தெய்வச் சிலையார் எழுதிய சொல்லதிகார உரை மட்டுமே கிடைத்துள்ளது. பொருளதிகாரத்தில் தான் செந்தமிழ், செந்தமிழ் சேர் நிலங்கள் பற்றிய குறிப்புகள் வரும். ஒருவேளை பொருளதிகாரத்துக்கும் தெய்வச்சிலையார் எழுதிய உரை கிடைத்துவிட்டதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:23, 30 சூலை 2014 (UTC)Reply

  • காண்க - நன்னூல் நூற்பா

நன்னூல் நூற்பா 273.
செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச்சொல் என்ப --Sengai Podhuvan (பேச்சு) 08:27, 2 ஆகத்து 2014 (UTC)Reply

நன்னூலுக்கு தெய்வச்சிலையார் உரை எழுதினாரா? மேற்கோள் 9ல் தெய்வச்சிலையார் என்றுள்ளது. நன்னூலுக்கு சங்கரநமச்சிவாயர், மயிலைநாதர், நாவலர் உரை மட்டுமே கிடைத்துள்ளன என அறிகிறேன். இவர்கள் எழுதிய மூன்றிலும் கூட அவர்கள் பஞ்ச திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்பது என் நினைவு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:58, 12 ஆகத்து 2014 (UTC)Reply

மேலும் நன்னூலுக்கு கிடைத்த 3 உரைகளிலுமே செந்தமிழ் சேர் நிலங்களை கொடுந்தமிழ் நிலங்கள் என்று எழுதியுள்ளனர். இதற்கு பாவாணர் தன்னூலில் காலம் செல்லச் செல்ல திசைச்சொற்களும் திரிந்து திரி சொற்களானதால் செந்தமிழ் சேர் நிலங்களும் கொடுந்தமிழ் நிலங்கள் என அழைக்கப்பட்டதை ஒட்டி அப்படி அழைத்திருக்கலாம் என்றும் கூறினார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:23, 12 ஆகத்து 2014 (UTC)Reply

மயிலைநாதர் உரை தொகு

270. அதுவே, இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து நான்குமாம் திசை வடசொல் அணுகா வழி மயிலைநாதர் உரை

    எ - ன், மேல் நிறுத்தமுறையானே, முன்னின்ற இயற்சொல்லும்

திரிசொல்லுமுணர்த்தி, அவற்றின்பகுதியாய் இடையில் நின்றவற்றைத் தத்தமோத்துக்களுள் உணர்த்தியநிறீஇ எஞ்சியவிரண்டினுள் திசைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

    (இ - ள்.) செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிருநிலத்தினும் இரு வகைத்தமிழாம்

ஒருமொழிநிலத்தையொழிந்த பதினேழ்நிலத்தினும் தத்தங் குறிப்பினான் வழங்குவனவற்றைத் திசைச்சொல்லென்று சொல்லுவர், ஆசிரியர் எ - று.

    செந்தமிழ்நிலமும் அதனைச்சேர்ந்த பன்னிருநிலமும் மற்றைப் பதினேழ்நிலமுமாக

நிலம் முப்பதாம் பிறவெனின், ஆகாது; பதினெண்பூமி பதினெண்மொழியென்றே உலகத்து வழங்கிவருதலின். அவற்றுள், ஈண்டொழித்த தமிழொன்றே இப்பதின்மூன்றுபாலும் பட்ட 1தென்க. அவற்றுள்ளும் ஒன்று செந்தமிழென்றும் அல்லன கொடுந்தமிழென்றும் கூறப்படும். அவற்றுள், செந்தமிழ்நிலம், கருவூரின்கிழக்கும் மருவூரின்மேற்கும் வையையாற்றின்2வடக்கும் மருதயாற்றின் 3தெற்குமாம். கொடுந்தமிழ்நிலம், அதனைச்சூழ்ந்த, "தென்பாண்டி குட்டங் குடங்கற்கா 4வேள்பூழி, பன்றி 5யருவா ளதன்வடக்கு - நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில்சீர்ப் பன்னிருநாட் டெண்" என்னும் இப்பன்னிருநாடுமாம். அவற்றுள், தென்பாண்டிநாட்டார் ஆவினைப் பெற்றமென்றும் சோற்றினைச் சொன்றியென்றும், குட்டநாட்டார் தாயைத் தள்ளையென்றும், குடநாட்டார் தந்தையை அச்சனென்றும், கற்காநாட்டார் வஞ்சரைக் கையரென்றும், வேணாட்டார் தோட்டத்தைக் 6கிழாரென்றும், பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழியென்றும், பன்றிநாட்டார் செறுவைச் செய்யென்றும், 7அருவாணாட்டார் சிறுகுளத்தைக் கேணியென்றும், 8அருவாள்வடதலையார் புளியை எகினமென்றும், சீதநாட்டார் தோழனை எலுவனென்றும், 9மலாட்டார் தோழியை இகுளையென்றும், புனனாட்டார் தாயை ஆயென்றும் வழங்குவர். பிறவும் அறிந்துகொள்க.

    தமிழொழி பதினேழ்நிலமாவன: "சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந்

துளுக்குடகம், கொங்கணங் கன்னடங் கொல்லந் 10தெலிங்கம் கலிங்கம் வங்கம், கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம், தங்கும் 11 புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்நிலந் தாமிவையே" என்பன. ‘அருமணம் 12 காம்போசம் ஈழம் கூவிளம் 13 பல்லவமங்கம்’ என்பன முதலானவை, இவற்றின்பாரியாயமும் இவற்றின்பேதமுமாய் இவற்றுள்ளே அடங்குமென்க. இவற்றின்மொழிகளும் வந்த வழி அறிந்துகொள்க; "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம், சிங்களங் 14கொல்லங் கூவிள மென்னும், எல்லையின் புறத்தவு மீழம் பல்லவம், கன்னடம் வடுகு கலிங்கந் தெலிங்கம், கொங்கணந் துளுவங் குடகங் குன்றம், என்பன குடபா லிருபுறச் சையத், 15 துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும், முடியுடை மூவரு மிடுநில வாட்சி, 16அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள், பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த, பன்னிரு திசையிற் சொன்னய முடையவும்" என்றார் அகத்தியனார்.


மயிலைநாதர் உரை

    எ - ன், நிறுத்தமுறையானே வடமொழியாவன உணர்த்துதல் நுதலிற்று.
    (இ - ள்.) தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்தானும்

ஆரியத்திற்கேயுரிய எழுத்தானும் 1 இவ்விரண்டெழுத்தானும் நடப்பனவாம், ஆரியச்சொற்கள் எ - று.

    வ - று. அமலம், இராகம், உபமம், ஏகம், ஓது (பூனை); கமலம், கீர்த்தி, குங்குமம்,

2கோபம்; சரணம், சிக்கணம், சஞ்சு (பறவையின்மூக்கு), சௌளம்; ஞானம், ஞேயம்; 3இடங்கணம்; தமாலம், தாரம், திலகம், தீரம்; நாமம், நீலம், நூனம்; பானம், பீனம், புராணம்; மனம், மானம், மீனம், மூலம், மௌனம்; யானம், யூபம், யோகினி, யௌவனம்; இராவணன், உரூபம், உரோமம்; இலிபி, உலூதம், இலேபம், உலோபம்; வாரம், வீரம், வேணு, வைரம் என்றற்றொடக்கத்தன பொதுவெழுத்தான் வருவன. கந்தம், சேதம், சதம், 4இட்டம், திண்டிமம், தீர்க்கம், போதம், போகம், சத்தம், சட்டம், சுகம், சிங்கம், குதை என்றற்றொடக்கத்தன ஆரியத்திற்கேயுரிய எழுத்தான் வருவன. அரன் அரி, அயன் 5அருகன்; கடினம், குரகம், கீதம், கனம்; சண்டம், சலம், சாதி, சச்சரை; துரங்கம், தூலம், தூரம், துரை; பாடம், பலம், பேரம், பூதம்; மோகம்; யாகம், இராகம்; வந்தனை; சூலம்; நட்டம்; ஆரம்; சோமன், தூளி; பக்கம் என்றற்றொடக்கத்தன பொதுவும் சிறப்புமான ஈரெழுத்தானும் வருவன.

    இஃது, ஒரு நிலத்திற்கேயுரியதன்றிப் பதினெண் பூமிக்கும் விண்ணிற்கும்

புவனாதிகட்கும் பொதுவாய்வருதலின், திசைச்சொல்லின் அடக்காது வேறோதினாரென்க. 6அஃதென்னை? வடக்கண்மொழியென்றாராலோவெனின், ஆண்டு வழக்குப்பயிற்சியை நோக்கி அவ்வாறு கூறினாரென்க.

    (பி - ம்.) 1 ஈரெழுத்தானுமான இம்மூன்று 2 கோவலம், சாணம்3 இடபங்கணம் 4

இடிட்டீபம், தீர்க்கம் 5 அருகன், சிங்கம், மோகம் 6 அஃதேல்

வேண்டிய செய்திகளைத் திரட்டிக்கொள்ளுங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 20:22, 12 ஆகத்து 2014 (UTC)Reply

மயிலைநாதர் உரை என்னும் உபதலைப்பில் திராவிடம் என்ற சொல்லே இல்லையே? மேலும் இது நன்னூல் மயிலைநாதர் உரை தானே? ஆனால் ஒன்பதாம் மேற்கோள் தெய்வச்சிலையார் எனக்குறிப்பிட்டுள்ளது. தெய்வச்சிலையார் தொல்காப்பியத்துக்கு மட்டுமே உரை எழுதினார் அல்லவா? நான் பஞ்சதிராவிடம் என்ற சொல்லுக்கு கொடுத்த ஒன்பதாம் மேற்கோள் சரிதானா எனக் கேட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:15, 13 ஆகத்து 2014 (UTC)Reply

விளக்கம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திசைச்சொல்&oldid=1706301" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திசைச்சொல்" page.