பேச்சு:திசைவேகம்
இலங்கையில் speed என்பது கதி என்றும் velocity என்பது வேகம் என்றும் குறிக்கப்படுகிறது --Sank 18:39, 23 பெப்ரவரி 2012 (UTC) இந்தக் குறுங்கட்டுரை பொருளற்றுக் கிடந்ததால் இதை முதலில் நீக்கவேண்டும். அன்புடன் இதை நீக்கி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 23:38, 3 செப்டம்பர் 2017 (UTC) --இயற்பியலின் முக்கிய அளவீடு என்பதால் மேலும் தொகுக்க பரிந்துரைக்கிறேன்.00:33, 7 செப்டம்பர் 2017 (UTC)சரவணன் பெரியசாமி
- விரைவு என்பது திசைவேகத்தைக் குறிக்கவில்லை என்றும், வேகத்தையே குறிக்கிறது என்றும் தோன்றுகிறது. அதாவது விரைவு என்னும்போது, அது திசை சார்ந்த தரவைத் தரவில்லை என்றே கருதுகிறேன். எனவே இங்கு வரைவிலக்கணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரைவு என்பதை நீக்கிவிடலாமா? அப்படி நீக்குவதாயின் கட்டுரையின் உள்ளேயும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். @செல்வா, உலோ.செந்தமிழ்க்கோதை, Booradleyp1, and Saranbiotech20: --கலை (பேச்சு) 20:05, 19 செப்டம்பர் 2017 (UTC)
- விரைவு என்பது en:speed என்பதைக் குறிக்கும். இதனை தமிழகப் பாடப்புத்தகங்களில் வேகம் என்கிறார்கள். இலங்கைப் பாடப்புத்தகங்களில் கதி என்கிறார்கள். கட்டுரை குழப்பத்தைத் தருகிறது. velocity திசைவேகம் (தமிழகம்), வேகம் (இலங்கை). நாம் இங்கு தமிழக வழக்குப்படி கட்டுரையில் எழுதலாம்.--Kanags \உரையாடுக 22:50, 19 செப்டம்பர் 2017 (UTC)
- ஆங்கிலச்சொல்லாகிய velocity என்பதிலும் திசைவிரைவு என்னும் கருத்து இல்லை, ஆனால் தற்கால வரையறை அவ்வாறு கற்பிக்கப்படுகின்றது. வேகம் என்பதும் தமிழாகக் கொள்ள இடமுண்டு, ஆனால் விரைவு என்பதில் ஐயம் இல்லை. mass என்பதிலும் அறிவியற் கருத்து அச்சொல்லில் இல்லை. திசையுடன் கூடிய விரைவு என்பதை வலியுறுத்த திசைவிரைவு எனலாம். --செல்வா (பேச்சு) 03:39, 20 செப்டம்பர் 2017 (UTC)
- விரைவு என்பது en:speed என்பதைக் குறிக்கும். இதனை தமிழகப் பாடப்புத்தகங்களில் வேகம் என்கிறார்கள். இலங்கைப் பாடப்புத்தகங்களில் கதி என்கிறார்கள். கட்டுரை குழப்பத்தைத் தருகிறது. velocity திசைவேகம் (தமிழகம்), வேகம் (இலங்கை). நாம் இங்கு தமிழக வழக்குப்படி கட்டுரையில் எழுதலாம்.--Kanags \உரையாடுக 22:50, 19 செப்டம்பர் 2017 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி -Kanags, செல்வா.
- Kanags! இலங்கை வழக்கில் speed கதி என்றும், velocity வேகம் என்றும் குறிக்கப்படுகிறதா? முன்னர் படித்தது தற்போது நினைவில் இல்லை
- செல்வா! நீங்கள் கூறியபடி திசைவிரைவு என்ற மாற்றுப் பெயரைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் Kanags கூறியதுபோல், கட்டுரை குழப்பத்தைத் தரும்போல் உள்ளது. குழப்பத்தைத் தவிர்க்கும் நோக்கில் சில இடங்களில் மாற்றங்கள் செய்திருக்கிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை! தயவுசெய்து, கட்டுரையை ஒரு தடவை முழுமையாகப் பார்த்துத் தேவையான திருத்தங்களைச் செய்துவிட முடியுமா?--கலை (பேச்சு) 17:49, 20 செப்டம்பர் 2017 (UTC)
- மொழிபெயர்த்து எழுதியதாலோ என்னவோ, தேவையே இல்லாமல் குழப்பமாக எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை பல இடங்களில் எளிமைபடுத்தப்பட வேண்டும். முதல்பத்தியை மட்டும் திருத்தி எழுதியுள்ளேன்.--செல்வா (பேச்சு) 00:28, 21 செப்டம்பர் 2017 (UTC)
அனைவரின் கருத்துக்கு ஏற்ப, எளிமையாக்கி, கட்டுரையைத் திருத்திவிடுகிறேன்.
ஆங்கிலத்தில் இயல்பு வழக்கில் வெலாசிட்டி, ஸ்பீட் எனும் இரு சொற்களும் ஒரே பொருளினவே. சொல் ஒதுக்கீட்டு முறையில் அவர்கள் அதைக் கலைச்சொற்களாக்கியுள்ளனர். அம்முறையைப் பின்பற்றியே நான்விரைவு, வேகம் எனும் சொற்களை முறையே வெலாசிட்டி, ஸ்பீட் என்பவற்றிற்குப் பயன்படுத்தினேன். ஓரளவு பொருள் வேறுபாடுடைய ஒத்தபொருள் நீழல் கலைச்சொற்களுக்கு இயல்பு மொழியின் ஒரே பொருள் அமைந்த சொற்களை இவ்வாறு சொல் ஒதுக்கீட்டு முறையில் கலைச்சொல் ஆக்குதல் அனைத்து மொழிகளிலும் உள்ள நடைமுறையாகும். மேலும் மிக அடிப்படையான சொற்கள் ஒற்றைவேர் உள்ளனவாக அமைந்தால் சொற்பயன்பாடு எளிதாக அமையும். அறிவியலில் சொல்லே முழுப்பொருளை வழங்க முடியாது. வரையறைவழியே தான் உரிய கலைச்சொல்லின் பொருளை முழுமையாக அறிய இயலும். நன்றிகளுடன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:23, 23 செப்டம்பர் 2017 (UTC)
கட்டுரையைத் திருத்தியுள்ளேன். விரைவு, நிரல் எனும் சொற்களுக்கு திசைவேகம், சராசரி எனும் சொற்களைப் பதிலீடு செய்துவிட்டேன். அடைப்படைக் கருத்தினம் பற்றிய கட்டுரை என்பதால் புரிதல் சற்று அரிதாகவே அமையும். இந்நிலையில் சில எளிய விளக்கங்களைத் தர விழைகிறேன். இருப்பு மாற்றம் என்பது இடப்பெயர்ச்சி; நேரத்தைப் பொறுத்த இடப்பெயர்ச்சி வீதம் வேகம்;குறிப்பிட்ட திசையில் நிகழும் இடப்பெயர்ச்சி வீதம் திசைவேகம் அல்லது விரைவு;நேரத்தைப் பொறுத்த திசைவேகத்தின் வீதம் முடுக்கம். இதன் எதிர்நிகழ்வு ஒடுக்கம் எனப்படும். இந்த விளக்கங்களைச் சார்ந்து மேலும் கட்டுரையில் குழப்பம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.உடனே அக்குழப்பத்தை நீக்கி கட்டுரை செப்பம் செய்யப்படும். இக்கட்டுரை தெளிவாகப் புரிய கருத்துகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:11, 25 செப்டம்பர் 2017 (UTC)
- கருத்துக்களுக்கு மிகவும் நன்றி உலோ.செந்தமிழ்க்கோதை. தற்போதைக்கு குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக நீங்கள் கட்டுரையில் செய்த மாற்றங்களுக்கு மிகவும் நன்றி. கலைச்சொல்லில் மாற்றங்கள் செய்வதாயின், உரையாடி மாற்றுவோம். மேலும், ஏற்கனவே தமிழில் குறிப்பிட்ட ஒரு தலைப்பில் கட்டுரை இருக்கும்போது, அதே சொல்லை வேறு கட்டுரைகளில் இன்னொரு சொல்லுக்கு மாற்றும்போது, உள்ளிணைப்புக்களும் அறுந்து போகின்றது. அவ்வாறு மாற்றுவதாயின், அந்த இடத்தில் இரு சொற்களையுமாவது கொடுத்தால், உள்ளிணைப்பை தக்க வைக்கலாம். அந்தச் சொல் தவறானது எனக் கருதின், குறிப்பிட்ட சொல்லுக்கான தலைப்பு மாற்றக் கோரிக்கையை வைத்து, உரையாடிய பின்னர், எல்லா இடங்களிலும் சொல்லை மாற்றலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி. --கலை (பேச்சு) 09:42, 24 செப்டம்பர் 2017 (UTC)
vector
தொகு@உலோ.செந்தமிழ்க்கோதை: vector என்பதற்கு நெறியம் என்ற புதிய சொல்லைப் புகுத்தியுள்ளீர்கள். ஏற்கனவே திசையன் என்ற பொருத்தமான சொல் இருக்கையில், எதற்காக இந்தப் புரியாத புதிய சொல்? @செல்வா: --Kanags \உரையாடுக 12:21, 21 செப்டம்பர் 2017 (UTC)
- திசையன் என்றே பயன்படுத்தலாம். ஆனால் திசையன் என்பதைவிட நெறி என்பதன் அடிப்படையாகக் கொள்ளும் சொல் பொருத்தமாக இருக்கும், ஆனால் விரைவாக சீர்மை பேணி நடப்பதே நல்லது. நெறி என்பது ஒரு வழி/முறைப்பட்டது என்னும் பொதுப்பொருள் கொண்டது. திசையன் என்பது இடம்சார்ந்த திசை பற்றியது. ஆனால் சீர்மை கருதி திசை என்பதையே ஆளலாம். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. --செல்வா (பேச்சு) 15:00, 21 செப்டம்பர் 2017 (UTC)
கணிதவியல் பேராசிரியர் மாணிக்கவாசகம் அவர்கள் (இவர் பொறியியல் பாடத்திட்டத்துக்கான கணித நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களைஎழுதிய முன்னோடியாவார்.அரசு பொறியியல் கல்லூரிகளில் குறிப்பாக தியாகராயர் பொறியியல் கல்லூரியில் நெடுங்காலம் பணிபுரிந்தவர்.) 1960 களின் தொடக்கத்திலேயே வெக்டார் எனும் சொல்லுக்கு நெறியம் எனும் சொல்லை ஆண்டுள்ளார். திசையன் சொல் பின்னர் தமிழ்நாட்டுப் பாடநூல் எழுதிய பேராசிரியர்கள் உருக்கிப் பயன்படுத்தினர். அண்மையில் கட்டிடப் பொறியியல், எந்திரப் பொறியியல் பட்டப் பாட நூல்களிலும் நெறியம் எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டது. எனவே இரண்டும் தமிழகப் பயன்பாடுகளே. நான் புதுமையாக இச்சொல்லை ஆளவில்லை. அனைவரும் திசையன் என்பதை ஏற்றால், நானும் அதே வழியை விக்கியில் பின்பற்றுகிறேன். என்றாலும் தொடக்கத் தலைப்பு அறிமுகத்தில் இரு சொற்களையும் குறிப்பிடுவது நல்லது என நினைக்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:12, 23 செப்டம்பர் 2017 (UTC)
- //நெறி என்பது ஒரு வழி/முறைப்பட்டது என்னும் பொதுப்பொருள் கொண்டது.// நெறியமும் அவ்வாறே. திசையன் அனைவராலும் விளங்கக்கூடியவாறு உள்ளது.--Kanags \உரையாடுக 14:16, 23 செப்டம்பர் 2017 (UTC)
நெறிக்குத் திசை எனும் பொருளும் உண்டு. பலபருமான வெளியில் திசை என்பதன் பொருளே கிடையாது.அங்கே திசை என்பது கணித முறைப்பட்டதே. அனைத்து இடங்களிலும் நெறியன் எனும் சொல்லே திசையனை விடப் பொருத்தமானதாகும். டென்சார் எனும் உயர்நெறியனிலும் திசை எனும் பொதுக்கருத்து செல்லுபடியாகாது. இதனால் தான் கணிதவியல் பேராசிரியர் மாணிக்கவாசகம் அவர்கள் இச்சொல்லை ஆண்டுள்ளார்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:39, 23 செப்டம்பர் 2017 (UTC)