பேச்சு:திணை (உயிரியல்)
"முத்தமிழ்" கூகிள் குழுமத்தில், வேந்தன் அரசு என்பவர் கீழ்க்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார். (இங்கே பார்க்கவும்) இராச்சியம் என்பதைக் காட்டிலும், உயிர்த்திணை என்றோ அல்லது வேந்தன் அரசு சொல்வது போல வெறும் திணை என்றோ பெயரிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். பிற பயனர்களின் கருத்துக்களை அறிய விழைகிறேன். இராச்சியம் என்பது பொருந்தாது என்பது என் நெடு நாளைய நினைப்பும்.
____________மேற்கோள்________
செல்வா
kingdom என்பபதை ராச்சியம் என மொழிஆக்கியுள்ளார்கள்.
உயிர்களை உயர்திணை அஃறிணை என்று இலக்கணம் பகுக்கும் எனவே kingdom = திணை எனலாம்.
ஒரு சொல்லுக்கு மொழி ஆக்கம் செய்வதை விட ஒரு இனத்துக்கும் சேர்த்து மொழி ஆக்கம் செயயப்படவேண்டும்.
விலங்குகளுக்கு மா என்ற விகுதி சேர்க்கலாம்
பரிமா, அரிமா, கரிமா போல், (ஆனால் குரங்கினக்களுக்கு மா வருமா என தெரியலே.)
குரக்கு என்ற சொல்லை எங்கேனும் பயன்படுத்தலாம்.
primateக்கு முதலை நல்ல சொல் ஆனால் அது பயனில் உள்ளது. முதனி பொருத்தமாகதான் இருக்கு, நரி, பரி போல் இகரத்தில் முடிகிறது.
vertebrate = தண்டுடையன (முதுகுதண்டு) inverebrate = தண்டிலி
வால் இல்லா =வாலிலி
-- வேந்தன் அரசு சின்சின்னாட்டி
___________________
--செல்வா 14:07, 14 மார்ச் 2008 (UTC)
- இது தொடர்பில் நாம் எடுக்கும் நிலைப்பாடு கருவான முடிவாக அமையக்கூடும். இருசொற்பெயர்முறை தமிழில் மிகுதியாகப் பயன்பாட்டில் இல்லாத நிலையில் விக்கிபீடியா இதன் மிகப்பெரிய பயன்படுத்துனராகக்கூடும். பொறுப்போடு அணுகி தமிழில் ஒரு நன்னடைமுறையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. நம்மிடம் அடைப்புக்குறிகள் மீசுட்டு போன்ற வசதிகள் உள்ளதால் வாசகர்களின் புரிதலுக்கு ஊறு விளைவிக்காமல் மாற்றம் கொண்டுவர முடியும். -- சுந்தர் \பேச்சு 05:11, 16 மார்ச் 2008 (UTC)
அறிவியல் வகைப்பாடுகளைக் குறிக்கும் பல்வேறுபட்ட சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இலங்கைக் கல்வித் திணைக்களம் வெளியிட்ட சொற்கள் தவிரத் தமிழ் நாட்டிலேயே பலவிதமான சொற்கள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. வகைப்பாட்டியலில் பயன்படும் இவ்வாறான சொற்கள் சிலவற்றைக் கீழே காண்க:
ஆங்கிலம் | இலங்கை | தநா பாடநூல் |
மூர்த்தி அகராதி |
பரிந்துரை (செல்வா) |
---|---|---|---|---|
Kingdom | இராச்சியம் | உலகம் | உலகம் | திணை |
Phylum | தொகுதி | பிரிவு | பெரும்பிரிவு | தலைவகுப்பு |
Class | வகுப்பு | வகுப்பு | வகுப்பு | வகுப்பு |
Order | ஒழுங்கு | துறை | வரிசை | வரிசை |
Family | குடும்பம் | குடும்பம் | குடும்பம் | குடும்பம் |
Genus | சாதி | பேரினம் | பேரினம் | பேரினம் |
Species | இனம் | சிற்றினம் | சிறப்பினம் | இனம் |
இவை தவிர தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் உள்ள கலைச்சொல் அகராதிகளில் மேலும் வேறுபட்ட சொற்கள் உள்ளன. எனவே புதிய சொற்களை உருவாக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். மேலுள்ள அடிப்படையான பிரிவுகள் தவிர வேறு பிரிவுகளும், துணைப் பிரிவுகளும்கூடப் பல உள்ளன. இவற்றுக்கும் நல்ல தமிழ்ச் சொற்கள் வேண்டும்.
Domain [உலகம்]
- Superkingdom [பெருந்திணை]]
Kingdom [திணை]
- Subkingdom [துணைத் திணை]
- Branch - கிளை?
- Superphylum/Superdivision பெரும் தலைவகுப்பு
Phylum/Division தலை வகுப்பு
- Subphylum துணை தலைவகுப்பு
- Infraphylum உள் தலைவகுப்பு
- Microphylum சல்லித் தலைவகுப்பு
- Superclass
Class [வகுப்பு எல்லோரும் ஒப்புவதால்]
- Subclass - துணைவகுப்பு? (சரியாக இருக்கும்)
- Infraclass - உள்வகுப்பு?
- Parvclass -
- Superorder
Order [ வரிசை என்பது சரியாக இருக்கும், ஆனால் அலசுதல் வேண்டும்]
- Suborder துணை வரிசை
- Infraorder உள்வரிசை
- Parvorder
- Superfamily [பெருங்குடும்பம் ??]
Family குடும்பம் (எல்லோரும் ஒப்புவதால் இதனையே வைத்துக்கொள்ளலாம்)
- Subfamily - துணைக்குடும்பம் [சரி]
Tribe [குழு ??]
- Subtribe [துணைக் குழு ??]
- Alliance
Genus [பேரினம் ??]
- Subgenus [துணைப் பேரினம்??]
- Superspecies [மேலினம் ??]
Species [இனம் ??]
- Subspecies [துணை இனம் ??
- Infraspecies [உள்ளினம் ??
இவை எல்லாவற்றுக்கும் தமிழ்ச் சொற்கள் வழக்கில் உள்ளனவா தெரியவில்லை ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ்ச் சொற்களை உருவாக்கினால் அவற்றையே தவியில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம். மயூரநாதன் 19:36, 16 மார்ச் 2008 (UTC)
பொறுமையாகவும் சற்று தீர சிந்திக்க வேண்டுவது. எல்லாச் சொற்களையும் சேர்த்தெண்ன வேண்டும். இயன்றால் எதன் அடியில் (கீழே) எது வரவேண்டும் என்று இயற்கை அறிவால் உந்துறுமாறு அமைத்தால் நன்றாக இருக்கும். எ.கா. வரிசை என்றால் நன்றாக் உள்ளது, ஆனால் வரிசை குடும்பத்துக்குக் கீழா மேலா என்பது கேட்ட மாத்திரத்தில் உணர முடியவில்லை (இப்படி கேட்ட மாத்திரத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றாலும், ஒரு இயல்பான அடுக்கு முறை இருந்தால் நலமாக இருக்கும். வேறு பல கருத்துகளும் உண்டு... மேலும் இது பற்றி உரையாடுவோம்)--செல்வா 21:34, 16 மார்ச் 2008 (UTC)
மேலே வகைப்பாட்டுப் படம் ஒன்று சேர்த்துள்ளேன் (ஆங்கில விக்கியில் இருந்து எடுத்தது). அறிவியல் உலகில், பல்வேறு விதமாக உயிரினங்களைப் பகுக்கின்றனர். இவ் வகைப்பாடுகள் காலந்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளன. மரபணு ஈரிழை அடிப்படையிலும், வேறி சில கோணங்களிலும் வகைப்பாடுகள் வகுத்துள்ளனர். பொதுவாக மூன்று வெவ்வேறு வகைப்பாடுகள் இருக்கின்றன (தற்பொழுது).
- முதலாவது வகைப்பாட்டு முறை: இரண்டு பேருலகங்களாகக் கொள்வது: புரோகர்யோட்டா, யூகார்யோட்டா என்று.(The two-empire system or Superdomain system, with top-level groupings of Prokaryota (or Monera) and Eukaryota empires),
- இரண்டாவது வகைப்பாட்டு முறையில் ஆறு திணைகளாகக் (kingdoms) கொள்கின்றனர். அவையாவன: (1) புரோட்டிஸ்ட்டா, (2) ஆர்க்கேபாக்டீரியா, (3) யூபாக்டீரியா, (4) காளான், (5) செடி-கொடி(தாவரம்), (6) விலங்கினம்(The six-kingdom system with top-level groupings of Protista, Archaebacteria, Eubacteria, Fungi, Plantae, and Animalia.).
- மூன்றாவது வகைப்பாட்டு முறை:1990ல், கார்ல் வூசு என்பார் அறிமுகப்படுத்திய மூன்று உலகங்களாகப் பிரிக்கும் முறை: ஆர்க்கேயா, பாக்ட்டீரியா, யூகார்யோட்டா. (The three-domain system of Carl Woese, introduced in 1990, with top-level groupings of Archaea, Bacteria, and Eukaryota domains.)
Domain என்பதை நாம் உலகம் என்றும், Kingdom என்பதை திணை என்றும் கூறலாம் என நினைக்கிறேன். எனவே என் பரிந்துரைகளை மேலே உள்ள அட்டவணையில் சேர்த்துள்ளேன். பார்க்கவும். --செல்வா 14:19, 23 மார்ச் 2008 (UTC)
- செல்வா, உங்களுடைய பரிந்துரைகளில் வகுப்பு தொடக்கம் இனம் வரையுள்ளவை தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. திணை என்பதை அறிவியல் வகைப்பாட்டில் இதுவரை வேறெங்கும் பயன்படுத்தாத போதிலும், நல்ல சொல்லாக இருக்கிறது. பயன்படுத்தலாம் என்பதுதான் எனது கருத்து. Phylum என்பதற்குத் தலைவகுப்பு என்னும் சொல்லைப் பரிந்துரைத்துள்ளீர்கள். இச்சொல் இதேமட்டத்திலுள்ள ஏனைய சொற்களிலும் நீளமாக இருப்பதுடன் இரட்டைச் சொல்லாகவும் இருக்கிறது. ஒரே சொல்லாக இருப்பது நல்லது என்பது எனது கருத்து. மயூரநாதன் 02:47, 25 மார்ச் 2008 (UTC)
- நன்றி மயூரநாதன். உண்மைதான் தலைவகுப்பு என்பது சற்று நீளமாகவும், இரட்டைச்சொல்லாகவும் உள்ளது. அதனை பிரிவு என்று முன்பு உள்ளது போலவே வைக்கலாம். இலங்கையில் தொகுதி என்கிறீர்கள் போல் தெரிகிறது. இயல்பாக ஒன்றன்கீழ் ஒன்றாக வருமாறு சொற்கள் புதிதாக ஆக்குவதில் குழப்பம் மிகலாம், எனவே பொதுவாக உள்ளதை வைத்து விரிக்க முடியுமா என்றும் பார்த்தேன், இயலவில்லை. எனவேதான் தலைவகுப்பு என்றேன். பிரிவு என்று வைத்தால் பிரிவு, வகுப்பு இரண்டில் எதற்குப்பின் எது வருகின்றது என்னும் கருத்து இயல்பாக இல்லை. இதே குழப்பம் ஆங்கிலச்சொற்களுக்கும் உண்டு. திணை என்பது நல்ல சொல்லாக இருப்பதால், எல்லோரும் விரும்பினால் உலகம்->திணை->பிரிவு->வகுப்பு->வரிசை->குடும்பம்-பேரினம்-இனம் என்று எல்லா இடங்களிலும் சீராக பெயரிடலாம். பெரும்பாலும் வார்ப்புரிவில்தான் இருக்கும் என்பதால், மாற்றம் தேவைப்பட்டால் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இப்பொழுது பிற பயனர்களும் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். --செல்வா 03:16, 25 மார்ச் 2008 (UTC)
- மயூரநாதனின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமிடத்தில் இவற்றைப் பற்றிய கட்டுரைகள் ஆக்க வேண்டும். அதில் முதல் வரியில் புழக்கத்திலுள்ள மாற்றுச்சொற்களை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கக்கூடும். -- சுந்தர் \பேச்சு 03:38, 25 மார்ச் 2008 (UTC)
- ஆம் சுந்தர் நீங்கள் சொல்வது சரி. செய்யலாம்.--செல்வா 13:02, 25 மார்ச் 2008 (UTC)
பிரிவு என்பது த.நா பாடநூலில் இருந்தாலும் ஏதோ குழப்புவது போல் இருக்கிறது. வழமையாக பிரிவு என்ற சொல்லை மிகவும் கடைநிலையிலேயே கேள்விப்பட்டதால் இருக்கலாம். பள்ளிகளில் ஒரு வகுப்பில் பல பிரிவுகள் இருப்பது போல். ஆனால், பாடநூல் வழக்காக இருப்பதால் புறக்கணிக்கவும் தயக்கமாக இருக்கிறது. இலங்கை வழக்கான தொகுதி என்ற சொல் இங்கு கூடுதல் பொருத்தமாகத் தோன்றுகிறது--ரவி 12:13, 25 மார்ச் 2008 (UTC)
- ரவி, பிரிவு என்பது கடைநிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் ஆணிவேர், கிளை வேர், சல்லி வேர் என்பது போன்ற இயல்பான தொடராக இல்லாமல் இருக்கின்றதே என்பதுதான் என் நினைப்பு. எப்படியாயினும், ஒரு பேரினத்தில்இரண்டிற்கும் மேற்பட்ட பல இனங்கள் இருப்பதும், ஒரு குடும்பத்தில், பல பேரினங்கள் இருப்பதும் போன்ற லின்னேயன் வகைப்பாட்டியல் மாறி தற்கால கிளைம (clades, cladists) வகைப்பாட்டியலில் வளர்ந்து வருகின்றது. தொகுதி என்பதும் நல்ல சொல்தான். ஆனால் பிரிவு, கிளைப்பு என்னும் பொருளில் இருந்து மாறி வருகின்றது (வேறொரு நோக்கில் சரியாக இருக்கும் - கீழிருந்து மேலே போவதாகக் கொண்டால்).--செல்வா 13:01, 25 மார்ச் 2008 (UTC)
முடிந்த வரையில் இராச்சியம் என்ற சொல் வேண்டாம் என்பது என் கருத்து. ஏனெனில் அது தமிழ் சொல் அல்ல.
நன்றி --Munaivar. MakizNan 22:35, 19 ஜூலை 2009 (UTC)
- நன்றி மகிழ்நன். தமிழ் அல்லாதது மட்டுமன்றி, பொருளும் சிறப்பாக இல்லை. ராசா உள்ளது ராச்சியம். இராச்சியம் என்பது ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு. திணை என்பதை இங்கு ஆள்கிறோம். இன்னும் கிளேடு (clade) என்னும் கிளைப்பியல் கணிப்பின் படி இவை இன்னும் மாறும் (எல்லோரும் இன்னும் கிளைப்பியலை ஏற்றுக்கொள்ள வில்லை). --செல்வா 00:26, 20 ஜூலை 2009 (UTC)
Genus பேரினம் என்று அழைக்கப் பொருத்தமானதா?
தொகு- Genus பேரினம் ; Subgenus துணைப் பேரினம்;
- Superspecies ;
- Species இனம்;
- Subspecies துணை இனம்;
இங்கு genus பேரினமாயின் superspecies ஐ எவ்வாறு அழைப்பது? super என்பதை "பேர்-" , "பெரு" என்று "Superfamily பெருங்குடும்பம்" போன்றவற்றில் குறிப்பிட்டால் பேரினம் என்று அழைக்கப் பொருத்தமானது superspecies மட்டுமே, ஆயின் genusக்கு வேறு பெயரால் அழைத்தல் தேவை. இனம் எனும் சொல் species உடன் மட்டுமே வருதல் மிக்க முக்கியமானது, genusஐ சாதி என்று அழைப்பதில் என்ன தவறு உள்ளது? --சி. செந்தி 13:09, 27 மார்ச் 2011 (UTC)
- சீரிய சிந்தனையைத் தூ்ண்டியமைக்கு நன்றி. super-மேல், sub-கீழ் எனலாமே? சாதி என்ற சொல் வேண்டாம். அது அயலகச் சொல் (ஜாதி-->சாதி) அல்லவா? வேறு பரிந்துரைக்கக் கோருகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 16:53, 10 நவம்பர் 2013 (UTC)