பேச்சு:திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவள்ளுவமாலை என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து

தொகு

இக்கட்டுரை இங்கிருப்பதிலும் பார்க்க விக்கிமூலத்தில் இடுவது சிறந்தது.--Kanags \பேச்சு 12:11, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆம். ஆனால் சுருக்கமாக அது என்ன, அதன் சிறப்புகள் யாவை, அதில் உள்ள இரண்டொரு எடுத்துக்காட்டுகள் தரலாம். முழு நூலுக்குமான விக்கிமூல இணைப்பையும் தரலாம். இக் கட்டுரையை நீக்க வேண்டாம் (தக்கவாறு மாற்றி அமைக்க வேண்டுகிறேன்).--செல்வா 13:22, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

அதற்கு முன் நான் முழுப் பாடல்களையும் எழுதி விடுகிறேன். அதன்பிறகு இதுபற்றிய கட்டுரை எழுத முயற்சிக்கிறேன். அவகாசம் தர வேண்டுகிறேன்.--பெ.நாயகி 16:17, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

kanags சார் மற்றும் செல்வா சார், எல்லாப் பாடல்களையும் பதிவு செய்து விட்டேன். இந்தக் கட்டுரையை நான் பதிவு செய்ததன் முக்கியக் காரணத்தைச் சொல்லி விடுகிறேன். ஒரு நூலைப் பற்றி இவ்வளவு பாராட்டி (அதில் எதுவுமே மிகையில்லை என்பது குறிப்பிடத்தக்கது) பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு நான் அறிய வேறு எந்த இலக்கியத்துக்கும் இல்லை. ஆனால் இவை குறித்த குறிப்புகளோ இந்தப் பாடல்களோ இப்போது வெளிவருகின்ற திருக்குறள் பற்றிய எந்த நூலிலும் இருப்பதில்லை. நாளாவட்டத்தில் இவை காணாமல் போய் விடக் கூடாது என்பதனாலேயே தமிழின் நிரந்தரச் சொத்தாகிய விக்கிபீடியாவில் இருக்கட்டும் என்று இங்கே பதிவு செய்தேன்.

இதனைத் தனிக்கட்டுரையாகவோ அல்லது வேறு கட்டுரையின் இணைப்பாகவோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் விக்கிபீடியாவின் அமைப்பு ஒழுக்கம் பற்றிய தெளிவு இன்னும் எனக்கு முழுமையாக இல்லை. நன்றி. --பெ.நாயகி 03:11, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

இது தகவல் கட்டுரையாகவே இருப்பது நல்லது. பாடல்கள் முழுவதும் இங்கிருந்தாலும் பரவாயில்லை. ஆனாலும் திருவள்ளுவமாலையின் மூலப் பாடல்களை விக்கிமூலத்திலும் இடுவது மிக்க நல்லது. பாடல்களுக்கு இங்கிருந்து இணைப்புத் தரலாம். பெ. நாயகி அவர்களே, நீங்களே இவற்றை அப்படியே விக்கிமூலத்தில் இடுவீர்களா? ஏனெனில் உங்கள் பதிவு வரலாறாக அங்கு பதிவாகும் என்பதால் சொல்கிறேன். அதற்குப் பிறகு அவற்றை நானோ அல்லது வேறு யாரோ மேம்படுத்தி உதவலாம். விக்கிமூலம் என்பது விக்கிப்பீடியாவின் ஒரு சகோதரத் திட்டம். மூல இலக்கியங்களை அங்குச் சேர்ப்பது வழக்கம்.--Kanags \பேச்சு 08:18, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆம், பெ.நாயகி, சிறீதரன் கனகு சொல்வது போல நீங்களே பதிவு செய்தால் அது வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும். ஆர்வம் எடுத்து எழுதிய உங்கள் பெயரால் இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள். நன்றி.--செல்வா 14:00, 5 ஆகஸ்ட் 2009 (UTC)


கனகு சார், செல்வா சார், தங்கள் அன்புக்கும் ஊக்க உரைகளுக்கும் நன்றி. விக்கிமூலம் பகுதிக்குச் சென்று பார்த்தேன். அங்கே எப்படிப் பதிவிடுவது என்று தெரியவில்லை. எனவே நீங்களே "திருவள்ளுவமாலை"யை அங்கே மாற்றி விடுங்கள்; எனக்கு என்னுடைய பெயரில் தான் பதிவாக வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. அர்ப்பணிப்பான தமிழ்த் தொண்டின் அடையாளங்களான உங்கள் கவனத்தைப் பெற்றிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமான ஊக்கம்.

இன்னொரு விஷயம்: விக்கிமுலம் பக்கம் போயிருந்தபோது திருக்குறளை விரித்துப் பார்த்தேன். அதில் பொருட்பாலில் அங்கங்கள் பிரிப்பில் அங்கவியல் இரண்டுமுறை தலைப்பிடப்பட்டுள்ளது. பொருட்பாலில் மூன்றே இயல்கள்தாம்(பரிமேலழகர் பகுப்பின்படி). 39 முதல் 63-ஆம் அதிகாரம் வரை அரசியல்; 64 முதல் 95 வரை அங்கவியல்; 96 முதல் 108 வரை ஒழிபியல். இந்தப் பகுப்பு தான் பரிமேலழகர் முதல் பல்வேறு உரையாசிரியர்கள் கையாண்டுள்ள விதம். (கலைஞர் உள்ளிட்ட சிலர் அங்கவியலை, அமைச்சியல், படையியல், குடியியல், நட்பியல் என்றெல்லாம் பிரித்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

இங்கே 730ஆம் குறளுக்குக் கீழே அமைச்சியல் முற்றும் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் மேலே அமைச்சியல் என்கிற பிரிவே இல்லை. இந்தச் சிறு கவனப் பிசகினைச் சரி செய்யும் படிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றியுடன், --பெ.நாயகி 17:26, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருவள்ளுவமாலை&oldid=3832962" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருவள்ளுவமாலை" page.