பேச்சு:திலகம் (மலர்)
ஆன்டன் பணி சிறப்புக்குரியது. திலகம் என்பது மலர். இது வேறு. குன்றிமணி வேறு. இணைப்புக் குறிப்பு நீக்கப்படுதல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 08:48, 15 செப்டம்பர் 2014 (UTC)
- பொதுவாக மலர்களுக்கு தனிக்கட்டுரை தேவையில்லை. Adenanthera paronina என்ற தாரவியல் பெயர் கொண்ட இம்மலர் மஞ்சாடி மரத்தின் பூவாகும். இதனால், இதனை மஞ்சாடி மலர் எனவும் அழைக்கலாம். --AntanO 07:37, 10 அக்டோபர் 2016 (UTC)
- தாவரம் குறித்த முதன்மைக் கட்டுரையில், சங்க இலக்கியத்தில் குறிப்புகள் என்ற துணைத்தலைப்பின் கீழ் இது போன்ற கட்டுரைகளை அடக்கலாம். சங்க இலக்கியத்தில் தாவரங்கள் என்ற முதன்மைக் கட்டுரை உருவாக்கி அங்கிருந்து இத்துணைத்தலைப்புகளுக்கு உள்ளிணைப்புகள் தரலாம்.--இரவி (பேச்சு) 08:26, 17 அக்டோபர் 2016 (UTC)
ஆங்கிலக்கட்டுரைகளில் செய்வனவற்றை அப்டியே தமிழில் செய்துதான் ஆகனுமா? இது வேறு சிக்கல்களை கொண்டுவரும். சங்க இலக்கியத்தில் வரும் பூ பெயர்களுக்குலாம் உறுதியான தற்கால பெயர்கள் தெரிவதில் பல குழப்பங்கள் உள்ளன. சங்ககாலப்பூக்களின் பெயர்களில் ஒரு பெயர் இன்று பல பூ பெயர்களை குறிப்பதாகலாம். பகுதிசார்ந்தும் பெயர்கள் மாறலாம். இப்டி பல இருக்கு.
தமிழர்களின் மெய்யியல் ஐந்து திணைக்குமான பெயர்களை பூக்களில் இருந்து வைப்பது. நெய்தல் பூவுக்கும் கூட அது மரப்பெயரின் கட்டுரையில்தான் இருக்கனும்னா எப்டி?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:56, 18 அக்டோபர் 2016 (UTC)
- குழப்பத்தைத் தவிர்க்க சங்ககால மலர்கள் கட்டுரையில் அது தொடர்பில் விரிவாக எழுதலாம் அல்லது குறித்த மலர் தொடர்புபட்ட கட்டுரையில் இலக்கியப் பகுதியை எழுதலாம். அவ்வாறு பல கட்டுரைகளில் செய்யப்பட்டுள்ளது. --AntanO 01:39, 19 அக்டோபர் 2016 (UTC)
//அவ்வாறு பல கட்டுரைகளில் செய்யப்பட்டுள்ளது.//
அவையெல்லாம் தமிழ் தொடர்புடையதா? தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் குறித்த விசயங்களுக்கு தனி விதிகள், விதிவிலக்குகள் போன்ரவற்றை கடைபிடிப்பது நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:42, 19 அக்டோபர் 2016 (UTC)
எண்ணுவோம்
தொகுதிலகம் - சங்ககாலப் பெயர் \ திலகமும் மஞ்சாடியும் ஒன்றுதான் என்னும் முடிவுக்கு வந்து இணைப்போமாயின் திலகம் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரையோடு மஞ்சாடி கட்டுரையை இணைப்பது பொருத்தம். --Sengai Podhuvan (பேச்சு) 13:34, 13 நவம்பர் 2016 (UTC)