பேச்சு:திலாப்பியா

Active discussions
Exquisite-kfind.png திலாப்பியா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

பெயர்தொகு

இக்கட்டுரை மேலும் தொடரும்

  • சிலேபி(ஜிலேபி)கெண்டை என்று இதனை தமிழகத்தில் அழைப்பர். பல மாவட்டங்களில் இதனை கேட்டிருக்கிறேன்.கண்டு இருக்கிறேன். இதன் ருசியே தனி. உட்புறம் மிகவும் முள் எனப்படும் சிறு எலும்புகள் அதிகமாக இருக்கும். இதற்குரிய நிகழ்படத்தை கண்டு இரசிக்கவும்--த* உழவன் 01:32, 11 சனவரி 2011 (UTC)

தகவல் உழவன் சொல்வது சரிதான் இதை ஜிலேபிகெண்டை என்றே தமிழகத்தில் அழைப்பர். இம்மீன் தமிழக மண்ணைச் சேர்ந்த மீன்ன்று, இது ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு அறிமுகமானது என படித்திருக்கிறேன். ArulghsrArulghsr (பேச்சு) 04:21, 10 மே 2016 (UTC)

திலாப்பியா என்பது தமிழன்று. இதன் தமிழ்ப் பெயர் செப்பலி என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 07:43, 9 மே 2016 (UTC)

செப்பலி, செல்வன் ஆகிய பெயர்கள் இலங்கையில் வழங்கப்படுகின்றன.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:08, 9 மே 2016 (UTC)

இச்சொல்லிற்கான பொருளை விரித்துக் கூறுக. அவ்வழியில் மேலும் சொற்களை உருவாக்கவே, இந்த வேண்டுகோள்.--உழவன் (உரை) 03:59, 10 மே 2016 (UTC)

இதன் பொருள் தெரியாது. செப்பலி என்பது பொது வழக்குச் சொல். இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் அடிக்கடி உண்டிருக்கிறோம்.--பாஹிம் (பேச்சு) 04:45, 10 மே 2016 (UTC)

@Info-farmer மற்றும் Fahimrazick: http://tamilvu.org/library/ldpam/ldpam03/ldpam033/images/ldpam033039.jpg

--மதனாகரன் (பேச்சு) 12:19, 10 மே 2016 (UTC)

நன்றி மதனா! விரைவில் கலைக்களஞ்சியங்களையும் பொதுவகத்தில் மின்னூல்களாக ஏற்றி, விக்கிமூலத்திலும் மெய்ப்பு பார்க்கும் தொகுதிகளுடன் இணைத்து விடுகிறேன். தமிழகத்தில் தேர்தல் நேரம் என்பதால், த. இ. க. வில் சில தொய்வுகள் இருக்கின்றன. ஆகவே, மேற்கூறிய இலக்கை முடிக்க இன்னும் ஒரு மாதம் ஆகும்.--உழவன் (உரை) 02:29, 11 மே 2016 (UTC)

கட்டுரைதொகு

இக்கட்டுரை எப்படி முதற்பக்கக் கட்டுரையானதோ தெரியாது. ஆதாரமற்ற செய்திகள், தமிழுக்கு அறவே பொருந்தாக சொல், வசன அமைப்புகள் என்பன நிறைந்திருக்கும் இக்கட்டுரை வேறெங்கேனுமிருந்து பிரதி பண்ணப்பட்டிருக்குமாவென்றும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 04:45, 10 மே 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திலாப்பியா&oldid=2062601" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திலாப்பியா" page.