பேச்சு:தி வொண்டர் தட் வாஸ் இந்தியா

ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் அப்படியே எழுதும் போது INDIA என்று வருவதை இன்டியா என்று தானே மாற்றம் செய்ய வேண்டும். மாறாக அதைமட்டும் இந்தியா என்று மொழிமாற்றம் செய்துவிடுவது பொருத்தமாகாது. இப் பெயர் நூலின் பெயராகையால் இப்படிப் பகுதிகளாக மொழிமாற்றம் செய்யவும் முடியாது. விக்கிபீடியா விதிகளும் இதனை அனுசரிக்கமாட்டா என எண்ணுகின்றேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 17:47, 28 மார்ச் 2012 (UTC)

தி வொண்டர் தட் என்று எழுதும் போது கூட மூல மொழி ஒலிக்கு முற்றிலும் இசைவாக நம்மால் எழுத்துபெயர்க்க இயலாது. INDIA என்பதை இந்தியா என்று எழுதுவதும் தமிழ் மரபுக்கு உட்பட்ட எழுத்துபெயர்ப்பே. தவறில்லை. இந்தியா, தமிழ் என்று தமிழ் எழுத்துகளில் எழுதினாலும் ஆங்கிலத்தில் INDIA, TAMIL என்று தான் எழுதுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியே ஒலிபெயர்க்கிறேன் என்று டமில், டேமில் என்று எழுதத் தொடங்குவது தான் தவறான விளைவைத் தரும்.--இரவி (பேச்சு) 04:38, 29 மார்ச் 2012 (UTC)

Start a discussion about தி வொண்டர் தட் வாஸ் இந்தியா

Start a discussion
Return to "தி வொண்டர் தட் வாஸ் இந்தியா" page.