தி வொண்டர் தட் வாஸ் இந்தியா
தி வொண்டர் தட் வாஸ் இந்தியா (The Wonder That was India, அந்த அதிசயம் இந்தியா தான்) என்பது ஏ. எல். பசாம் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூல் பண்டைய இந்தியாவின் சிறப்புக்களை, குறிப்பாக வரலாறு, கலை, மரபு, சமூகம் முதலான விடயங்கள் பற்றிப் பேசுவதாக அமைகின்றது.[1] இந்நூல் 1954-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனுடைய முதற்பாகத்தின் இரண்டாம் பதிப்பு 1963-இல் வெளியிடப்பட்டதுடன் இந்நூல் பல தடவைகள் பதிப்பிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகம் 1986-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
தி வொண்டர் தட் வாஸ் இந்தியா அட்டைப்படம் | |
நூலாசிரியர் | ஏ. எல். பசாம் |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
பொருண்மை | வரலாறு |
வெளியிடப்பட்டது | 1954 (சிட்விக் & சாக்சன்) |
பக்கங்கள் | 572 (மூன்றாம் பதிப்பு, 1977) |
ISBN | 0-330-43909-X |
சுருக்கம்
தொகுஇந்நூல் மேற்கத்தியப் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டது. யேம்சு மில், தாமசு பாபிங்டன் மெக்காலே, வின்சென்ட் ஆர்தர் சிமித் போன்ற எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் எதிர்மறையான விமரிசனங்களை பாசாம் இந்நூலில் திருத்த முயற்சித்துள்ளார்.[2]
பசாமால் எழுதப்பட்ட முதலாம் பாகத்தில் பண்டைய கால இந்தியா முதலாக முசுலிம்களின் வருகை வரையான தகவல்கள் உள்ளன. இரண்டாம் பாகம் 1200-1700 வரையான ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.
வரவேற்பு
தொகுதாமசு டிரவுட்மன் இந்தப் புத்தகத்தை தனது முதன்மையான தாக்கமாக கருதுகிறார், இது அவரை இந்தியாவைப் படிக்கத் தூண்டியது.[3] 2005 பதிப்பின் முன்னுரை டிரவுட்மனால் எழுதப்பட்டது.[2][3] புத்தகம் தன்னைக் கவர்ந்ததாக தாவீது சல்மன் கூறியுள்ளார்.[4]
மொழிபெயர்ப்பு
தொகுஇந்நூல் தமிழில் வியத்தகு இந்தியா என்னும் தலைப்பில் செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டினன் என்பவர்களினால் 1963 ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு, இலங்கை அரசினால் வெளியிடப்பட்டது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Basham, A. L. (2004). The Wonder That was India. London: Picador. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-330-43909-X.
- ↑ 2.0 2.1 "India interpreted". தி இந்து. 6 மார்ச்சு 2005. http://www.thehindu.com/lr/2005/03/06/stories/2005030600160200.htm. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 "Kinship and language". பிரண்ட்லைன். http://www.frontline.in/static/html/fl2614/stories/20090717261408000.htm. பார்த்த நாள்: 19 August 2015.
- ↑ "An accomplished Indologist". தி இந்து. 10 March 2006. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/an-accomplished-indologist/article3217418.ece. பார்த்த நாள்: 19 August 2015.