தாவீது சல்மன்

தாவீது தீன் சல்மன் (David Dean Shulman) இந்திய மொழிகளைப் பற்றி நன்கு அறிந்த முதன்மை இந்தியவியலாளர்களுள் ஒருவர். இவர் தென்னிந்தியாவின் வரலாறு, இந்திய பாடலமைப்புகள், இசுலாமியத் தமிழ், திராவிட மொழிகள், கருநாடக இசை ஆகிய பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார். சமூக நலவிரும்பியும், மனிதவியல் ஆய்வாளரும் ஆவார். எபிரேய மொழியில் பாடல்களை எழுதியுள்ளார். யெரூசலேமில் உள்ள எபிரேயப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையிலும், இந்திய, ஈரானிய ஆய்வுத் துறைகளிலும் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[1] தென்னிந்தியா தொடர்பான இறை நம்பிக்கை, கோயில்கள் பற்றிய பல நூல்களை எழுதியுள்ளார்.[2] எபிரேயம், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையும் நன்கறிந்த இவர், தமிழ், சமற்கிருதம், இந்தி, கிரேக்கம், உருசிய மொழி, பிரெஞ்சு, இடாய்ச்சு, அரபி, பாரசீக மொழி, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுணர்ந்தவர், எய்லீன் லெந்துமன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு எவியடர், மிக்கைல், ஏதன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

தாவீது சல்மன், 2008

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

(ஆங்கிலத்தில்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_சல்மன்&oldid=3247566" இலிருந்து மீள்விக்கப்பட்டது