பேச்சு:தீவு
தமிழ் விக்கிப்பீடியாவில் கூட்டு முயற்சிக் கட்டுரைகள் அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு வரி மட்டுமே உள்ள இந்த முக்கியமான கட்டுரையை அனைவரும் இணைந்து விரிவாக்கலாமே? வாரம் ஒரு கட்டுரையை இது போல் விரிவாக்குவது நன்மை பயக்கும்--இரவி 21:39, 28 சனவரி 2012 (UTC)
உலகின் முக்கியத் தீவுகள்
தொகுஉலகின் முக்கியத் தீவுகள் எனும் பட்டியலை நீக்கலாமா? முக்கியம் எனின் எவ்வகை முக்கியம் என்பது விளக்கப்பட வேண்டும். கோபி 13:08, 31 சனவரி 2012 (UTC)
- பரவலாக அறியப்பட்ட என்னும் நோக்கில். மேலும் தீவு என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் போலவும். முக்கியம் என்னும் சொல்லை வேண்டுமானால் திருத்தி பொதுவாக அறியபப்டும் சில தீவுகள் என்று எழுதலாம்.--செல்வா 13:21, 31 சனவரி 2012 (UTC)
- அவையனைத்தும் பரவலாக அறியப்பட்டவைதானா? தீவுகளுக்கான எடுத்துக்காட்டுக்கள் கட்டுரைகளில் பிற இடங்களில் வருகின்றன என நினைக்கிறேன். முக்கிய தீவுகள், பெரிய தீவுகள், சிறியதீவுகள் போன்ற பட்டியல்கள் கட்டுரையினுள் தேவைதானா? பட்டியல் தனிப்பக்கமாக இருப்பின் பொருத்தமாயிருக்கும். நன்றி. கோபி 13:47, 31 சனவரி 2012 (UTC)
உரை திருத்தம்
தொகு- Newfoundland என்று ஆங்கிலத்தில் இருந்தாலும் இது நியூ ஃபின்லாந்து என்றே அழைக்கப்படுகின்றது. இதே போல நியூ கினி
- இக்கட்டுரை குறுந்தகடுத் திட்டத்தில் இல்லை என்று நினைக்கின்றேன். எனவே எளிய தமிழ்வழி, த.வியில் உள்ள பரிந்துரைப்படி கூடியமட்டிலும் கிரந்தம் குறைத்து இருக்கின்றேன்.
- அட்டவணையில் "முக்கிய" என்னும் சொல்லை மாற்றி இருக்கின்றேன்
--செல்வா 13:33, 31 சனவரி 2012 (UTC)
தீவு
தொகுதீவு எனப்படுவது நான்கு பக்கமும் கடலால் அல்லது பரந்த வற்றாத நீர்பரப்பினால் சூழப்பட்ட ஒரு சிறிய நிபப்பரப்பு தீவு எனப்படும். --சிவம் 01:15, 23 செப்டெம்பர் 2012 (UTC)
குழப்பம்
தொகுஇங்கே மண் தீவு என்ற உப தலைப்பு காணப்படுகிறது. பொதுவாக மண் திட்டு அல்லது மணல் திட்டு என்றே கூறப்படுகிறது. மண் தீவு என்று குறிப்பிடும் வழக்கம் தமிழில் இல்லையே?--பாஹிம் (பேச்சு) 03:06, 20 சனவரி 2015 (UTC)
- பாகிம், கட்டுரையை நீங்களே திருத்தி விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:39, 20 சனவரி 2015 (UTC)
நல்லது.--பாஹிம் (பேச்சு) 09:35, 20 சனவரி 2015 (UTC)