பேச்சு:து. உருத்திரமூர்த்தி
Untitled
தொகுஇந்தக் கட்டுரைக்கு மகாகவி உருத்திரமூர்த்தி என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும். - சிறீதரன் 21 மார்ச் 2006
- விக்கிபீடியா பெயரிடல் மரபின் படி பட்டப்பேயர்களைச் சேர்ப்பது வழக்கம் இல்லை -- சிவகுமார் 11:56, 21 மார்ச் 2006 (UTC)
மஹாகவி என்பது இந்த எழுத்தாளரின் புனைபெயர். அப்பெயரே மிகப் பிரபலமானதாகும். அவரது இயற்பெயரை அற்நிந்தவர்கள் சொற்பமே. ஆதலால் இக்கட்டுரையை மஹாகவி என்பதற்கு வழிமாற்றுவதே பொருத்தமாயிருக்கும். ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கவும். --கோபி 17:10, 26 செப்டெம்பர் 2006 (UTC)
- கோபி, தனியே மகாகவி என்று அழைப்பது பாரதியாரை மட்டுமே. அவர் உலகளாவிய கவிஞர். உருத்திரமூர்த்தியை பொதுவாக ஈழத்து மகாகவி அல்லது மகாகவி உருத்திரமூர்த்தி என்றே அழைப்பர். எனவே நான் ஏற்கனவே தெரிவித்தபடி இத்தலைப்பை மகாகவி உருத்திரமூர்த்திக்கு வழிமாற்றுவதே முறையாக இருக்கும். இதுதவிர, மகாகவி vs மஹாகவி. எது சரியானது? மகாகவி எனப்பாவிப்பது சிறந்தது என்பது என் அபிப்பிராயம்.--Kanags 11:40, 27 செப்டெம்பர் 2006 (UTC)
சிறீதரன், பாரதியத் தான் மகாகவி பாரதி என்கிறோம். உருத்திரமூர்த்தியின் புனைபெயர் மஹாகவி என்பதாகும். நான் வடஎழுத்துக்களை தவிர்ப்பதையே விரும்புகிறேன். ஆனால் அவர் தனக்கிட்ட பெயரென்பதால் மாற்றுவது சரியல்ல. மேலும் அவர் ஈழத்து இலக்கிய உலகில் மஹாகவியென்றே அறியப்படுகிறார். அவருடைய இயற்பெயர் பலருக்கும் தெரியாததாகும். ஆதலால் மஹாகவி என்ற தலைப்பில் கட்டுரை இருப்பது சரியானதென்று தோன்றியது. ஆனால் இது விக்கிபீடியா பெயரிடலுக்கு ஏற்புடையதா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. கோபி 13:01, 27 செப்டெம்பர் 2006 (UTC)
பாரதியை மகாகவி என்றும் மஹாகவி என்றும் எல்லோரும் தாங்கள் நினைத்தபடி அழைக்கிறார்கள். பார்க்க: 1. மேலும் மகாகவி காளிதாஸ் என்று பல மகாகவிகள் இருக்கிறார்கள். எனவே விக்கிபீடியா பெயரிடல் மரபிற்கேற்ப எனது பரிந்துரைகள்:
- மஹாகவி பக்கத்தை மகாகவி பக்கத்துக்கு வழிமாற்றி, பக்கவழி நெறிப்படுத்தல் (disambiguation) மூலம் தற்போதைக்கு நான்கு பக்கங்களை உருவாக்கலாம்: மஹாகவி உருத்திரமூர்த்தி, மகாகவி பாரதியார், மகாகவி காளிதாஸ், மகாகவி காளிதாஸ் (திரைப்படம்).