பேச்சு:தேற்றா
புதிய செய்தி, குறித்தமைக்கு நன்றி சுந்தர். தெளிவாக்கும் (தேற்றும் --> தேத்தும்) கொட்டை என்று பெயர் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது என்ன கொட்டை, எந்தச் செடியில் இருந்து (மரஞ்செடிகொடியில் இருந்து) பெறும் கொட்டை என்று தெளிவுபடுத்த வேண்டும். எந்த ஆண்டில் வெளியான ஆனந்தவிகடன் இதழ் என்பதும் குறிக்கப்பட வேண்டும். --செல்வா 17:09, 15 அக்டோபர் 2008 (UTC)
- புதிய செய்திதான். ஆனால் குறித்தது நானில்லை, சிவாதான். :-) -- சுந்தர் \பேச்சு 17:12, 15 அக்டோபர் 2008 (UTC)
- ஓ! மன்னிக்கவும் சிவா, வாழ்த்து உங்களுக்குத்தான்! --செல்வா 17:27, 15 அக்டோபர் 2008 (UTC)
- இது விகடன் குழுமத்தின் பசுமை விகடன் எனும் இதழ். 2008-ஆம் ஆண்டு வெளியானதே. கட்டுரையில் சேர்க்க மறந்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி செல்வா.--சிவக்குமார் \பேச்சு 14:26, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஓ! மன்னிக்கவும் சிவா, வாழ்த்து உங்களுக்குத்தான்! --செல்வா 17:27, 15 அக்டோபர் 2008 (UTC)
இல்லி அல்லது இல்லம் என்று ஒரு மரம் இருப்பதாகத் தெரிகின்றது. இதனை clearing-nut tree என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது. இதனை தேற்று என்றும் கூறுவார்கள் என்னும் குறிப்பு உள்ளது. புறநானூற்றிலே உள்ள குறிப்பும் வலுவூட்டுகின்றது. புறநானூற்றில் இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை (புறநா. 164, 4) என்னும் குறிப்பை நோக்குக. இங்கு பார்க்கவும்--செல்வா 04:08, 16 அக்டோபர் 2008 (UTC)
இல்லி என்பது தேற்றா மரத்தின் இலை என்று இங்கு குறிப்பிட்டுள்ளார்கள்]. எனவே தேற்றா மரக் கொட்டையைத்தான் தேத்தாங்கொட்டை என்கிறார்கள் என்று நினைக்கிறேன்.--செல்வா 04:15, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஆம் இங்கு தேற்றின் வித்திற் கலங்குநீர் தெளிவதென்ன (ஞானவா. தாம வியா. 3) என்று தந்திருப்பதிலிருந்து இது ஐயமின்றித் தெளிவாகிறது! இந்த மேற்கோள்களையும் சேர்த்து இல்லி என்றொரு கட்டுரையைத் துவக்கி வளர்த்தெடுக்க வேண்டும். இதைப் பற்றிய பிற செய்திகளும் படங்களும் கீழே. -- சுந்தர் \பேச்சு 08:38, 16 அக்டோபர் 2008 (UTC)
- செல்வா, சுந்தர், உங்கள் விரிவான தேடலுக்கும் குறிப்புகளுக்கும் நன்றி. நான் சிவகங்கை மாவட்டத்திலுள்ள செம்பனூர் என்னும் ஊருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ற போது மக்கள் இக்கொட்டையைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வூர்க் காரர்கள் யாராவது அந்த விதையின் படத்தையும் மரத்தின் படத்தையும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும். --சிவக்குமார் \பேச்சு 14:26, 16 அக்டோபர் 2008 (UTC)
- கலித்தொகை உரையில் தேற்றா மரம் பற்றிய குறிப்பையும் தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது. அறிவியற்பெயர் Strychnos potatorum என்பதாகக் குறித்துள்ளார்கள்.
- தேற்றா: n. < தேற்று-. [M. tēṟṟā- maram.] Clearing-nut tree, m. tr., Strychnos potatorum; மரவகை. தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறுபோல (கலித். 142, உரை).
- இப் பக்கத்தப் பார்க்கவும்
- Strychnos potatorum பற்றி இப்பக்கத்தில் இன்னும் சில குறிப்புகள் உள்ளன
- ஐக்கிய நாடுகள் அவையின் வலைப்பக்கத்தில்"Treatment of water by the addition of chemical coagulants and precipitants has been practiced since ancient times, even though the principles and physico-chemical mechanisms may not have been understood. Sanskrit writings refer to the use of vegetable substances, such as the seed contents of Strychnos potatorum and Moringa oleifera, which are still in use today for household water treatment (Gupta and Chaudhuri, 1992)." என்று குறித்துள்ளார்கள். ஐ.நா பக்கத்தை இங்கே பார்க்கவும். இவை தவிர "Strychnos potatorum" என்னும் தொடரை இட்டுத் தேடினால் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன (கூகுள் 9,670 பக்கங்களைச் சுட்டுகின்றது!).
- ஆ என்பது ஒரு மரவகை. ஆ என்பது ஆச்சா மரம் என்றும் ஒரு பொருள் கழக அகராதி சுட்டுகின்றது. எனவே தேற்றா என்பது தேற்று + ஆ என்று ஆகியது.
--செல்வா 15:36, 16 அக்டோபர் 2008 (UTC)--செல்வா 15:40, 16 அக்டோபர் 2008 (UTC)
ஆம் செல்வா. தேற்றாங்கொட்டை என்று அடுத்த வரியிலேயே கொடுத்துள்ளனர். தேத்தாங்கொட்டை என்பது பேச்சு வழக்கு. எனவே கட்டுரையே தேற்றாங்கொட்டை என்னும் தலைப்புக்கு நகர்த்தி விட்டு தேத்தாங்கொட்டை என்பதை அடைப்புக் குறிக்குள் கொடுக்கலாம்.--சிவக்குமார் \பேச்சு 15:52, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஆம் தலைப்பை தேற்றாங்கொட்டை என்று மாற்றலாம். இது தொடர்பாக பயனுடைய பல செய்திகள் உள்ளன ஆ என்னும் மரம் பற்றியும், ஆச்சா மரம், தேற்றா மரம் பற்றியும், நீரைத் தூய்மை செய்தல் பற்றியும் பற்பல கட்டுரைகள் எழுதுதல் வேண்டும். முதன்மைக் கட்டுரையாக தேற்றா மரம் என்று ஒன்று இருத்தல் வேண்டும். அம்மரத்தின் கொட்டை பற்றியது வேறு ஒரு தனி குறுங்கட்டுரை.. --செல்வா 15:58, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஆச்சா மரத்தை Shorea_robusta என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது. சால மரம் என்று வட இந்தியாவில் வழங்கும் மரம். இதனைத் தமிழில் ஆச்சா என்பதற்கு மாறாக குங்கிலியம் என்று ஒரு கட்டுரை தமிழ் விக்கியில் உள்ளது. ஆச்சாவும் குங்கிலியமும் ஒன்றா என்று விளங்கவில்லை.--செல்வா 16:07, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஆம் சால மரம் என்பதும், குங்கிலியம் என்பதும், ஆச்சா மரம் என்பதும் Shorea_robusta என்றே தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது. ஆ என்பதும் ஆச்சா மரம் (ebony) என்று குறிப்பிடுவதால், இவை யாவும் ஒன்றே. குங்கிலியம் என்பது guggulu என்னும் வேற்றுமொழிச் சொல்லொன்றில் இருந்து வருவதாகக் காட்டுகின்றது தமிழ் லெக்சிகன். --செல்வா 19:45, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஆச்சா மரத்தை Shorea_robusta என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது. சால மரம் என்று வட இந்தியாவில் வழங்கும் மரம். இதனைத் தமிழில் ஆச்சா என்பதற்கு மாறாக குங்கிலியம் என்று ஒரு கட்டுரை தமிழ் விக்கியில் உள்ளது. ஆச்சாவும் குங்கிலியமும் ஒன்றா என்று விளங்கவில்லை.--செல்வா 16:07, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஆம் தலைப்பை தேற்றாங்கொட்டை என்று மாற்றலாம். இது தொடர்பாக பயனுடைய பல செய்திகள் உள்ளன ஆ என்னும் மரம் பற்றியும், ஆச்சா மரம், தேற்றா மரம் பற்றியும், நீரைத் தூய்மை செய்தல் பற்றியும் பற்பல கட்டுரைகள் எழுதுதல் வேண்டும். முதன்மைக் கட்டுரையாக தேற்றா மரம் என்று ஒன்று இருத்தல் வேண்டும். அம்மரத்தின் கொட்டை பற்றியது வேறு ஒரு தனி குறுங்கட்டுரை.. --செல்வா 15:58, 16 அக்டோபர் 2008 (UTC)
இந்தக் கட்டுரையைக் காண மகிழ்ச்சி. இது போல் தமிழர் வாழ்வோடு இணைந்துள்ள சின்னச் சின்ன ஆனால் முக்கியமான விடயங்கள் குறித்தும் கட்டுரைகள் எழுத வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எங்கள் உறவினர் வீடுகள், என் வீட்டிலும் இன்றும் இந்தக் கொட்டை பயன்படுத்துகிறோம். ஊருக்குப் போய் வரும் போது படம் எடுத்து வருவேன்.--ரவி 19:07, 16 அக்டோபர் 2008 (UTC)
- ஆம் படம் எடுத்து வந்து பதிவு செய்யுங்கள் ரவி.--செல்வா 19:45, 16 அக்டோபர் 2008 (UTC)
- அருமையான தகவல்கள். இவையனைத்தையும் கட்டுரைகளாக எழுத வேண்டும். ரவியின் படங்களும் வந்ததும் இன்னமும் வளம் சேரும். பசுமை விகடனில் வந்துள்ளதால் இணையத்தில் தேடி இங்கு பல பேர் வர வாய்ப்புண்டு. அதனால் நல்ல ஆர்வமூட்டும் கட்டுரையாகவும் ஒரே இடத்தில் முழுமையாகத் தகவல்களைத் தொகுத்தும் எழுதினால் நல்ல பயன் விளையும். -- சுந்தர் \பேச்சு 01:40, 17 அக்டோபர் 2008 (UTC)
ஒரு கட்டுரை
தொகு- தமிழரின் மரபுச் செல்வங்கள் - அறிவியல் தொழில்நுட்பம் - 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, கட்டுரை:பண்டைத் தமிழர் வாழ்வில் தேற்றாங்கொட்டை - அ. சரசுவதி, திட்டக் கல்வியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
மேலுள்ள நூலில் பல மேற்கோள்கள் குறிக்கப்பட்டுள்ளன. பி. எல். சாமி அவர்களும் இது பற்றிக் கூறியுள்ளதாகக் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "Strychnos potatorum" என்பதே தேற்றாமரம் எனவும் இக்கட்டுரை கூறுகிறது. --சிவக்குமார் \பேச்சு 15:19, 21 அக்டோபர் 2008 (UTC)