பேச்சு:தேவசகாயம் பிள்ளை

Active discussions
Exquisite-kfind.png தேவசகாயம் பிள்ளை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


படிமத்தில் திருத்தம்தொகு

ஜெயரத்தினா, நீங்கள் தரவிறக்கிய படிமத்தைக் கண்டேன். அதில் கர்தினால் அமாத்தோ தூபம் காட்டும் வேளையில் அவர் அருகே நிற்பவர் கர்தினால் தோப்போ ஆவார். அப்படிமத்தில் ஆயர் ரெமிஜியுஸ் தெரியவில்லை. எனவே திருத்தம் செய்துவிடுங்கள். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 01:08, 12 திசம்பர் 2012 (UTC)[]

 Y ஆயிற்று பிழையினை சுட்டியமைக்கு நன்றிகள் பல   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:34, 12 திசம்பர் 2012 (UTC)[]
  • மற்றுமொரு சிறு திருத்தம் - படிமத்திற்குக் கொடுக்கப்பட்ட பெயர் Cardinal Angelo Amato என்று இருப்பதே சரியான எழுத்துவடிவம். அதையும் திருத்திவிடுங்கள். --பவுல்-Paul (பேச்சு) 05:58, 12 திசம்பர் 2012 (UTC)[]
 Y ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:02, 12 திசம்பர் 2012 (UTC)[]

அன்றைய திருவிதாங்கூர் அரசின் ஆவணங்களோடு இக்கட்டுரையின் தகவல்கள் பெருமளவு முரண்படுகின்றன. பக்கச்சார்புடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. --இரா. பாலா (பேச்சு) 15:28, 7 ஏப்ரல் 2017 (UTC)[]

சிக்கல்கள்தொகு

சில சிக்கல்கள்
  • {{POV}}, {{refimprove}} ஏன் இணைக்கப்பட்டது? // அன்றைய திருவிதாங்கூர் அரசின் ஆவணங்களோடு இக்கட்டுரையின் தகவல்கள் பெருமளவு முரண்படுகின்றன. பக்கச்சார்புடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.// என்ற குறிப்ப மட்டும் போதாது. விளக்கமாக முரண்பாடு, பக்கச்சார்பு பற்றி குறிப்பிட வேண்டும்.
திருத்தப்பட்டது. --AntanO (பேச்சு) 15:49, 11 சூன் 2018 (UTC)[]
  • உசாத்துணை - http://murasancodeparish.blogspot.com என்பதும், http://www.tamilhindu.com/ நம்பகமான மூலமாக ஏற்றுக் கொள்ள முடியாது. முதலாவது இலவச வலைப்பூ, இரண்டாவது பணம் செலுத்தி பெற்றுக் கொண்ட வலைத்தளம். இதில் கட்டுரை எழுதிய பால.கௌதமன் யார்?
திருத்தப்பட்டது. --AntanO (பேச்சு) 15:49, 11 சூன் 2018 (UTC)[]
  • சொல்லாடல், உசாத்துணையினை திரிபு – கட்டுக்கதை என்ற பதப்பிரயோகம் ஏற்புடையதல்ல. இது ஒரு சமூகத்தின் சமய விடயம் என்பதால் வேறு சொல் சேர்த்திருக்கலாம். கட்டுக்கதை என்பது tale என்றாகும். ஆனால் அங்குள்ள உசாத்துணை “It is difficult to believe such a story as this. It looks to my mind most improbable on its face.” என்கிறது. அதில் improbable என்கிறது tale (கட்டுக்கதை) என்றல்ல. இவ்விதம் உசாத்துணையினை திரிபுபடுத்தி, குறிப்பாக மற்ற சமயத்தினரை ஏளனப்படுத்தும் சொல்லாடல் இப்பொது இடத்திற்கு உகந்ததல்ல.
  • பந்தி அமைப்பு – அறிமுக பந்தியில் தேவையற்ற சொருகல் //இது கட்டுக்கதை என இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த திரு.எம்.ஜி.எஸ்.நாராயணன் ஆகியோர் கருத்துரைக்கின்றனர்// எது கட்டுக்கதை? // நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்கின்றனர்// இராணுவத் தளபதி கட்டுரை எதையும் குறிப்பிடாதிருக்க ஏன் இந்தக் குறிப்பு. மேலும், இது பற்றி உசாத்துணையில் இல்லை. இருந்தால், அக்குறிப்பினை இங்கு தருக.
  • // சனவரி 14 இந்துத் தமிழர்களின் பொங்கல் விழாவினை சீரளிக்கும் விதமாக இம்மதிரியான கற்பனை நிகழ்வுகள் எடுத்தியம்பப்படுகிறது// காரணம்? எவ்விதம் சீரழிக்கலாம்? நம்பகமான மூலம் தேவை
  • // ஏனெனில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஈழவர்கள், கிறுத்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் படை வீரர்களாக பணியாற்றியுள்ளனர்.// இதனால் சொல்ல வருவது?
  • எம்.ஜி.எஸ்.நாராயணன் கருத்தினை ஏற்றுக் கொள்ளலாமா? இவர் கருத்து எந்த நம்பகமாக மூலத்தில் உள்ளது. இவர்தானே ஆண்டாளை தேவதாசி என்ற யூகத்தை வெளிட்டார். எம்.ஜி.எஸ்.நாராயணன் சொல்கிறார் என்பதற்காக ஆண்டாள் தேவதாசியா?
  • உசாத்துணையினை சிக்கல் – எம்.ஜி.எஸ்.நாராயணன் கருத்திற்கு எவ்வாறு Travancore Manual ஐ இணைக்கலாம்.

இச்சிக்கல்கள் களையப்படல் வேண்டும். மேலும். வேறு பல மூலங்கள் தேவசகாயம் பிள்ளை பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் சேர்க்கலாம். --AntanO (பேச்சு) 15:42, 11 சூன் 2018 (UTC)[]

http://www.tamilhindu.com/ இணையத் தளத்தினை எதன் அடிப்படையில் நம்பகமான மூலமாக ஏற்றுக் கொள்ள முடியாது?--இரா. பாலாபேச்சு 17:40, 11 சூன் 2018 (UTC)[]
en:WP:SPS--AntanO (பேச்சு) 17:57, 11 சூன் 2018 (UTC)[]
நன்றி AntanO. தமிழ் இந்து இணையத்தளம் Self-published sources என்ற வரையறைக்குள் வருமா?--இரா. பாலாபேச்சு 00:30, 12 சூன் 2018 (UTC)[]
//improbable என்கிறது tale (கட்டுக்கதை) என்றல்ல// improbable - not likely to be true or to happen இதை கட்டுக்கதை என்று குறிப்பிடுவதில் தவறில்லை. நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறுவதை கட்டுக்கதை என்பர். மேலும் //இராணுவத் தளபதி கட்டுரை எதையும் குறிப்பிடாதிருக்க ஏன் இந்தக் குறிப்பு. மேலும், இது பற்றி உசாத்துணையில் இல்லை. இருந்தால், அக்குறிப்பினை இங்கு தருக.// நீலகண்டன் பிள்ளை இராணுவத்தில் பணியாற்றினார் என்ற கட்டுக்கதையும் உண்டு. //ஏனெனில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஈழவர்கள், கிறுத்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் படை வீரர்களாக பணியாற்றியுள்ளனர்// கிறுத்துவர்கள் படைவீரர்களாகப் ஏற்கனவே பணியாற்றியிருக்கின்றனர். எனவே நீலகண்டன்பிள்ளை மட்டும் கிறுத்துவராக மாறியதற்காக அரசர் ஏன் கொல்லவேண்டும்? --இரா. பாலாபேச்சு 00:54, 12 சூன் 2018 (UTC)[]
en:WP:SPS இங்கும் இதனோடு ஒட்டிய பக்கத்திலும் நம்பகமான மூலங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஏரணச் சுழற்சியில் கட்டுக்கதை என்பதற்கு விளக்கமளிக்க வேண்டாம். உசாத்துணை ஒன்றைக் குறிப்பிட, அதனை இங்கு திரிபுபடுத்தி ஏரணம் கற்பிக்க வேண்டாம். கண்ணியமாக, நம்பகமான மூலங்களிலிருந்து மாற்றக் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். சில சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளேன். அவற்றுக்கு தகுந்த பதிலை அளிக்கவும். பதில் இல்லாவிட்டால், ஆதாரமற்ற, சிக்கல் உள்ள பகுதிகள் நீக்கப்படும். நன்றி. --AntanO (பேச்சு) 11:14, 13 சூன் 2018 (UTC)[]
இக்கட்டுரையை இற்றைப்படுத்தி ஆதாரம் இணைக்க முற்பட்டேன். முறையாக அந்த இணைப்பு நிகழவில்லை. அருள்கூர்ந்து சரிப்படுத்தவும். George46
சரிப்படுத்தியாயிற்று. பவுல்-Paul (பேச்சு) 00:36, 26 பெப்ரவரி 2020 (UTC)[]
Return to "தேவசகாயம் பிள்ளை" page.