பேச்சு:தொப்புள் அடையாளக் காமம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic தலைப்பு பற்றி
இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள 2வது படம் தமிழ் விக்கியில் இணைப்பதற்குப் பொருத்தமானதல்ல என்பது என் அபிப்பிராயம். படத்தை நீக்கக் கோருகிறேன். அல்லது கட்டுரையையே நீக்கலாம். கட்டுரையில் தேவையற்ற குப்பை இணையத்தளங்களுக்குத் தொடுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் நீக்கக் கோருகிறேன்.--Kanags \உரையாடுக 03:41, 23 அக்டோபர் 2011 (UTC)
- ஆதரவு. --Kanags \உரையாடுக 03:41, 23 அக்டோபர் 2011 (UTC)
- 2வது படம் நீக்கபட்டுள்ளது.அவை இணையதளங்கள் அல்ல.காம உணர்வுகள் தொடர்பாக சில மருத்துவர்களால் எழுதப்பட்ட நூல்களுக்கான இணைப்புகள் ஆகும்.அவை மேற்கோள்கள் என்ற முறையில் மட்டுமே கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.--WikiMan88 07:27, 23 அக்டோபர் 2011 (UTC)
தலைப்பு பற்றி
தொகுFetishism என்ற சொல்லுக்கு 'அடையாளக் காமம்' என்று பொருள் தருகிறது தமிழ் இணையக் கழகம். தமிழ் விக்சனரியும் அதையே கொண்டுள்ளது. இந்த புத்தாக்கத்தைவிட இயல்பான, இலக்கியத்தில் ஏற்கனவே பயன்படுத்திய சொல் ஏதாவது இருந்தால் பயன்படுத்தலாமென நினைக்கிறேன். பரிந்துரைகளை வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:52, 3 திசம்பர் 2011 (UTC)
- தொப்புள் மையல் பொருந்துமோ? காண்க: http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&matchtype=exact&display=utf8 -- சுந்தர் \பேச்சு 14:52, 3 திசம்பர் 2011 (UTC)
- நீங்கள் கொடுத்த தொடுப்பு எந்த இணையப்பக்கத்தையும் தரவில்லை.
- http://www.eudict.com/?lang=engtam&word=Fetish
- http://dictionary.tamilcube.com/index.aspx
- இந்த சில தொடுப்புகளில் மூட பக்தி, உயிரில்லாப்பொருள்களை வணங்குதல்,மூடநம்பிக்கை போன்ற அர்த்தங்களே தருகின்றன.இவை எதுவும் "அடையாளக் காமம்" என்ற சொல்லுக்கு நிகராக இல்லை என்பது எனது கருத்து.WikiMan88 15:29, 3 திசம்பர் 2011 (UTC)
- இந்த இணைப்பு உங்களுக்கு வேலை செய்கிறதா பாருங்கள். இல்லையெனில் http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ என்ற இணைப்பின்வழி சென்று மையல் என உள்ளிட்டுத் தேடுங்கள். -- சுந்தர் \பேச்சு 11:29, 5 திசம்பர் 2011 (UTC)
- மன்னிக்கவும் நண்பரே இம்முறையும் எனக்கு அந்த தொடுப்பு வேலை செய்யவில்லை. ஆதலால் மையல் என்ற வார்த்தையை தமிழ் விக்சனரியில் தேடிய போது அதற்கு மயக்கம்,மோகம் போன்ற அர்த்தங்கள் தந்தன.இவைகளின் உள் அர்த்தமானது திகைப்பு,பித்துநிலை,கவனச் சிதறல்,நோக்கத்திருப்பம் என தமிழ் விக்சனரி தருகிறது.முன் சொன்னது போலவே இவை எதுவும் "அடையாளக் காமம்" என்ற சொல்லுக்கு நிகராக இல்லை என்பது எனது கருத்து.எனவே தலைப்பு மாற்றம் தொடர்பான உரையாடலை இத்துடன் நிறைவு செய்வது நல்லது.WikiMan88 16:04, 5 திசம்பர் 2011 (UTC)
- விக்கிமான், ஒருமுறை http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ - கழகப் பேரகரமுதலியில் ஒருமுறை மையல் என்ற சொல்லின் பொருளைத் தேடிப் பாருங்கள். (எனக்கு மேலே தந்துள்ள அனைத்து இணைப்புகளும் கூகுள் குரோம் உலவியில் வேலை செய்கின்றன.) மையல் என்றச் சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லவில்லை, பொருந்தினால் மட்டும் பயன்படுத்தலாமே என்றுதான் நினைத்தேன். தொப்புளை மையப்படுத்திய காமம் என்பதை தொப்புள் மையல் என்று சொன்னால் பொருந்துவது போலத் தோன்றுகிறது. மற்ற பயனர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:51, 5 திசம்பர் 2011 (UTC)
- மன்னியுங்கள்.கூகுள் குரோம்,பயர்பாக்ஸ்,ஒபேரா மூன்று உலவிகளிலும் எனக்கு வரவில்லை.எனவே மற்ற பயனர்களின் கருத்துக்கு காத்திருப்போம்.WikiMan88 18:13, 5 திசம்பர் 2011 (UTC)
- விக்கிமான், http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ - இந்த இணைப்பும் வேலை செய்யவில்லையா? பழைய இணைப்பில் சில குறியெழுத்துகள் இருந்தன. இந்த இணைப்பு கட்டாயம் வேலை செய்யுமென நினைக்கிறேன். அந்தத் தளத்துக்குச் சென்று மையல் என்ற சொல்லை ஒருமுறை தேடிப் பாருங்களேன். -- சுந்தர் \பேச்சு 07:19, 7 திசம்பர் 2011 (UTC)