பேச்சு:தொல்லுலகச் சிட்டுகள்

தொல்லுலகச் சிட்டுகள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

குருவி என்பது பொதுப்பெயர். அது பலவகைக் குருவிகளைக் குறிக்கும். வீட்டுக் குருவி என்பது ஒரு குறிப்பிட்ட வகைக் குறுவி. அதேபோல சிட்டு எனபதும் பொதுப்பெயர். தேன் சிட்டு போன்ற குறிப்பிட்ட தனி இனங்கள் பலவற்றைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல். எனவே வீட்டுக் குருவி என்பதே சரியான தலைப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.--செல்வா 12:02, 5 ஏப்ரல் 2007 (UTC)

அடைக்கலங் குருவி, சிட்டுக்குருவி ஆகிய பெயர்கள் பறவை உலகம் என்ற சலீம் அலி அவர்களுடைய புத்தகத்தின் தமிழாக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.--சிவகுமார் \பேச்சு 13:59, 5 பெப்ரவரி 2008 (UTC)

தலைப்பு மாற்றம் தொகு

இக்கட்டுரை Old World Sparrow என்கிற ஆங்கிலக் கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைக்கப்படுள்ளது. எனவே "பழைய உலக சிட்டுக்குருவி" என்கிற தலைப்பிற்கு இதை நகர்த்தலாமா? கருத்துக்களைப் பதிவிடவும். --Mereraj (பேச்சு)

Old world Vultureகளைக் குறிப்பதற்காக தொல்லுலகப் பாறுகள் என்ற பதம் இந்நூலில்[1] பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே முறையில் தொல்லுலகச் சிட்டு(கள்) என்று பெயரிடலாம். --PARITHIMATHI (பேச்சு) 07:09, 27 ஏப்ரல் 2020 (UTC)

மேற்கோள்கள் தொகு

  1. சு. பாரதிதாசன் (2019). பாறு கழுகுகளும் பழங்குடியினரும். உயிர் பதிப்பகம்.
Return to "தொல்லுலகச் சிட்டுகள்" page.