பேச்சு:நச்சியல்
கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரை திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது --செந்தில் ராஜ் 02:55, 12 மே 2010 (UTC)
தலைப்பை மாற்றுக
தொகு- நச்சு + இயல் = நச்சியல் என்று தானே தலைப்பு வர வேண்டும். ஆகவே, நச்சியல் என்ற தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்த வேண்டுகிறேன்.
எனக்கும் இவ்வாறே தோன்றியது. எவரும் மறுப்புத் தெரிவிக்காவிடில் நகர்த்தி விடலாம்.--கலை (பேச்சு) 15:37, 30 மே 2012 (UTC)
இது நச்சியல் என்றல்ல, நஞ்சியல் என்றே இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 16:28, 30 மே 2012 (UTC)
- எனக்கு இலக்கண முறைகள் சரியாகத் தெரியவில்லை. விக்சனரியில் நச்சியல், நஞ்சியல் இரண்டுமே உள்ளன. (நச்சுயியல் என்றும் உள்ளது. ஆனால் அது தவறாகவே தோன்றுகின்றது). மேலும் நச்சுத்தன்மை, நச்சுப்பொருள் என்ற கட்டுரைகளும் இங்கே உள்ளன. எனவே எது சரியானது என்று விளக்கினால் உதவியாக இருக்கும்.--கலை (பேச்சு) 21:28, 30 மே 2012 (UTC)
நஞ்சியல் என்று மாற்றுங்கள், கலை. நச்சுயியல் என்பது பிழை. எதற்காகப் பிழையை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? மாற்றுவதுதான் சரி.--பாஹிம் (பேச்சு) 10:07, 31 மே 2012 (UTC)
- ஆம், நஞ்சியல் பொருத்தமாக உள்ளது.--சிவக்குமார் \பேச்சு 10:15, 31 மே 2012 (UTC)
நஞ்சியல் சரி. அதேவேளை நச்சியல் என்பதும் சரியா என்று தோன்றுகின்றது. பல கட்டுரைகளில் Toxicology நச்சியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நச்சுத்தன்மை, நச்சுப்பொருள் என்ற சொற்களும் உள்ளன. எனவே நச்சியல் என்ற சொல்லும் சரியாயின் தலைப்பை நச்சியல் என்றே மாற்றலாமே? தவறாயின் விளக்குங்கள். மாற்றிவிடலாம்.--கலை (பேச்சு) 11:05, 31 மே 2012 (UTC)
நச்சு என்பது இலக்கணப்போலி. ஆதலால் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. நஞ்சு என்பதே மிகவுஞ்சரியான வழக்கு. ஆகவே, நஞ்சியல் என்று பெயரிடுதல் நன்று.--மதனாகரன் (பேச்சு) 12:58, 31 மே 2012 (UTC)
நஞ்சியல், நச்சியல் ஆகிய இரண்டும் சரியான வழக்குகளே. ஆனால் சிறு பொருள்வேறுபாடு சுட்டும்தன்மை இருக்கலாம் (இருக்கின்றது என்று உறுதிப்பட சொல்லவில்லை). நஞ்சு என்பது ஆங்கிலத்தில் venom அல்லது poison என்பார்களே அவற்றுக்கு ஈடாகப் பயன்படும் பெயர்ச்சொல். ஆங்கிலத்தில் poison என்பது பொதுவாக மூச்சு வழியாகவோ, வாய்வழியாகவோ உட்கொள்ளும் உடற்தீங்கு செய்யும் பொருள் என்றும், venom என்பது நேரடியாகக் குருதியில் அல்லது நிணநீர் அல்லது நரம்புவழித் தாக்கும் பொருள் என்றும் கருதப்படுகின்றது. இவற்றை வரையறைபோல் கொள்ள இயலாது. இரண்டுமே உடலியக்கத்துக்குக் கடுந்தீங்கு செய்வதே. நச்சு என்பது நஞ்சு என்பதன் மற்றொரு வடிவம். தமிழில் வென்றி, வெற்றி என்று கூறுவது போல. ஆனால் நச்சு என்பது தமிழில் வேறு பொருளும் சுட்டும். நசை என்றால் விருப்பம். நச்சினார்க்கினியர் என்றால் அன்புடன் வேண்டிக்கேட்பவருக்கு இனியவர் என்று பொருள். நச்சாதே என்றால் தொந்தரவு செய்யாதே என்று பொருள் (பலமுறை விரும்பி வேண்டுதல் = நச்சுதல்). விடாது சிறிது விட்டுவிட்டுப் பெய்யும் சிறுமழைக்கு நச்சுமழை என்பர். நச்சு என்பதை toxin, toxic என்றும் கொள்ளலாம். நஞ்சு என்பதை venom, poison என்று கொள்ளலாம். நச்சு + இயல் = நச்சியல் (சு என்பதில் உள்ள உகரம் புணரும் பொழுது விலகும்) (காசு + இல்லாமை = காசில்லாமை; பேச்சு + இன்றி = பேச்சின்றி என்பது போல). நச்சு என்னும் சொல், நச்சுக்கொடி, நச்சுச்சொல், நச்சுக்கண் , நச்சுமரம், நச்சுப்பார்வை என்று தீமையைச் சுட்டும் முகமாக பிறசொற்களோடு சேர்ந்து வழங்கி வந்துள்ளது.--செல்வா (பேச்சு) 13:37, 31 மே 2012 (UTC)
- //நஞ்சியல், நச்சியல் ஆகிய இரண்டும் சரியான வழக்குகளே.// Poison நஞ்சு என்ற கட்டுரையாகவும், Toxin நச்சுப்பொருள், Toxicity நச்சுத்தன்மை என்ற கட்டுரையாகவும் இங்கே உள்ளது. எனவே Toxicology யை நச்சியல் என்றே மாற்றியுள்ளேன்.
நஞ்சு, மருந்து என்றவாறு மென்றொடர்க் குற்றியலுகரம் வரும்போது குற்றியலுகரத்துக்கு முன் வரும் மெல்லின மெய் அதன் இனவெழுத்தாக மாற்றமடைவது பற்றி அறிந்தேன். நஞ்சு + இயல் என்பது நச்சியல் என்றுமமையும். தவிர, நச்சு என்று நஞ்சைக் குறிக்கத் தனியாக ஒரு சொல் கிடையாது. --மதனாகரன் (பேச்சு) 13:09, 10 செப்டெம்பர் 2012 (UTC)