பேச்சு:நந்தா பொறியியல் கல்லூரி

  • பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் (அனுமதி) அளிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு வின் விதிமுறைகளின்படி அனைத்துச் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் நூலகம், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டு இருக்கும். இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே கல்லூரிக்கான அங்கீகாரம் (அனுமதி) அளிக்கப்படும். மேலும் ஆண்டுதோறும் துறைவாரியான மாநில, தேசிய அளவிலான கருத்தரங்குகள் நடத்தப் பெறுவதும், நாட்டுநலப் பணித்திட்டம் உட்பட பல்வேறு சேவை அமைப்புக் குழுக்கள், தமிழ், ஆங்கிலத்திற்கான இலக்கியக் குழுக்கள், கணக்கு மற்றும் அறிவியல் துறைகளிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதும் அனைத்துக் கல்லூரிகளிலும் இருக்கும் பொதுவான தகவல்கள்தான். இது போன்ற அனைத்துக் கல்லூரிகளுக்குமான பொதுத் தகவல்களை நீக்கலாம். பல்கலைக்கழக அளவில் கல்லூரி பெற்ற சிறப்புகள், கல்லூரி மாணவர்கள் மூலம் கல்லூரி பெற்ற சிறப்புகள் போன்றவற்றை ஆதாரங்களுடன் சேர்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:08, 30 ஏப்ரல் 2012 (UTC)
தகுந்த ஆதாரங்களுடன், பல்கலைக்கழக அளவில் கல்லூரி பெற்ற சிறப்புகள், கல்லூரி மாணவர்கள் மூலம் கல்லூரி பெற்ற சிறப்புகள் போன்றவற்றை விரைவில் சேர்க்கிறேன்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:10, 30 ஏப்ரல் 2012 (UTC)

Start a discussion about நந்தா பொறியியல் கல்லூரி

Start a discussion
Return to "நந்தா பொறியியல் கல்லூரி" page.