பேச்சு:நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic விக்கித்திட்டம் பௌத்தம்

திருமேனி என்பது சமயம் சார்ந்த புகழடை. சிலை என்பதே சரி. பகுப்பில் உள்ள கட்டுரைகளிலும் அவ்வாறே உளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:29, 14 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம். தென்காசி சுப்பிரமணியன், இவை பெரும்பாலும் வழிபாட்டிற்காகவே, உற்சவமூர்த்தி என்ற நிலையில், தயாரிக்கப்பட்டவையாகும். சிலவற்றில் இத்திருமேனியை அன்பளிப்பாகத் தந்தவரின் பெயர் கீழே செதுக்கப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் Nagapattinam Buddha bronze sculptures/images என்று கூறினாலும் தமிழில் இப்பொருண்மை தொடர்பாக வரும் பெரும்பாலான கட்டுரைகளில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. சிலை என்பதிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இச்சொல் பயன்படுத்தப்படுகிறது என நினைக்கின்றேன். ஆங்காங்கே கண்டுபிடிக்கப்படும் புத்தர் கற்சிலைகளுக்கு (Granite Buddha)புத்தர் சிலை என்றும் புத்தர் சிற்பம் என்ற சொல் மாறிமாறி பயன்படுத்தப்பட்டுவருகிறது. தங்கள் கருத்தறிந்து மேலும் செய்யவேண்டியதைச் செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:20, 15 செப்டம்பர் 2015 (UTC)

விக்கித்திட்டம் பௌத்தம் தொகு

  நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:17, 22 சூலை 2022 (UTC)Reply
Return to "நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்" page.