பேச்சு:நாமக்கோழி

கருநாரை என்ற பெயர் Black Stork (Ciconia nigra) என்ற பறவையை முதன்மையாகக் குறிப்பதால், இங்கு அந்தப் பெயரை நீக்கப் பரிந்துரைக்கிறேன்; வின்சுலோ அகராதியில் மட்டுமே Common coot-ற்கு கருநாரை என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள தென் இந்திய பறவைகள் நூலிலும் தமிழில் பறவைப் பெயர்கள் நூலிலும் நாமக்கோழி என்ற பெயரே முதன்மையாக உள்ளது. மேலும் கருநாரை வழிமாற்று இந்தப் பக்கத்திற்கு வராமல் செய்ய வேண்டும். --PARITHIMATHI (பேச்சு) 17:09, 17 சனவரி 2019 (UTC)Reply

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுவதில் மகிழ்கிறேன். உங்கள் பரிந்துரையை முழுமையாக ஏற்கிறேன். தற்போதுள்ள பெயர் பல பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இவ்விதம் நிறை பெயர்மாற்றம் நமது விக்கியில் செய்ய வேண்டியுள்ளன. அவற்றை எளிமையாக செய்வது பற்றி கற்று வருகிறேன். விரைவில் ஆவணப்படுத்துகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 04:57, 27 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாமக்கோழி&oldid=2642040" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாமக்கோழி" page.