பேச்சு:நாரை (வரிசை)
தலைப்பு குறித்து கருத்து
தொகுGruiformes-இல் உள்ள பறவைகளில் 14 சிற்றின வகைகள் மட்டுமே Cranes; பெரும்பாலானவை (145 வகைகள்) கானாங்கோழிகளும் (Crakes) சம்பங்கோழிகளும் (Rails). மேலும், Crane என்பது கொக்கு என்றே கூறப்படுகிறது, நாரை என்றல்ல. எனவே, Gruiformes-க்கான தமிழ்ச்சொல்லாக இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் நாரை என்ற சொல் எந்தத் தரவிலிருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும், Gruiformes-க்கான வேறு தமிழ்ச்சொல் என்னவென்று உயிரியல் வல்லுனர்களிடம் ஆலோசித்து பின்னரே பெயரைப் பயன்படுத்த வேண்டும். நன்றி. --PARITHIMATHI (பேச்சு)
டாக்டர் க. ரத்னம் எழுதிய தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் Crane என்ற சொல்லுக்கு நாரை என்றே இரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ----Mereraj (பேச்சு)
- நீங்கள் குறிப்பிட்டுள்ளவை Sarus crane, Demoiselle crane ஆகிய பறவைகளின் தமிழ்ப் பெயர் பற்றியது; இவ்விரு தரவுகளில்[1] [2]குறிப்பிட்டுள்ள பெயர்களையே தமிழில் பறவைப் பெயர்கள் நூலிலும் டாக்டர். க. ரத்னம் கொடுத்துள்ளார். அவர் எப்பெயரையும் பரிந்துரைக்கவில்லை. Stork family-ஐத்தான் நாரை என்று குறிப்பிடுவர்.--PARITHIMATHI (பேச்சு) 11:17, 25 ஏப்ரல் 2020 (UTC)