பேச்சு:நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

இரண்டு கருத்துகள்:

  1. நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி என்னும் பெயரில் வரும் மெய்யெழுத்துக்கூட்டங்கள் தமிழில் கூடாதவை கடினமாகவும் இருக்கின்றது. நிக்கோலாய் ஓசுத்திரோவிசுக்கி என்று எழுதினால் எளிமையாகவும் தமிழில் வழங்கும் வடிவிலும் இருக்கும்.
  2. இவர் எழுதியநூல் உருசிய மொழி நூல். அதன் தலைப்பு Как закалялась сталь என்பதுதான் (உரோமன் எழுத்தில் Kak zakalyalas' stal), இதனை ஒவ்வொரு மொழியாளரும் அவர்கள் மொழியில் மொழிபெயர்த்துத் தலைப்பிட்டிருக்கின்றார்கள். உள்ளே உருசிய மொழியின் தலைப்பை இட்டு எழுத்துப்பெயர்ப்பையும் தந்திருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக இடாய்ச்சு மொழியில் Wie der Stahl gehärtet wurde (எப்படி எஃகு பதப்பட்டது), போலந்திய மொழியில் Jak hartowała się stal (இங்கு hartowała என்பது பதப்படுத்துதல்). துருக்கி மொழியில் Ve Çeliğe Su Verildi என்கிறார்கள். ஆகவே ஆங்கில மொழித் தலைப்பைக் கொடுத்து இது அவர் எழுதிய நூல் என்பது சரியான தகவல் அன்று. ஆங்கிலத்தலைப்பைக் குறிக்கலாம், ஆனால் மூல மொழித் தலைப்பையும், தமிழில் அதன் ஒலிபெயர்ப்பையும் மொழி பெயர்ப்பையும் தருவது நல்லது. ஆங்கிலத்தலைப்பை வேண்டுவோர், ஆங்கிலம் உட்பட பிறமொழிகளில் தலைப்பை வேண்டுவோர் இடப்பக்கப் பட்டியில் உள்ள மொழிகளில் போய் எளிதாகப் பார்க்கலாம். ஆங்கிலத்தலைப்பைத் தமிழில் எழுத்துப்பெயர்ப்பு செய்வது சரியான வழிமுறையன்று (ஆங்கிலச்சாய்வு தருகின்றது. பிறமொழிகளிலும் தலைப்புகள் உள்ளனவே). எனவே இவர் நூலைத் தமிழில் இதன் எழுத்துப்பெயர்ப்பைத் தரும் இடத்தில் காக்(கு) (இ)சக்கல்யலசு (இ)சிட்டால் என்று தரலாம், ஆனால் தமிழில் மொழிபெயர்ப்புத் தருதல் வேண்டும். எப்படி எஃகு பதப்பட்டது போன்ற ஒரு பொருத்தமான தலைப்பு.--செல்வா (பேச்சு) 14:08, 27 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி" page.