பேச்சு:நிர்வாண சிற்பம்

http://en.wikipedia.org/wiki/Category:Nudity

என்ற ஆங்கில விக்கியில் ஏகப்பட்ட நிர்வாண விஷயங்கள் இருக்கின்றன. நான் சிலவற்றை மட்டும் தமிழில் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். பணி இன்னும் முழுமையடையவில்லை.

விக்கிப்பீடியா அல்லது கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். என்று கூறியுள்ளீர்கள். கொள்கையில் எது ஒத்துவரவில்லை என சொன்னால் மாற்றம் செய்கிறேன்.

நன்றி@.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இத்தலைப்பில் கட்டுரை எழுதுங்கள். அது பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் சொந்த ஆய்வுகள் இங்கு எழுதுவதில்லை. அத்துடன் இக்கட்டுரை கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. மேற்கோள்களும் இல்லை.--Kanags \உரையாடுக 10:07, 26 சனவரி 2011 (UTC)Reply

கொடுக்கப்பட்டிருந்தது ஒரு மூலம்தான். அதைக் கொண்டே கட்டுரையை விரிவு செய்ய முடியும். இப்போது பாருங்கள் கட்டுரை விக்கியின் தரத்திற்கு மாறியிருக்கும்.

நன்றி!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

ஜெகதீஸ்வரன் நீங்கள் எழுதும் பாலியல் கட்டுரைகள் எல்லாம் வேறு தளங்களில் இருந்து வெட்டி ஒட்டுவதாகவே உள்ளது. அத்துடன் ஆங்கில விக்கியில் இருக்கிறது என்று இங்கு இடுதல் எந்தவகையில் தமிழரின் வளர்ச்சிக்கு பயன்படும் என்று சிந்திக்க வேண்டும். நல்ல விடயங்கள் எத்தனையோ இருக்கும் போது, பாலியல் தொடர்பான விடயங்களில் நீங்கள் கவனம் செலுத்துவதன் நோக்கம் என்ன? தனிப்பட்ட ஒருவரின் வேட்கைகளை தனித்துக்கொள்ள விக்கிப்பீடியாவை பயன்படுத்துதல் சரியானதல்ல. --மொகமட் அனிப் 10:18, 26 சனவரி 2011 (UTC)Reply

  • தமிழ் விக்கிப்பீடியாவை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாலியல் தொடர்பான பல கட்டுரைகள் இடம்பெறுவது விரும்பத்தகாததாக ஆகிவிடும். மேற்கத்தியப் பண்பாடுகள் வேறு... தமிழர் பண்பாடுகள் வேறு... ஆங்கில விக்கியில் இருக்கிறது என்பதற்காக தமிழ் விக்கியிலும் இருக்க வேண்டுமென்பது இல்லை... பாலியல் உறவுகள் மற்றும் செய்திகளை நாகரீகமாக மருத்துவ அடிப்படையில் அல்லது வரலாற்று அடிப்படையில் தகுந்த மேற்கோள்களுடன் இங்கு பதிவு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியா தவறான நிலைக்குப் போய்விடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு பதிவு செய்திட வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி. 10:22, 26 சனவரி 2011 (UTC)Reply

தேனியாரின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.தமிழ்விக்கியில் வளர்க்கத் தேவையான பல துறைகள் உள்ளன. ஆங்கில விக்கியை பயன்படுத்தி இத்தகைய பயன்மிகுதியான துறைகளை வளர்க்க பாடுபடுவோம். பயனர்:சஞ்சீவி சிவகுமார்--192.248.66.3 10:32, 26 சனவரி 2011 (UTC)Reply

நண்பர்கள் புரிந்து கொண்டு செயல்படுகின்றார்களா இல்லை, புரியாமல் செயல்படுகின்றார்களா என தெரியவில்லை. பாலியல், நிர்வாணம் பற்றிய கட்டுரைகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்பதாலே அக்கட்டுரைகளை எழுத முனைந்தேன். ஆனால் கிடைத்த பலன் வேறொன்றாக இருக்கிறது. இப்படிபட்ட கட்டுரைகள் வேண்டாம் என கூறினாலே, நிறுத்தப்படும்,. ஆனால் ஒரு பொது தளத்தில் என்ன நோக்கத்திற்காக எழுதப்படுகின்றது என்பதை அறியாமல், மனநோய் என்று சாடுவது ஏற்புடையதா. தமிழ் விக்கி பயனர்களின் மனநிலை இத்தனை தரம்தாழ்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை.

இன்னும் எத்தனைகாலம் பாலியல் என்றாலே அஞ்சி ஓடப்போகிறோம் என தெரியவில்லை. இருந்தும் பெரும்பாலான மக்களின் மனநிலை மாறும் வரை இப்படியே இருக்கட்டும். நன்றி!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

வலைப்பூக்களிலிருந்து இணைப்பு தரவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் ஆதாரங்களை தரவில்லை. தலைப்பில் தவறிருப்பதாக உணர்பவர்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உள்ளிருக்கும் கருத்துகளுக்கு மேற்கோள்கள் சுட்ட ஏற்பாடு செய்கிறேன். ஆனால் அதற்கு முன் இக்கட்டுரை நீக்கப்படுமாயின் நான் பொறுப்பில்லை என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு


ஒரு கலைக்களஞ்சியத்தில் இத்தலைப்பு உகந்தது/உகந்ததல்ல என்று பிரித்துப்பார்த்தல் கூடாது. பெற்றோர் அணுக விடமாட்டார்கள் போன்ற கலாச்சார காவல் மனப்பான்மையோடு நாம் இங்கு செயல் பட்டால் கலைக்களஞ்சியத்தை உருவாக்க முடியாது. அப்படியென்றால் பாலியல் தலைப்புகளில் எதுவும் எழுதவே இயலாது. சில பெற்றோர்களுக்கு அரசியல், பிற மதங்கள் கூடத்தான் பிடிக்காது, அதற்காக அத்தலைப்பு கட்டுரைகளையெல்லாம் நீக்கிவிடலாமா? விக்கிப்பீடியாவுக்கு அதிகப் பயனர்கள் வரும் கட்டுரைகளின் முதல் 100 இடங்களுள் “ஆண்குறி” "பாலுறவு”, “காம சூத்திரம்”, “சுய இன்பம்” “வாய்வழிப் பாலுறவு” கட்டுரைகள் ஆகியவை உள்ளன. அதற்காக அவற்றையும் நீக்கிவிடுவதா?. பெற்றோருக்கு உயிரியல் பாடப்புத்தகங்களில் இனப்பெருக்கு உடல் உறுப்புகளின் படங்கள் நீக்கப்பட்டுவிட்டனவா? “தமிழுக்கும் அல்லது தமிழருக்கு என்ன பயன்” என்று ஒவ்வொரு துறைக்கும் கேட்கலாமா? ஒரு கலைக்களஞ்சியம் என்பது - அனைத்து துறைகளையும் சேர்ந்த கட்டுரைகளை உள்ளடக்கியதே. கலாச்சாரச் சூழலை உணர்ந்து அதற்கேற்றார்போல தமிழ் விக்கியினைச் செலுத்துகிறேன் என்று சென்சார் போர்டு போல நாம் செயல்படக்கூடாது. பாலியல் என்பதும் ஒரு துறை. அறிவியல் பூர்வமாக அதை அணுகி கட்டுரை எழுத முடியும் போது அவற்றைத் தடுக்கக் கூடாது. இதே ரீதியில் அணுகினால் உயிரியல் பகுப்பில் பல கட்டுரைகளை நீக்க பரிந்துரைகள் வரும்

கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் தகவல்களுடன் அமைந்திருந்தால் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கனவே. இதன் உள்ளடக்கம் சரியில்லையென்றல் குறுங்கட்டுரையாக மாற்றிவிட்டு போய்விடலாம். இதனை இன்று நீக்கினோம் என்றால், இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். நாளை ஒவ்வொரு பயனரும் இது பெற்றோருக்குப் பிடிக்காது, இதனால் தமிழருக்குப் பயனில்லை என்று பல கட்டுரைகளை நீக்கக் கேட்பர். தமிழினால் பல துறைகளை அணுகவே முடியாது என்று தமிழை இகழ்வோர் கேலி செய்து கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற நிலைப்பாடு அவர்கள் சொல்வதை மெய்ப்பிப்பதாகவே அமையும்--சோடாபாட்டில்உரையாடுக 14:20, 26 சனவரி 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிர்வாண_சிற்பம்&oldid=676676" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நிர்வாண சிற்பம்" page.