பேச்சு:நிறுவன காங்கிரசு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Srithern in topic Untitled
Untitled
தொகு- ஸ்தாபன காங்கிரஸ் தலைப்பு வேறு வழிமாற்று செய்யப்பட்டுள்ளது நீக்கப்படவேண்டும்.
( இண்டிகேட்' அல்லது புதியகாங்கிரஸ் , இந்திராகாங்கிரஸ் ) (சிண்டிகேட் காங்கிரசு அல்லது பழயகாங்கிரஸ் , ஸ்தாபன காங்கிரஸ் ) தனி அமைப்புகளாக செயல்பட்டன.
- சற்று புரியவில்லை. “ஸ்தாபன காங்கிரஸ்” என்னும் வழிமாற்று. இப்போது இக்கட்டுரையை சுட்டுகிறது. அது தவறா?--சோடாபாட்டில்உரையாடுக 05:20, 6 சனவரி 2012 (UTC)
- “ஸ்தாபன காங்கிரஸ்” என்னும் தலைப்பு வழிமாற்று இன்றி தனிகட்டுரையாக இருந்தால் அன்றய நிலை தெளிவாக விளங்கும். 1967 தொடக்கம் 1977 வரை காங்கிரசில் பிரிவுகள் இருந்தன மீண்டும் இணைந்தன.காங்கிரஸ் நீண்ட வரலாறு நிகழ்வுகளை ஒரே கட்டுரையில் தொகுக்க இயலாது. தனி கட்டுரைகளில் விரிவாக தொகுக்க ஏதுவாகும். நிறுவன காங்கிரசு என்னும் இக்கட்டுரையுடன் ஒன்றினைக்கப்பட்டதால் குழப்பம் நேரிடலாம்.எனவே ஸ்தாபன காங்கிரஸ் எனும் தலைப்பில் புதிய கட்டுரை துவக்க வேண்டும். --ஸ்ரீதர் /பேசுக 06:26, 6 சனவரி 2012 (UTC)
- நிறுவன காங்கிரசு தலைப்பை ஸ்தாபன காங்கிரஸ் தலைப்புக்கு நகர்த்தலாமா? --ஸ்ரீதர் /பேசுக 06:58, 6 சனவரி 2012 (UTC)
- ”நிறுவன காங்கிரசு” / “ஸ்தாபன காங்கிரஸ்” இரண்டும் Congress (O) விற்கான பெயர் தான். வேறு வேறு குழுக்கள் இல்லையே. சிண்டிக்கேட் குழுவினால் அமைக்கப்பட்ட கட்சிதானே இது?. எதற்காக மாற்ற வேண்டும்? Congress (R) /Congress (I) பற்றி இந்திய தேசிய காங்கிரசு கட்டுரையிலேயே விளக்கப்பட்டுள்ளதே. அதுவே போதுமானதென நினைக்கிறேன். வேண்டுமெனில் இண்டிகேட் காங்கிரசு அல்லது காங்கிரசு (ஆர்) என்ற பெயரில் அதற்கெனத் தனிக்கட்டுரை தொடங்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:28, 6 சனவரி 2012 (UTC)
- தங்கள் விளக்கம் சரி தனிகட்டுரை தேவையில்லை நன்றி--ஸ்ரீதர் /பேசுக 10:33, 6 சனவரி 2012 (UTC)
- 1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையிலான இண்டிகேட் குழுவுக்கும் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகேட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினார். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது.
- இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) இண்டிகேட் புதியகாங்கிரஸ் என வழங்கப்ப்பட்டது.
- காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் (ஓ) (Organisation Congress) சிண்டிகேட் காங்கிரசு பழயகாங்கிரஸ் என வழங்கப்ப்பட்டது.
சர்ச்சையின் பின்னணி
- 1967-ஆம் ஆண்டு இந்தியாவின் வி. வி. கிரி துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர் ஆனார். அதிபர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீளம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது , எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார். --ஸ்ரீதர் /பேசுக 00:13, 6 சனவரி 2012 (UTC)
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1969 இல் சஞ்சீவ ரெட்டி தான் சிண்டிக்கேட் வேட்பாளர். கிரி இந்திரா காந்தி ஆதரவாளர்களின் வேட்பாளர்.--சோடாபாட்டில்உரையாடுக 05:24, 6 சனவரி 2012 (UTC)