பேச்சு:நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
zoo - விலங்ககம், aquarium - நீருயிரகம், vivarium - உயிரகம் என்று சொல்வது சுருக்கமாக இருக்குமா? எல்லாவற்றுக்கும் உயிரினங்கள் காட்சிச்சாலை என்று சொல்வது நீளமாக உள்ளதே??--ரவி 16:56, 6 ஜூலை 2008 (UTC)
zoo என்பதற்கு சரணாலயம் என்ற சொல்லும் வழக்கத்தில் உள்ளது. விலங்குக் காட்சிச்சாலை என்றும் சில நூல்களில் படித்ததாக நியாபகம். இலங்கை வழக்காகவும் இருக்கலாம். சுருக்கமாக பெயர்கள் அமைய வேண்டும் என்பதுடன் ஒத்துப் போகுறேன். பிற பயனர்களின் கருத்துக்களையும் கேக்கலாம். --Natkeeran 17:23, 6 ஜூலை 2008 (UTC)
ரவியின் பெயர்கள் மிகவும் சுருக்கமாகவும் பொருத்தமாக இருக்கிறது. சரணாலயம் sanctuary என்பதை குறிப்பதல்லவா? --கார்த்திக் 17:29, 6 ஜூலை 2008 (UTC)
சரணாலயம் sanctuary தான். zooவைத் தமிழ்நாட்டில் விலங்கியல் பூங்கா என்றும் சொல்கிறார்கள் (botanical garden என்பது போல் zoological garden என்ற முழுப் பெயரை ஒட்டி). காட்சிச்சாலை என்று இழுப்பது நீளமாக இருப்பது போக வீட்டில் உள்ள சின்ன aquariumகளைக் குறிக்கவும், aquarist போன்ற தொடர்புடைய சொற்களை உருவாக்கவும் அவ்வளவாகப் பொருந்தி வராது--ரவி 19:02, 6 ஜூலை 2008 (UTC)
- நீருயிரகம் நன்றாக படுகிறது. ஆனால் விலங்ககம் ம்ம்ம்...நிச்சியமாக வழக்கத்தில் இல்லை. பிற பயனர் கருத்துக்கள் தந்தாலும் நன்று. --Natkeeran 17:04, 19 டிசம்பர் 2008 (UTC)
- ஆப்ப முள்ளெலிகள் - Cake urchins
- இடையூன் பசைப்படலம் - Mesogloea
- இணைவு-இனப்பெருக்கம் - Conjugation
- இரட்டைக் குளம்பிகள் - Artiodactyle
- இருதய முள்ளெலிகள் - Heart urchins
- உணர்க்கைகள் - Tentacles
- கடல் நுரை அல்லது கணவாய் நாக்கு - Cuttle Bone
- கடற்பஞ்சு - Sponge
- கவசமீன் - Placo derm
- குழியுடலிகள் - Coelenterates
- கொண்டி - Telson
- சிம்புத் திமிங்கலம் - Baleen Whale
- சுருள்காலி - Cirripedia
- திமில்முதுகுத் திமிங்கலம் - Hump back whale
- தேன்கூட்டுப் பவளம் - Favia
- நீலப்பவளம் - Helio Pora
- பாம்புவாலி - Ophivroidea
- புரையுடலி - Porifera
- புறவன்தோட்டினம் - Crusyacea
- முக்கீற்றுடலிகள் - Trilo Bites
- முள்பவளம் - Paranthes
- முள்தோலிகள் - Echino Dermata
- வாய்க்கரம் - Oralarms
எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பதிவு செய்கிறேன். இதை விடப்பொருத்தமான பக்கம் இருப்பின் அங்கு பதியலாம்--சிவக்குமார் \பேச்சு 15:06, 18 டிசம்பர் 2008 (UTC)
Sea Otter
தொகுதமிழ்ச்சொல் தேவை.--சிவக்குமார் \பேச்சு 15:50, 30 ஜூலை 2009 (UTC)
- ஆட்டர் என்பதைத் தமிழில் நீர்நாய் என்கிறார்கள். கடல் நீர்நாய், நன்னீர் நீர்நாய், ஆற்று நீர்நாய் என்றெல்லாம் கூறலாம். --செல்வா 16:02, 30 ஜூலை 2009 (UTC)
- மிக்க நன்றி. கூடவே Sea urchin, Sea cucumber என்பனவற்றுக்கும் சொல்லுங்கள் செல்வா :).--சிவக்குமார் \பேச்சு 16:13, 30 ஜூலை 2009 (UTC)
- ஆட்டர் என்பதைத் தமிழில் நீர்நாய் என்கிறார்கள். கடல் நீர்நாய், நன்னீர் நீர்நாய், ஆற்று நீர்நாய் என்றெல்லாம் கூறலாம். --செல்வா 16:02, 30 ஜூலை 2009 (UTC)
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6, என்.சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, சென்னை-17, 1999