பேச்சு:நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்குரிய தாவரங்களின் பட்டியல்

குறிப்பு

தொகு

இங்குள்ள மேற்கோள் ஒன்றின் மின்னூலை( Ranjit Daniels,) படித்தேன். பயனுள்ள ஆய்வு முடிவுகள் உரிய கட்டுரையில் இணைக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ஆனால் பெயர்பட்டியல் இல்லை. இவரின் ஆய்வுக்கு பத்து வருடங்களுக்கு முன் யுனெசுகோ 1970 ஆம் ஆண்டு இது குறித்த ஆய்வினை செய்துள்ளார். அதனையும் படிக்க வேண்டும். பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தார், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியால் இந்நிலப்பரப்பின் மரங்களை ஆய்வு செய்துள்ளனர். அவர்களிடன் ஒரே ஒரு மரத்தரவினை வாங்கி அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ் என்ற கட்டுரையை 2013 ஆம் ஆண்டு உருவாக்கினேன். பணச் சூழலால், அப்பொழுது தொடர்ந்து அவர்களை அணுக இயலவில்லை. பிற நண்பர்களின் உதவியால் அந்த ஆய்வு தரவுகளைப் பெற முயல்கிறேன். இதன் சிறப்பு யாதெனில், ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆய்வுத் தரவுகள் உள்ளன. படங்களோடு! உழவன் (உரை) 10:01, 29 திசம்பர் 2023 (UTC)Reply

Return to "நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்குரிய தாவரங்களின் பட்டியல்" page.