அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ்
Acrocarpus fraxinifolius | |
---|---|
முழுவளர்ச்சி பெறா வளர்மரம் | |
இலையமைவு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caesalpinioideae
|
பேரினம்: | Acrocarpus
|
இனம்: | A. fraxinifolius
|
இருசொற் பெயரீடு | |
Acrocarpus fraxinifolius WIGHT & ARNOLAL | |
வேறு பெயர்கள் [1] | |
Acrocarpus combretiflorus (Teijsm.&Binnend) |
அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ் (Acrocarpus fraxinifolius) என்ற தாவரவியல் பெயருடைய இத்தாவரத்தை, தமிழில் பல பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். அவற்றுள் கழிஞ்சி, குரங்கடி, மல்லம் கொன்னை, மலைக்கொனி, மலிகொனி, நெல்றை,[2]. மலைக்கொன்றை போன்றவை குறிப்பிடதக்கப் பெயர்கள் ஆகும். தமிழ்நாட்டிலுள்ள மூலிகைத்தாவரங்களில் இதுவும் ஒன்றாகும்.
வகைப்பாடு
தொகுஇது பூக்கும் தாவரம் என்பதால், பூக்குந்தாவரத்தின் பரிணாமத்தோற்ற நெறிக்குழுமம் III [கு 1] என்ற வகைப்பாட்டியல் முறைமை, உலகெங்குமுள்ள தாவரவியல் அறிஞர்களால் பின்பற்றப்படுகிறது. அதன்படி, இது 'பபேசியே' தாவரக்குடும்பத்தின் , துணைக்குடும்பங்களில் ஒன்றான 'சீசல்பினியோடியே' [கு 2] என்பதன் கீழ் அமைகிறது.[3]
வாழிடம்
தொகுஇக்குறிப்பிட்ட தாவரயினம், உலக பாரம்பரிய களங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்குப்பகுதிகளிலும், நடு சாயாத்திரி [கு 3] பகுதியிலும், இன்டோமலேசியப் பகுதிகளிலும் குறிப்பாகக் காணப்படுகிறது. காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட, மிக உயர்ந்த மரமாக [கு 4] , கடல் மட்டத்திலிருந்து 1300 மீ. உயரம் வரையுள்ள, பசுமைமாறாக் காடுகளிலும், அரிதாக உயரம் குறைந்த மழை அதிகம் பெறும் இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.
வளரியல்புகள்
தொகுதோற்றம்
தொகுஇம்மரமானது 40 மீட்டர் வரை, வளரும் தன்மையை கொண்டதாக இருக்கிறது. அதற்கேற்றவாறு இதன் வேர்கள், தாங்கு வேர்களாக [கு 5] உள்ளன.
இலை அமைவுகள்
தொகுஇம்மரத்தின் இலைகள் பின்வரும் இயல்புகளைப் பெற்றிருக்கின்றன.
- இலையின் அளவு 4-5X1.5-4.5 செ.மீ. ஆகும்.
- இலையானது உதிரும் இயல்புடைய [கு 6] கூட்டிலை[கு 7] வகைகளைக்[கு 8] [கு 9] கொண்டதாகும்.
- இதன் இலையடிச்செதில் [கு 10] உதிரக்கூடியது.
- இலைக்காம்பு மிகச்சிறியதாகும். இலைகளில் மென்முடிகள் இல்லை..
- இலையின் நடுநரம்பு, மேற்பகுதியில் அலகின் பரப்பைவிட உயர்ந்து காணப்படும். இறுதியாக முடியும் மூன்றாம்நிலை நரம்புகள், வலைப்பின்னல் [கு 11] அமைப்பு உடையது.
- இலையின் நுனி, ஈட்டிவடிவமுடையது. சிற்றிலையின் நுனி மிகவும் கூரியது. [கு 12]
- சிறுகன்றின் இலைகள் இரம்பம் [கு 13] போன்ற தோற்றமுடையதாகும்.
இனப்பெருக்க அமைவுகள்
தொகுஇதன் மலர்கள் பச்சை நிறமாக இருக்கின்றன. மலரின் நடுவில் உள்ள மகரந்த பைகள் சிவப்பு நிறமாக இருக்கின்றன. ஒவ்வொரு மலரின் காம்பும் சிறியதாக இருக்கிறது. மலர்கள் தனி மலர்களாக இல்லாமல், மஞ்சரி அமைப்பில் இருக்கின்றன. இம்மஞ்சரியானது, கொத்தான இலைக்கோணங்களில் காணப்படும், நுனிவளர் பூந்துணர் [கு 14] வகையினைச் சேர்ந்ததாகும். இதன் கனி, இருபுற வெடிகனியாக, [கு 15] நாக்கு வடிவத்துடன்[கு 16] இருக்கும். ஒரு வெடிகனியினுள் 5-10 எண்ணிக்கையிலான விதைகள் இருக்கும். ஒவ்வொரு விதையும், தோற்றத்தில் தலைகீழ் முட்டை வடிவமாகவும்,[கு 17] ஒவ்வொரு விதையும் வேறுபட்டும், கெட்டியாகவும், தட்டையாகவும், சமமற்றும், இறகுகளோடும்[கு 18] இருக்கும்.
ஊடகங்கள்
தொகு-
நாற்றுகள்
-
இளமரங்கள்
-
மரட்டை
-
உட்புறமரத்தண்டு
குறிப்புகள்
தொகு- ↑ Angiosperm Phylogeny Group III = APG III = பூக்குந்தாவரத்தின் பரிணாமத்தோற்ற நெறிக்குழுமம் III
- ↑ தாவரவியல்: Caesalpinioideae = 'சீசல்பினியோடியே'
- ↑ Sahyādri
- ↑ தாவரவியல் : Emergent.
- ↑ தாவரவியல் : Buttress.
- ↑ தாவரவியல் : deciduous.
- ↑ தாவரவியல் : pinnate.
- ↑ தாவரவியல் : bipinnate.
- ↑ தாவரவியல் :evenpinnate = paripinnate.
- ↑ தாவரவியல் : stipule.
- ↑ தாவரவியல் : reticulate.
- ↑ தாவரவியல் : lanceolate.
- ↑ தாவரவியல் : serrate.
- ↑ தாவரவியல் : Raceme = ரெசீம்
- ↑ தாவரவியல் : pod
- ↑ தாவரவியல் : ligulate
- ↑ தாவரவியல் : obovoid
- ↑ தாவரவியல் : winged
மேற்கோள்கள்
தொகு- ↑ Lablab purpureus at Multilingual taxonomic information from the University of Melbourne
- ↑ ஐரோப்பிய ஆணைய பரணிடப்பட்டது 2014-12-29 at the வந்தவழி இயந்திரம் நிதியுதவியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளைக் கொண்டுள்ள இணையதளம்
- ↑ "A tree species reference and selection guide". worldagroforestry.org. Archived from the original on 13 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் October 23, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
துணைநூல்கள்
தொகு- Mag. Zool. Bot. 2: 547. 1838; Gamble, Fl. Madras 1: 397. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 150. 2004; Saldanha, Fl. Karnataka 1: 376. 1996.
- Anon. 1986. The useful plants of India. Publications & Information Directorate, CSIR, New Delhi, India.
- Kayastha BP. 1985. Silvics of the trees of Nepal. Community Forest Development Project, Kathmandu.
இப்பக்கத்தையும் காணவும்
தொகு- இலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர்ப் பட்டியல்
- கொன்றை எதிர் மலைக்கொன்றை (இப்பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள தாவரப்பெயர்களில் ஒன்று.)
- கொன்னை எதிர் மல்லம் கொன்னை(இப்பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள தாவரப்பெயர்களில் ஒன்று.)
புற இணைப்புகள்
தொகு- Indiabiodiversity என்ற இணையத்தின் விவரப்பக்கம்.
- 20மீட்டர்கள் உயரமுள்ள இம்மரத்தின் முழுமையான படத்தையும், விதைகளின் படத்தையும் காணலாம்.
- flowersofindia என்ற இணையத்தில் இம்மரத்தின் மஞ்சரிகளைக் காணலாம்.