பேச்சு:நுழைவு இசைவு

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

விக்சனரியில்.--Kanags \உரையாடுக 06:28, 31 மே 2013 (UTC)Reply

அண்மைய மாற்றங்கள் சுட்டியிலிருந்து துவக்கினேன்.. விக்சனரியில் பல சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் பொருத்தமான கலைச்சொல்லிற்கு மாற்றலாம். முதற்பத்தியில் நுழைவிசைவு, நுழைவாணை எனக் குறிப்பிட்டுள்ளேன்.--மணியன் (பேச்சு) 06:50, 31 மே 2013 (UTC)Reply

நுழைவாவணம்??--அராபத் (பேச்சு) 06:57, 31 மே 2013 (UTC)Reply


நுழைவனுமதி(நுழைவு+அனுமதி) இப்பெயர் சரியானதாக இருக்கும். விசா என்பது ஆங்கிலம் ஆகும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:15, 21 திசம்பர் 2013 (UTC)Reply

@Dineshkumar Ponnusamy: தற்போது அனுமதிச்சீட்டு என மாற்றப்பட்டுள்ளது. இது மிகப்பொதுவானது...திரையரங்குக்குக் கூட அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். எனவே தலைப்பை நுழைவிசைவு என மாற்றுகின்றேன். அனுமதி என்பதும் பிறமொழிச்சொல் என நினைக்கின்றேன். இசைவு அதற்கு நிகரானது.--மணியன் (பேச்சு) 04:24, 5 ஆகத்து 2015 (UTC)Reply
பொதுவாக பல தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் அனுமதிச்சீட்டு என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. புழக்கதிலிருக்கும் சொல்லை விடுத்து புதிதாக சொல்லை உருவாக்குவதில் முனைய வேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:29, 5 ஆகத்து 2015 (UTC)Reply
நுழைவிசைவு என்பதும் ஓரளவு புழக்கத்திலுள்ள சொல்லே.[1] கலைச்சொல் தொடர்பான ஒரு செய்தித்தாள் உரையாடலில் விட்சனரியில் பரிந்துரைத்த நுழைவிசைவு என்ற சொல் பொருத்தமானது என்று ஆசை கூறுகின்றார். செக்மேட் என்று தான் தமிழ்ச் சதுரங்க நூல்களில் எழுதுகின்றார்கள். புழக்கத்திலிருக்கும் சொல் என்பதற்காகப் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துவது எவ்வகையிலும் பொருத்தமற்றது. Checkmate என்பதற்கு இணையாக செல்வா பரிந்துரைத்த இறுதி முற்றுகை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். காப்பி போன்ற சொற்களில் தொடர்புடைய ஏனைய சொற்களைக் குறிப்பதிலுள்ள சிக்கலால், தற்போதைக்கு அவற்றை அவ்வாறே பயன்படுத்தலாம். தனிமங்களின் பெயர்களிலும் இதே சிக்கலுள்ளது. நைத்திரைடு, நைத்திரேற்று, நைத்திரைற்று போன்றவற்றுக்கான கலைச்சொற்களையுங் கருத்திற்கொண்டே, நைதரசன் என்பதற்குத் தமிழ்க் கலைச்சொல் ஆக்கவேண்டும். பல்வேறு நாடுகளிலுள்ளவர்கள் பங்களிக்கும் விக்கி போன்ற கூட்டுமுயற்சிகளில் புழக்கத்திலுள்ள சொல் என்று எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிறமொழிச் சொற்களை முன்னிறுத்தக்கூடாது. இது தமிங்கில நடைக்கும் மணிப்பிரவாள நடைக்குமே தமிழ் விக்கிப்பீடியாவை நகர்த்திச் செல்லும். தேவைக்கேற்பப் புதிய தமிழ்க் கலைச்சொற்களை ஆக்குவது எவ்வகையிலுந் தவறன்று. --மதனாகரன் (பேச்சு) 05:23, 5 ஆகத்து 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுழைவு_இசைவு&oldid=3099756" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நுழைவு இசைவு" page.