'ஓரினச் சேர்க்கை என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் கருத்தளவில் பிழையானது. சமப்பாலுறவு என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் தெளிவான சொல் பயன்படுத்தப்படுவது பொருத்தமானது. கோபி 18:20, 8 டிசம்பர் 2007 (UTC)

//தம் பாலினத்தைச் சேர்ந்த ஒரு நபர் சம பாலினத்தவர் மீது காதல், ஈர்பு ஏற்படுவதைவத தற்பால்சேர்க்கை என அடையாளம் படுத்தி கொள்ளலாம். இதை தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும், ஓரினச்சேர்க்கை என்றும் குறிக்கப்படுவதுண்டு.

தற்பால்ச்சேர்க்கை என்பது மனிதற்கள், விலங்குகள், பறவகைள் உற்பட காலம் தோன்று இயற்கையாக இருந்து வந்துள்ளது என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் உள்ளது, ஆனால் போதுவாக சில மதங்களின் செயற்பாட்டால் சமூகங்களில் வெறுப்பிற்குரிய விடயமாக அணுகப் பட்டது. இன்றளவும் சில இஸ்லாமிய, கிஸ்தவத்தை தனது நாட்டின் முதல் மதமாக ஏற்ற நாடுகளில் தற்பால்சேர்க்கை அவமானகரமான விடயமாக, மற்றும் சட்ட விரோதமானதாக உள்ளது.

செப்டம்பர் ஆறு 2018 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் தற்பால்சேர்க்கையை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது. இலங்கையில் அடிப்படையில் தற்பால்சேர்க்கை, ஒருபாலீர்ப்பு அல்லது தன்பாலீர்ப்பு வழக்குபதிவது அரிது. உச்ச நீதிமன்றதில் தீற்பு இதுவரை வந்த்து இல்லை.// எக்காரணத்துக்காவோ உள் புகமுடியாமல் உள்ளது, நான் முகுந்தன்78, பல பிழை உள்ளபடி உணந்த்தால் மாத்தப்பட்டு உள்ளது!

எப்பொதும் போல் நான் கூறுவதுதான், முடிந்த அளவுக்கு பொது வழக்கை ஆளவும் வினோத் 18:25, 8 டிசம்பர் 2007 (UTC)

சமப்பாலுறவு என்றால் equal sex என்ற பதத்தைதான் தருவதாக இருக்கின்றது, ஒரினச்சேர்க்கை என்றால்

  • ஓர் இனம் - Same Race
  • ஓரினச் - uni sex

என்றும் பதம் தொனிக்கலாம். மேலும் கருத்துக்களைப் பார்க்கலாம். --Natkeeran 18:29, 8 டிசம்பர் 2007 (UTC)

ஓர்+இனம்=ஓரினம். சமப்பாலுறவு என்று சிவசேகரம் பயன்படுத்தியதாக ஞாபகம். அதுவும் மிகப் பொருத்தமாகத் தோன்றாமையாற்றான் இன்னும் தெளிவான சொற் கேட்டேன். நன்றி. கோபி 18:37, 8 டிசம்பர் 2007 (UTC)

தோன்றாமையாற்றான்??? இதற்கு என்ன பொருள் வினோத் 18:49, 8 டிசம்பர் 2007 (UTC)

தோன்றாமையால்+தான் :) கோபி 18:52, 8 டிசம்பர் 2007 (UTC)
இவ்வாறான புணர்ந்த சொற்களை நான் உரைநடையில் பொதுவாக கண்டதேயில்லை. தமிழகத்தமிழில் புணர்ச்சி இவ்வளவு Archaicஆக உரைநடையில் இருப்பதில்லை. மேலும் புணர்ச்சியின் காரணமாக சொல் இறுதியில் ற்,ந்,ஞ் போன்றவை காண்பது இங்கு மிகவும் அரிது. இயல்பு புணர்ச்சியே அங்கு பெருமளவு கையாளப்படுகிறது இதைப் போன்ற பயன்பாட்டை இங்கு தான் அதிகமாக காண்கிறேன்('நான்' அவ்வளவாக பார்த்தது இல்லை, அவ்வளவுதான்) வினோத் 19:05, 8 டிசம்பர் 2007 (UTC)

எனது இத்தகைய பயன்பாடு (புணர்ச்சி, ஈழவழக்கு) பேச்சுப் பக்கங்களிற்றான். நீங்கள் ஆங்கிலம் பயன்படுத்துவது போல :) கோபி 19:08, 8 டிசம்பர் 2007 (UTC)

தலைப்பு குறித்து

தொகு

இந்தத் தொகுப்பில் நற்கீரன் கேட்டிருப்பது சரியென்றே எனக்கும் படுகிறது. தற்பால் சேர்க்கை என்பது பொருளளவில் பொருத்தமாகத் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 14:43, 25 ஆகஸ்ட் 2008 (UTC)

தற்பாற்சேர்க்கை என்பது அங்கே "சேர்க்கை" நிகழ்வதை குறிப்பது போல இருக்கிறது "சேர்ந்திருத்தல்" என்பதும் தமிழில் சேர்க்கை எனப்படுகிறதுதான். புணர்ச்சி இல்லாமல் வெறும் காதலுறவு கொண்டிருத்தல் கூட இந்த வகைக்குள் அடங்கும் என்பதாக நான் கருதுவதால் "சமப்பாலுறவு" என்றே பயன்படுத்துகிறேன். இப்போது இக்கட்டுரைக்கு சமப்பாலுறவாளர் ஒருவரே பங்களிப்பதால் இந்த முடிவினைவினை அவரிடமே விட்டுவிடலாம். --மு.மயூரன் 07:03, 29 ஜூன் 2009 (UTC)

சொற்கள் பரிந்துரைகள்

தொகு

'தற்பால்சேர்க்கை' அல்லது 'ஓரினசேர்க்கை' என்பது வெறும் உடல்ரீதியான உறவை மட்டுமே குறிப்பிடுவதாக கருதபடுகிறது.கீழ்கண்ட தமிழ் சொற்க்களை கருதுமாறு வேண்டுகிறோம்

பால் - Sex

பாலீர்ப்பு - Sexuality

பாலுணர்வு நடத்தை - Sexual behavior

பாலுணர்வு அடையாளம் - Sexual identity

தன்பாலீர்ப்பு (or) ஒருபாலீர்ப்பு - Homosexuality

எதிர்பாலீர்ப்பு - Heterosexuality

இருபாலீர்ப்பு - Bisexuality


நங்கை - Lesbian

நம்பி - Gay

ஈரர் - Bisexual

திருநங்கை - Male to Female Transgender

திருநம்பி - Female to Male Transgender

திருநர் - All inclusive term for Transgender

மாற்றுடை அணிபவர் - Cross dresser


வெளியே வருதல் - Coming Out

மாறுபட்ட பால் அடையாளம் - Alternate gender identity

மாறுபட்ட பாலீர்ப்பு - Alternate sexuality

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் - All inclusive term for Lesbian, Gay, Bisexual and Transgender, Equivalent to LGBT or Queer

கருத்துக்கள்

தொகு

Gay மற்றும் Lesbian ஆகியவற்றிற்குத் தமிழில் நம்பி மற்றும் நங்கை என தமிழில் கொள்ள வேண்டும் என கட்டுரையாளர் கூறுகிறாரா? விளங்கவில்லை.

நம்பி என்ற பெயர் கொண்டவர்கள் உண்டு. நம்பியாண்டார் நம்பி என ஒரு அடியவர் இருந்தார். "மைத்துனன் நம்பி மதுசூதன்" என்று ஆண்டாள் பாசுரம் உண்டு.

சில சமூகங்களில் உறவுப் பெண்ணை நங்கை என அழப்பதும் உண்டு. (http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)

மேலும், cross dessing என்பதற்கு மாற்றுடை அணிபவரா? அப்போது, எல்லோரும் ஒரே ஆடையை அணிந்திருக்க வேண்டுமா? --Tamil sarva 15:46, 6 ஜூலை 2010 (UTC)

நம்பி, நங்கை எனும் சொற்கள், gay என்ற சொல்லைப் போல், வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது உண்மை. ஆனால், இப்போது, அச்சமூகத்தினர், தம் சுய அடையாள்மாக இந்த சொற்களை உபயோகிப்பதால், நாமும் இவற்றை பிரயோகிப்பதே சரி. Kmramki 00:08, 13 சூன் 2011 (UTC)Reply

நலம்

தொகு

தற்பால்சேர்க்கையில் வாய்வழிப்புணர்ச்சி முறை பெரும்பங்குவகிப்பதால், நொய்தொற்றும் அபாயமுன்டு. அவசரமாக முறையற்ற முறையில் ஈடுபடும் தற்பால்சேர்க்கையால், எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் வருகின்றன என்ற கருத்துண்டு. இதுபோன்ற நோய்வருதலை ஆணுறை அணிதல் போன்ற பாதுகாப்பான உடலுறவின் மூலமாக தடைசெய்யலாம்.


இக் கட்டுரையில் தொற்றுநோய்கள் என்ற பகுதி இருப்பது பொருத்தமில்லை. எல்லாவித பாலியல் நடத்தைகளிலும் தொற்று நோய்கள் வரும். --Natkeeran (பேச்சு) 21:32, 2 சூன் 2013 (UTC)Reply

வகை - இந்தப் பகுதி மிகவும் பொருத்தமற்றதாக இருக்கிறது.

தொகு

இந்தப் பகுதி மிகவும் பொருத்தமற்றதாக இருக்கிறது. இக் கட்டுரையை வெறுமே பாலியல் அடிப்படையில் அணுக முடியாது. அடையாள, பாலின அமைவு அடைப்படையில் அணுக வேண்டும். இந்த வகைப்பாடு எங்கும் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இதே மாதிரி வகைப்பாட்ட, ஆண், பெண் என்ற கட்டுரைகளிலும் சேர்க்கலமா ??? --Natkeeran (பேச்சு) 15:12, 17 சூன் 2013 (UTC)Reply

ஆண்விழைவோன், பெண்விழைவோள் என்ற இரு வகையினரை வேண்டுமானால் குறிப்பிடலாம். --Natkeeran (பேச்சு) 15:13, 17 சூன் 2013 (UTC)Reply
தரப்பட்ட ஆதாரத்துக்கு இணைப்பு இல்லை. "மாற்று மருத்துவம்" என்று உள்ளது. எனவே தகுதியான ஆதாரமா என்று உறுதிசெய்ய முடியவில்லை. பொதுவாக தற்பால்சேர்க்கையாலர்களை இவ்வாறு வகைப்படுத்துவதில்லை. ஆகவே அதற்கு ஒரு தனியாக இருப்பது பொருத்தமில்லை. --Natkeeran (பேச்சு) 15:25, 17 சூன் 2013 (UTC)Reply
மாற்று மருத்துவம் இதழ் கீற்று தளத்தில் உள்ளது. தங்களுக்கு ஒப்பவில்லை என்றால் நீக்கிவிடவும். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:31, 17 சூன் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேர்பாலீர்ப்பு&oldid=3440039" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நேர்பாலீர்ப்பு" page.